இதுThe Hindu Ramakrishnan Thyagarajan பதிவு…..
சென்ற வாரத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஒன்று, உச்சநீதிமன்றம் பட்டியிலினத்தவருக்குள் உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கின்ற வகையில் அந்தப் பிரிவினருக்குள் உப பிரிவுகள் மாநிலங்கள் வைத்துக்கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டது. மேலும், மூன்று நீதிபதிகளின் தங்களது கருத்தாக, பட்டியிலனத்தினருக்குள் உள்ள "கிரீமி லேயரை" (முன்னேறிய பிரிவினர்) அகற்றவேண்டும் என்று கூறியுள்ளனர்.
தற்போதைய நிலை சிறப்பாக இருக்கிறதோ இல்லையோ, அதுவே தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஏற்று கொள்ளமாட்டார்கள். பட்டியிலனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை "ஸ்டேடஸ் கோயிஸ்ட்"-கள் விரும்பாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
இரண்டாவது நிகழ்வு, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பதிலளித்த தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொடுத்த பதிலில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான உள் ஒதுக்கீட்டில் வன்னியர்கள் எவ்வாறு பயன்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்தை முன்னிருத்தப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் இட ஓதுக்கீடாக இருக்கட்டும் பட்டியிலனத்தரின் இட ஓதுக்கீடாக இருக்கட்டும், முழுமையான தரவுகள் பொதுத் தளத்தில் இல்லை. இட ஒதுக்கீட்டின் ஜாதி வாரியாக பலனை யாரெல்லாம் பெற்றிருக்கிறார்கள் என்ற தரவுகள் வெளியில் வரும்பொழுதுதான், இம்மாதிரியான விஷயத்தில் அனைவருக்கும் தெளிவு கிடைக்கும்.
No comments:
Post a Comment