Thursday, May 21, 2026

மர்மம்தான் என்ன.

 மர்மம்தான் என்ன. இன்றைக்கு வரைக்கும் அந்த மர்மத்திற்கு விடை இல்லை. இணைத்து வைத்தவன் இங்கிருக்க கூட்டணியில் தவறாமல் மதிமுக எப்படியும் இடம் பெற்றுவிடுகிறது. . இந்தக் கூட்டணியை 2001 இல் நான் சந்திக்க வைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த போது இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு சுத்தமாக அது பிடிக்கவில்லை. அன்று மதிமுகவுக்கு 21 சட்டமன்ற தொகுதிகள் என கலைஞர் வைகோ ஒப்பந்தம் கையெழுத்தானது . தீடிர் என வைகோ சங்கரன்கோவில், சங்கிரி, சேரன்மாதேவி தொகுதிகளை பிரச்சனைகளை சொல்லி தேவையில்லாமல் ஏதோ தவறான நோக்கில் ஒப்பந்த்தை முறித்தார்.

பின், திண்டுக்கல் மண்டல திமுக மாநாட்டில் கலைஞரை பார்த்து வைகோ அழுத்து ஏன் என தெரியல. இப்படி பல சம்பவங்கள் உண்டு. இப்படி அழுவம் கலைஞர் மீதுபாசம் என்ற நவரசமான நிகழ்வுகள்….பின கலைஞரின் கோபாலபுரத்துக்கு எங்கள் சாம்பல கூட போகாது என வைகோ சொன்னார். இப்படி பல எதிர் மறை வேடிக்கை காட்சிகள். பின்பு, என் முயற்சில் கலைஞரை வைகோவிடம் பேச வைத்து 2016 சட்ட மன்ற தேர்தலில் திமுக- மதிமுக கூட்டணி என்ற நிலையில் இருந்த போதும் தீடிர் என மக்கள் நல கூட்டணி என்று வைகோ 2001 மாதிரி திரும்பவும் வெட்டி விட்டு சென்றார். இன்றைய முதல்வர் ஸ்டாலினை வைகோவின் அண்ணா நகர் வீட்டிற்க்கும் கலைஞரின் விருப்படி அழைத்தும் சென்றேன். இருந்தும 2009 ஈழப்பிரச்சனை, வாரிசு அரசியலுக்கு எதிரான நான் திமுக கூட்டணியில் இருக்க முடியது என்று கூறி தன் லாபத்துக்கு வெளியேறினார். அப்போது நான்தான் வைகோவின் தப்பு தாளங்களுக்கு கலைஞரின் கோப பார்வைக்கு ஆள் ஆனேன். ஸ்டாலினும் என்னை குத்தி காட்டியதும் உண்டு. வாரிசு அரசியல் கூடாது. கட்சியின் முடிவுகளுக்கும் வாரிசுகளுக்கும் சம்பந்தமில்லை. கட்சிக் கொள்கையின் அடிப்படையிலான ஆட்சி முறை வேண்டும் என்றெல்லாம் உரக்கப் பேசி மேடைகளில் முழங்கிய வைகோ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து கூட்டணியில் எப்படி மகனுக்கு மட்டும் இடம் கேட்டு அதைப் பெற்றுவிடுகிறார். மாமனிதர் வைகோ அந்த மாமனிதர் படத்தில் எனக்கு இடமில்லை. ராமாயணம் பேசுவார் மகாபாரதம் பேசுவார் கிரேக்க தத்துவங்களை எல்லாம் பேசுவார். பேசியவர் இன்று அந்தப் பங்காளிகளுக்கு அருகில் போய் வசதியாக அமர்ந்துகொண்டார். வளரட்டும் வாழட்டும் வைகோவின் குடும்பங்களும் வாரிசுகளும் பிள்ளைகளும் குட்டிகளும். அன்று வாரிசு அரசியல் எதிர்ப்பு இன்று வாரிசு அரசியல் ஆதரவு “தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்” இப்படி எனக்கு பல வாழ்க்கை பாடங்கள வாழ்க்கையில் எதுக்கும் கவலைப்படாதீங்க. இழந்தது ஏதாவது ஒரு ரூபத்தில் இன்னும் அழகாக உங்களுக்கு திரும்பி வரும். இப்படி; நமது களங்கள் - தளங்கள் இழந்த உழைப்புகள், சொத்து, பணம், உறவுகள், வசதிகள் இழந்தது எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக திரும்பி வரும்என்று உறுதியோடு நம்புங்கள். நிம்மதி கூட திரும்பி வரும். Most precious. இழந்ததை நினைத்து வருந்தி கொண்டே இருந்தால், சிந்தனைகள் தெளிவாக இருக்காது. இலக்கு புரியாது. மேலும் மேலும் இழப்புதான். நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று கூறுவார்களே. அது உண்மையான கூற்று போனது போச்சு. இனி நடக்கறதை நல்லதா இருக்கட்டும் என்று மனதை திருப்பி விட்டால், நிறைய சந்தர்ப்பங்கள் நமக்கு தென்படும். ஆழ்மனதிலே இந்த Knot ஐ நன்றாக பதிய வையுங்கள். எதை இழந்தோமே, அதைவிட பல மடங்கு அழகாக சிறப்பாக திரும்பி நமக்கு வரும். இது பலர் அனுபவம். நம் வாழ்க்கையையே திரும்பி பார்த்தால், இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாகஇருக்கும்.விட்டதை விட சிறப்பாக பிடித்து இருப்போம். திரும்ப திரும்ப எண்ணும் எண்ணங்கள் செயலாக கண்டிப்பாக மலரும். ஆனால் இவரின் இன்றைய நிலை⁉️2/2 #தகுதியேதடை #திமுக #dmk #கலைஞர் #Kalaignar #Stalin #ஸ்டாலின் #அதிமுக #ஜெயலலிதா #admk #Jayalalitha #mdmk #vaiko #மதிமுக #வைகோ #TamilNaduElections #tamilnadupoltics #தமிழகதேர்தல்கள் #தமிழகஅரசியல் #சிலகசப்பான_அரசியல்உண்மைகள் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 22-3-2026 படம்: 1)1998 2)1999




No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...