Wednesday, August 14, 2024

#ஷேக்முஜிபுர்ரகுமான்

#ஷேக்முஜிபுர்ரகுமான் 
#Bangabandhu 
#SheikhMujiburRahman 
#Bengaladrsh
——————————————————-
இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் உதவியால் 1971 இல் பாகிஸ்தானில் இருந்த கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் டாக்காவைத் தலைநகரா
கக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஷேக் முஜிபுர் ரகுமான் அவர்களது (Sheikh Mujibur Rahman (17 March 1920 – 15 August 1975), popularly known by the honorific prefix Bangabandhu) தலைமையில் வங்கதேசம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்து தனிச் சுதந்திர நாடானது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.பாலஸ்தீனத்தின் யாசர் அரபத் போல வங்கதேசத்தில் ஷேக் அப்துல் ரகுமான் கொண்டாடப்பட்டார். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் கலைஞரைக் கூட அரசியலைப் பொறுத்தவரை அவரும்  தமிழகத்தின ஷேக் அப்துல் ரகுமான் தான் என்று  திமுகவினர குறிப்பிட்டார்கள்.
அந்த வகையில் வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் முஜிபுர் ரஹ்மான். இடையில் அவரை படுகொலை  செய்யப்பட்டு 49 ஆண்டுகள் ஆகிறது. இப்போது வங்கதேசத்தில் என்ன நடக்கிறது? பிரச்சனை என்னவென்று கேட்டால் இட ஒதுக்கீடு அது இது என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்காக அந்த நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த அதையே சுதந்திரமான தனி நாடாக நிறுவிய பங்க பந்த் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் சிலையை கலவரக்காரர்கள் மாணவர்களும் சேர்ந்து  இன்று உடைப்பது என்ன வகையில் நியாயம்?
அவரது மகள் ஹசினா மீது உள்ள கோபத்தை நாட்டின் தந்தையாகிய முஜிபுர் ரஹ்மான் சிலை மீதா காட்டுவார்கள். அது ஒரு வகையில் வங்கதேசத்தின் வரலாற்றை அழிப்பது ஆகாதா? 
ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட முஜிபுர் ரஹ்மான் அவர்களின் படங்களையும் சிலைகளையும் உடைப்பதற்கு  என்ன காரணங்கள் இருக்கிறது. மட்டுமில்லாமல் காட்டு வெள்ளத்திற்கு கரையும் இல்லை எந்த நிலையுமில்லை என்பதாக 
அங்கே கலவரக்காரர்கள் ஈடுபடுவது ஜனநாயக மாண்புகள் மற்றும் உலக அமைதி இன்னும் பிற தேசங்களின் தத்துவ இறையாண்மை அனைத்திற்கும் கேடாகத்தான் முடியும். போகிற போக்கில் கண்மூடித்தனமாக அங்கிருக்கும் இந்து கோயில்களையும் அதன் சிலைகளையும் உடைத்துக் கொண்டு செல்கிறார்கள். நேற்று சிலை உடைத்து ஹசினா உடைகளை காட்டி பேரூந்தை எரித்து கலவரம் செய்வர்கள் திடீர் என அங்கு போக்கு வரத்தையும் சரி செய்கிறார்கள் என்றால் என்ன சொல்ல
நிலமை முற்றிலும் மோசமாகி இருக்கிறது வங்கதேசத்தில்!
அங்கு நடக்கும் உள்நாட்டு கலவரம் அதற்கான உண்மையான பிரச்சனைகள் யாவை என்பது  உலக அளவில் வெளிப்பட வேண்டும்.இந்தியாவின் அண்டை நாடு என்பது மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகிறது.
#வங்கதேசம்
#Bangladesh
#ஷேக்முஜிபுர்ரகுமான்
#shaikhhasina
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-8-2024.
.




No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...