Wednesday, August 14, 2024

#சில_பார்வைகளும்அனுபவங்களும்

 #சில_பார்வைகளும்அனுபவங்களும்

———————————————————



கொஞ்சம்  புதிராகவே எளிதாக இல்லாமல் இருந்துபாருங்கள்.

எல்லாவற்றிற்க்கும்  உங்களை தேடுவார்கள்.

தெளிவாக உதவியாக இருந்து பாருங்கள்.தேவைக்கு மட்டுமே தேடுவார்கள்

இது தான் உலகம்!

ஆசை இல்லா மனிதர் தன்னை

துன்பம் எங்கே நெருங்கும்?

பொன்னில் இன்பம் புகழில் இன்பம்

என்றே நெஞ்சம் மயங்கும்! 

வாழ்க்கையை உள்ளே, வெளியே என்று கருதாமல், ஒரே இயக்கமாக, பிரிக்கப்படாத இயக்கமாக பார்க்க வேண்டும். அப்படி செய்தால், "செயல்" என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கும்.

நன்மை என்பது தீமைக்கு எதிரான நிலை அல்ல. நன்மையை தேட முடியது. துன்பம் இல்லாதபோதுதான் நன்மை மலரும். 

இதைப் பற்றிய புரிதல்தான் நுண்ணறிவு. இந்த நுண்ணறிவுதான் தான் துக்கம், வன்முறை மற்றும் சண்டை சச்சரவுகள் அனைத்தையும் நீக்குகிறது. 

ஒரு ஆபத்தைக் கண்டு அதிலிருந்து உடனடியாக வெளியேறுவது போன்றது இது.

சிந்தனை என்பது நுண்ணறிவு அல்ல. நுண்ணறிவு சிந்தனையைப் பயன்படுத்தக் கூடும்; ஆனால் சிந்தனை, இந்த நுண்ணறிவை தனது சுயநலத் தேவைகளுக்காக கைப்பற்றி கட்டுப்படுத்த திட்டமிடும் போது, ​​அது தந்திரமாகவும் அழிவுகரமானதாகவும் மாறும்.

இந்த நுண்ணறிவு உங்களுடையதும் அல்ல என்னுடையதும் அல்ல. 

இது அரசியல்வாதிக்கோ, ஆசிரியருக்கோ, மீட்பருக்கோ சொந்தமானது அல்ல. 

இந்த நுண்ணறிவு அளவிட முடியாதது. 

இது உண்மையில் ஒன்றுமில்லாத நிலையாகும்.

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 

10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!

இன்னொருவன் 

30 வயதில் திருமணம் செய்கிறான். 

1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!

ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால், 

5 வருடங்களுக்குப்

பின்பே தொழில் கிடைக்கிறது...!

இன்னொருவன் 

27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!

ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...!

இன்னொருவர் 

50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார். 

90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!

நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை. 

எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!

அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில், 

உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்

கொண்டிருப்பான்.

உனக்கு விதிக்கப்பட்டது வேறு..

அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..

ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!

உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல, 

உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!

நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!

நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே...!

ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்...!

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

7-8-2024.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...