Wednesday, August 14, 2024

#வயநாடு #மேற்குதொடர்ச்சிமலை_கிழக்குதொடர்ச்சிமலை_பாதுகாப்புகுறித்தஎனது_வழக்கு

 #வயநாடு 

#மேற்குதொடர்ச்சிமலை_கிழக்குதொடர்ச்சிமலை_பாதுகாப்புகுறித்தஎனது_வழக்கு



———————————————————

கேரளா வயநாடு மண்சரிவு பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏறத்தாழ 280க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். இரண்டு கிராமங்களே தரைமட்டமாகிவிட்டன.

இது மாதிரியான மழைக்காலங்களில் ஒரு மாநில அரசு எந்தெந்த குறிப்பிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனித்து ஆலோசித்து அதற்கான முன்னெச்சரிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. 

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இது மாதிரி வயநாடு போன்ற பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரிடர் குறித்து காட்கில் கமிட்டியும் கஸ்தூரிரங்கன் கமிட்டியும் ஆய்வு செய்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட சில முடிவுகளை 2014 இல்  பிரனாய் விஜயன் தலைமையிலான கேரளா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை . வழக்கம்போல கேரள மாநில நலன்களுக்காக அங்கே கிரானைட் வெட்டி எடுப்பது மற்றும் குவாரிகளை ஏற்படுத்துவது என்கிற முறையில் 300க்கும் மேலுமான குவாரிகளை தனியார் வசம் ஒப்படைத்து அந்தப் பகுதியையே தோண்டி எடுத்து பாறைகளற்ற வெறும் மணல் பகுதிகளாக்கி விட்டார்கள்.  கேளிக்கை விடுதிகள், தனியார் ஆக்கிர மிப்புகள் என பல அத்து மீறல்கள்……

அதனாலே பிடிப்பின்றி மழைக் காலங்களில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது.

2014இல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி. மத்திய அரசிடமிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது குறித்த ஆய்வுகளில்  குறித்து கருத்து கூறுமாறு கேட்டபோது அவர்களும் கருத்து ஒன்றையும் கூறவில்லை.

நான்  மேற்கு தொடர்ச்சி மலை , கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு சம்பந்தமாக இதே வயநாடு பகுதிகளுக்கான பாதுகாப்பு நீலகிரி மலை மற்றும் ஆனைமலை போன்றவற்றிற்கான வழக்குகளை பதிவு செய்து அது கடந்த மூன்று வருடங்களாக வழக்கு உச்ச நீதி மன்றத்தில்  ( CA No 1926 /2022 on the file of Supreme Court of India)

போய்க்கொண்டிருக்கிறது. அதுபோக கிழக்கு மலைத் தொடர்ச்சி என்று ஒன்று இருக்கிறது அது பலருக்கும் தெரியாது. அதாவது தெற்கே வல்லநாடு, கழுகு மலைக தொடங்கி அழகர் மலை கொல்லிமலை கல்வராயன் மலை என விட்டுவிட்டு ஒரிசா வங்காளம் வரை சிறு சிறு மலைகள் இருக்கின்றன. மேற்சொன்ன வழக்கோடு இந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தான் அந்த வழக்கை நான் தொடர்ந்து இருந்தேன்.

சென்னை உயர்நீதிமன்றம் சென்னை  தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் போன்றவற்றை நாடி இறுதியாக உச்சநீதிமன்றத்தில்  நான்போட்ட வழக்கு  மூன்று வருடங்களாக நிலுவையில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் மேற்கண்ட அமைப்புகளின் ஆலோசனைகளை எந்த மாநில அரசும் கேட்டுக் கொள்வதாய் இல்லை. தங்கள் மனம் போன போக்கில் இயற்கையைச் சுரண்டுவதும் அதைத் தன் போக்கில் பேராசையுடன் பயன்படுத்தி கொள்வதுமாய் செயல்படும் போது மேற்சொன்ன வயநாடு விளைவுகள் நடக்கத்தான் செய்யும்.

இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. அதை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். இயற்கை சீரழிவு... குறிப்பிட்ட அந்த பகுதியை குடியிருக்க தகுதியற்ற பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்... மலைப்பகுதியில்.நினைக்க முடியாத உயிரிழப்பு... 

இயற்கையின் ஒவ்வொரு விதிகளும் மனித குலத்தின் ஆயத்த வேலைக்காரன், சரியாகப் பயன்படுத்தப்படும்போது நன்மை பயக்கும்,

 ஆனால் புறக்கணிக்கப்படும்போது அழிவுகரமானது.

           - ஜே.ஏ.ஜோன்ஸ்,

முதல் சுகாதாரப்

பொறியாளர், 

மெட்ராஸ் ராஜதானி.

1896 ஆம் ஆண்டு வெளியான சுகாதார நூல் முகப்பு பக்கத்தில்...

"Every law of  Nature is the ready servant of mankind , beneficent when rightly employed ,but destructive when neglected "

          -   J.A.Jones, 

               First SanitaryEngineer ,   

               Madras Presidency

••

‘விதை பிளந்து துளிர் தரும் இயற்கையே மலை பிளந்து உயிர் குடிக்கிறது. வெகு தூரம்  சுமந்து வந்த வலி தீர, குழந்தையைச் சற்று அதட்டி இறக்கிவிடும் தாயைப் போலத் தன்னை எண்ணிக் கொள்கிறது இயற்கை. என்னவொன்று, இந்தத் தாயின் முரட்டுத்தனத்தைத் தாங்க எந்த ஜீவனாலும் இயலாது’.(எங்கோ படித்தது)

••••

நான் 1990இல் வயநாட்டில் ஒருவர் ஏற்பாட்டில் ஒரு வீட்டில் தங்கியிருந்தேன் அந்த வீடு சாலையின் ஓரம் இரண்டு தூண்களை நட்டு அதிலிருந்து ஒரு 40 அடி தள்ளி மலைச்சரிவில் மேலும் இரண்டு தூண்களை நட்டிருந்தார்கள் அதாவது பின்பக்கம் உள்ள ஒரு தூண் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 40 அடி நீளம் மேலே எழுந்து அந்த தட்டு ஏற்படுத்தப்பட்டு அந்த தட்டின் மீது வீடு கட்டப்பட்டிருந்தது இது அந்த கீழே உள்ள மலைப்பகுதிக்கு எவ்வளவு பெரிய அழுத்தத்தை கொடுக்கும் இந்த வீடு என்று ஒருவருக்கும் தெரியாது இதைப்போல பல வீடுகள் கட்டப்பட்டிருந்தன இதுவே அடுக்குமாடி குடியிருப்புகள் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய தொகுப்பு அமைப்புகளாக இருந்தால் கண்டிப்பாக மழை விழும்போது மண் நெகிழிவு ஏற்படும் பொழுது மண் சரிவு ஏற்பட நாமே வழி வகுத்து கொடுத்தது போல் ஆகும் போர்க்கால அடிப்படையில் இதன் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.

#வயநாடு 

#மேற்குதொடர்ச்சிமலை_கிழக்குதொடர்ச்சிமலை_பாதுகாப்புகுறித்தஎனது_வழக்கு

#westernghats

#easternghats

#vayanad

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

1-8-2024

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...