Thursday, August 15, 2024

சுமை தாங்கி சுமை ஆனதே

 சுமை தாங்கி சுமை ஆனதே

எந்தன் நிம்மதி போனதே

மனம் வாடுதே…


கண்ணீரில் தள்ளாட

என் உள்ளம் திண்டாட

என்ன வாழ்க்கையோ…..


கட்டாந் தரையில்

ஒரு துண்டை விரித்தேன்

தூக்கம் கண்ண சொக்குமே

அது அந்த காலமே


மெத்தை விரித்தும்

சுத்த பன்னீர் தெளித்தும்

கண்ணில் தூக்கம் இல்லையே

அது இந்த காலமே


என் தேவனே

ஓ தூக்கம் கொடு

மீண்டும் அந்த ஓ

வாழ்க்கை கொடு


பாலைவனம் கடந்து வந்தேன்

பாதங்களை ஆறவிடு


கோழி மிதித்து

ஒரு குஞ்சு சாகுமா

அன்று பாடம் படித்தேன்

அது பழைய பழமொழி


குஞ்சு மிதித்து

இந்த கோழி நொந்ததே

இதை நெஞ்சில் நிறுத்து

இது புதிய பழமொழி


விழி இரண்டும் காயும்வரை

அழுதுவிட்டேன் ஆனவரை….

No comments:

Post a Comment

Reached me today…