Tuesday, August 13, 2024

எப்போதும்

 எப்போதும்

யாருக்காகவோ பழி சுமந்து
யார் தவறுகளுக்கோ சாட்சியாகி யார் சாபங்களையோ தலைமேல் சுமந்து
யார் பாவங்களுக்காகவோ தலைகுனிந்து
யார் வெறுப்பிற்கோ குருதி சிந்தி யார் கண்ணீருக்கோ விலைகொடுத்து
ரொம்பவே
களைத்துப்போய் விட்டது
ஒரே ஒரு முறை
இந்த சாபங்களுக்கெல்லாம்
நான் தகுதியானவள் தானென
என்னை நானேத் தேற்றிக்கொள்ளவேனும்
எனக்கான பாவங்களை
எனக்கு நானே
இழைத்துக்கொள்வேன்
பின்னும்
என் கரங்கள் செய்தவற்றுக்காய்
என்னை கழுவிலேற்றுங்கள்
ஏற்கிறேன்
பிறர் பாவங்களுக்காக
இனியும்
என்னால் சிலுவைகள்
சுமக்கவியலாது
ஆமின்
-ரிஸ்கா முக்தார்-

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...