Wednesday, August 14, 2024

கி.ராஜநாராயணன்.அண்டெரண்டப் பட்சி.

கி.ராஜநாராயணன்.அண்டெரண்டப்
பட்சி.
--
கி.ரா என்ற கரிசல்காட்டு மோகிக்கு
செக்ஸ் தவிர வேறு எழுதத் தெரியாது
அதைப்பிரதானப்படுத்தினார் என்ற
விமரிசனமும் இருந்தது.தி.ஜானகிரா
னுக்கும் ,கு.ப.ரா விற்கும் எம்.வி.வி
புதுமைப்பித்தனுக்கும் இப்படியான
அவப் பெயர் இருந்தது.செக்ஸ்பற்றி
யன்று.அதன் பிரச்சனைகளைப்பற்றி
அலசினார்."நாம் அதைக்குறித்து ஒரு
கெட்ட எண்ணத்தை விருத்தி செய்து
விட்டோம்.அதைப்பாவச்செயல்என்று
கூச்சலிடப் பழகிக்கொண்டுவிட்டோம்
செக்ஸ் மரணமடையாது".கி.ரா காண்
பதை அப்படியேஎழுதினார்.பிரதியெட
டுப்பது ஒன்றும் கலைசார்ந்ததன்று.
மனித சமூகத்திடம் ஒழுக்கம், சமய
போதனைகள் ஏற்படுத்தியிருக்கிற
கருத்துக்கள் இவை.ஆராதனை மனப்
பான்மையைக் கொண்டு வந்து விட்ட
து.எதையும் ஆன்மிகம் பக்தி இவற்
றோடு இணைப்பது நோய்மை என்றா
ர்.
கி.ரா எழுத்தில் இடம்பெயர்தல் முக்கி யமானது.இதில் பெறுவது அதிகம்.
கி.ரா இதில் இழப்பையே அதிகம்
பேசுகிறார்.கலாச்சாரமாற்றமும் இதி
ல் நேரிடும் என்பதுதான் கி.ராவின்
அச்சமாக இருந்தது.அவர் மனசிலிரு
ருத்து எழுதினார்.
"இசை தெரிந்தவருக்கு ஏதைய்யா தனிமை  அது துணையிருக்கும் என்
பார்.தன்னுடன் கு.அழகிரிசாமியை
ஜோடி சேர்த்துக் கொண்டு சங்கீதத்
தை மணிக்கணக்காக விவாதிப்பார்.
-------
(பேசும் புதிய சக்தி ஆகஸ்ட்24 இதழில்
என் கட்டுரையின் ஒரு பகுதி)
--



 

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...