ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் வழக்கறிஞர்கள் சிலர் கைதாகி இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
இவர்களெல்லாம் எதற்காக சட்டம் படித்தார்கள் என்றே தெரியவில்லை.
கம்பீரமாகக்கருப்பு கோட் அணிந்து உலகளாவிய சட்டங்களை எல்லாம் கற்று தேர்ந்த பல சட்ட மாமேதைகளைக் கொண்டு இந்திய நீதிமன்ற வளாகங்கள் எத்தனையோ வழக்குகளை தீர்த்து வைத்திருக்கின்றது. வழக்கறிஞர்களே பல பொது நல வழக்குகளைத் தொடுத்து மக்களுக்கான நீதிகளை பெற்றுத் தந்திருக்கிறார்கள். அப்படியான சட்ட அறிஞர்களின் மாண்புகளை எல்லாம் தாண்டி இன்றைக்கு இது மாதிரியான குற்றச் செயல்களின் பின்னணியில் வழக்கறிஞர்கள் இயங்கி வருவது தலைகுனிவாக இருக்கிறது. பணம் பதவி லஞ்சம் நில அபகரிப்பு எனும் வகையில் பல அரசியல்வாதிகளும் சாதிய அமைப்பைச் சார்ந்தவர்களும் இதன் பின்னணியில் காரணகாரியமாக இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய ஜனநாயகத்தில் நிகழும் பெரும் வேதனை. வக்கீல் தொழிலுக்குப் படித்தவர் எனச் சொல்லும்போது எந்தக் கட்சிக்காரர் என்ன சாதி என்றெல்லாம் கேட்கிறார்கள்.
இதுவா சட்டப் படிப்பு?
No comments:
Post a Comment