Thursday, May 21, 2026

இன்றைய (24-3- 2026) தினமணியில் எனது பேட்டி

 இன்றைய (24-3- 2026) தினமணியில் எனது பேட்டி

—————————————————— திருநெல்வேலி, மார்ச் 23: பாஜக மதவாதக் கட்சியல்ல. அதைத் தொடங்கியவரே முஸ்லிம் நீதிபதிதான். தமிழக பாஜகவின் முதல் தலைவரே ஒரு கிறிஸ்தவர்தான் என்றார் வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இது தொடர்பாக அவர் தினமணிக்கு அளித்த சிறப்பு பேட்டி: தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது? தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், பாஜகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லையே? கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வெற்றி வாய்ப்பு வித்தியாசம் 3 சதவீதம்தான். இத்தனைக்கும் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 12 சதவீத வாக்குகளை பெற்றது. இதிலிருந்தே எந்தளவுக்கு திமுகவின் நிலை இருக்கிறது என்று தெரியும். மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக நின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டன. தமிழகத்தில் ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தது. ஆனால், இன்றைக்கு தடயமே இல்லாமல் போய்விட்டது. அதேநேரத்தில் இப்போது எல்லா ஊர்களிலும் பாஜக கொடி பறக்கிறது. பாஜக 1998}க்குப் பிறகு தமிழகத்திற்குள் வந்த கட்சி அல்ல. 1970}களிலிருந்தே ஜனசங்கம் இங்கே வலுவாக இருந்தது. 1972}இல் திமுக ஆட்சியில் சென்னை மேயராக சுழற்சி முறையில் இல்லாமல் காமாட்சி ஜெயராமனை மேயர் பதவியில் அமர்த்தியபோது அதை எதிர்த்து ஜனசங்கம் போராடியது. 1975}இல் மத்தியில் காங்கிரஸýம், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தது. அப்போது கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அதனை எதிர்த்து வாஜ்பாய் கர்ஜித்தார். இதை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதற்கான ஆவணங்களைத் திரட்டுவதில் நானும் பங்களித்துள்ளேன். கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவின் பங்களிப்பு மகத்தானது. தொகுதி பங்கீட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அணுகுமுறையை பற்றிய உங்கள் பார்வை... அன்றைய திமுக அண்ணாவாலும், கருணாநிதியாலும் பாதுகாக்கப்பட்டது. கருணாநிதியிடம் 'நுண்மான் நுழைபுலம்' இருந்தது. அவர், பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களிடம் ஆலோசனை கேட்பார். ஏன் எங்களிடம்கூட ஆலோசனை கேட்பார். ஆனால், ஸ்டாலினுக்கு அவருடைய மருமகன் சொல்வதுதான் வேதம். திமுகவுக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள், சிறை சென்றவர்கள் இப்போது புறக்கணிக்கப்படுகிறார்கள். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் திமுகவுக்கு வந்ததும் அவர்களுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் அளிக்கிறார். திமுகவுக்காக உண்மையாக உழைத்தவர்கள் இப்போது அடையாளமே இல்லாமல் போய்விட்டனர். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற விமர்சனம் தொடர்கிறதே... பாஜகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று சித்தரிப்பது தவறு. தமிழக பாஜகவின் முதல் தலைவரே ஜான் என்ற கிறிஸ்தவர் தான். 1980}களில் ஜனசங்கத்தின் தொடர்ச்சியாக பாஜகவைத் தொடங்கி வைத்தவர் எம்.சி. சாக்லா என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய நீதிபதி. சிக்கந்தர் பக்த் பாஜகவின் உயர் பொறுப்பிலும், மத்திய அமைச்சராகவும் வாஜ்பாய் காலத்தில் இருந்தார். இவர், ஸ்தாபன காங்கிரஸிருந்து பாஜகவுக்கு வந்தவர். அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் தலித்துகளை மதமாற்றம் செய்தபோது வாஜ்பாய் நேரடியாக அங்கு வந்து பார்வையிட்டார். மண்டைக்காடு கலவரங்களை தீர்க்க பாஜக நடவடிக்கை எடுத்தது. சுனாமி தாக்கியபோதும், ஈழத்தமிழர் பிரச்னை முற்றியபோதும் வாஜ்பாய் போன்ற பாஜக தலைவர்கள் ஆதரவுக் குரல் கொடுத்தார்கள். பிரதமர் மோடி மத நல்லிணக்கத்தையே விரும்புகிறார். அவர் ஆட்சியில் பெரிய மதக்கலவரங்கள் எதுவும் இதுவரை இல்லை. கோயில்கள், மசூதி, தேவாலயங்கள், குருத்வாராக்களில் அவரவர் மதப்படி வழிபாடு நடைபெற வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. அதனால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக இருக்கிறார். அன்றைய தேர்தலுக்கும் இன்றைய தேர்தலுக்குமான வித்தியாசங்கள் என்ன? "1980, 1990}களில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது, கிராமங்களுக்கு வாக்கு கேட்டு சென்றபோது, அங்குள்ள மக்கள் எங்களுக்கு கவரில் பணம் வைத்து தேர்தல் செலவுக்கு கொடுத்ததுண்டு. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. காந்தி நேரில் வந்து வாக்கு கேட்டாலும் அவருக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. ஆனால் 'காந்தி நோட்டு' கொடுத்தால் வாக்களிப்பார்கள்.1/3

No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...