நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் இதுபற்றிப் பேசினார்கள். தட்சிணப் பிரதேசம் என்பதை ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் கனவாக முன்வைத்தார்கள். நேருவுக்கும் இதுவொரு நல்ல யோசனையாகத் தெரிந்தது.
காங்கிரஸ் தவிர்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ராஜாஜியின் தட்சிணப் பிரதேச ஐடியாவுக்கு எதிராக இருந்தார்கள். முன்னர் சென்னை மாகாண முதல்வராக வரவேண்டியது யார் என்பதில் ஒரு பெரும் போட்டி எழுந்தது. தமிழரான காமராஜரா அல்லது தெலுங்கரான சஞ்சீவ ரெட்டியா என்பதில் போட்டி. இருபக்கமும் சம பலத்தோடு மோதிக்கொண்டதால் டெல்லியின் தலையீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இருதரப்புக்கும் உகந்தவரான ராஜாஜி, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காட்சி திரும்பவும் அரங்கேறியது. தட்சிணப் பிரதேசம் அமைந்தால் அனைவருக்கும் உகந்த ஒரே தலைவராக ராஜாஜி மட்டுமே இருக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ராஜாஜி எதிர்ப்பாளர்கள் களத்தில் சுறுசுறுப்பாக இறங்கினார்கள். அவர்களோடு தானும் சேர்ந்து இயங்க வேண்டும் என்று பெரியாருக்கு எண்ணம் இருந்தாலும் அதுவரை பேசி வந்த திராவிட நாடு கனவு தடுத்தது. தட்சிணப் பிரதேசம் என்பது திராவிட நாடுதானே! சென்னையில் மட்டுமல்ல ராஜாஜிக்கு எதிராகத் தென்னிந்தியாவில் ஒரு பெரும் எதிர்ப்பு அலையே எழுந்தது. தமிழ்நாட்டில் ஜீவா, ம.பொ.சி உள்ளிட்ட இடதுசாரிகளும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் கேரளத்தின் அச்சுதமேனன், ஏ.கே கோபாலன் உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிராக இருந்தார்கள். ஏன், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயேகூட ராஜாஜிக்குக் கணிசமான எதிர்ப்பு இருந்தது. அது காமராஜர் வடிவில் இருந்தது. நேருவையோ ராஜாஜியையோ வெளிப்படையாக எதிர்த்துக்கொள்ளாமல் அதே நேரத்தில் மறைமுகமாக ராஜாஜி எதிர்ப்பு யுத்தத்தை காமராஜர் நடத்திக் கொண்டிருந்தார். சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா தனியாகப் பிரிக்கப்பட்டதிலிருந்து பெரியாரும் நிறையவே மாறியிருந்தார். திராவிட நாடு என்பது இனி சாத்தியமில்லை. திராவிட நாடு என்பதிலிருந்து தமிழ் நாடு என்கிற நிலைக்கு மெல்ல தள்ளப்பட்டுக்கொண்டிருந்தார். ஆந்திரர், கர்நாடகத்தவர், கேரளத்தவர் இன உணர்ச்சியில்லாதவர்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது என்றார். தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு பெரியாரின் கருத்தில் உடன்பாடில்லை என்றாலும் சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்றே பெயர் சூட்டிவிடலாம் என்று பெரியார் பேசியதால் நம் பக்கம்தான் நிற்கிறார் என்கிற முடிவுக்கு வந்தார்கள். ராஜாஜியோ உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். தட்சிணப் பிரதேசம் தயாராகிவிட்டது. இனியும் மொழிவழி அரசு பற்றிப் பேசுபவர்கள், காட்டுமிராண்டிகள் என்றார். அதுவரை பெரியார் மட்டுமே அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். இப்போதோ, பெரியாரால் பேச முடியாத நிலை. எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்த யாருமில்லாத நிலையில்தான் ம.பொ.சி களத்தில் இறங்கினார். குறுகிய காலத்திற்குள் பல கட்சித்தலைவர்களைத் தொடர்பு கொண்டார். அதே நேரத்தில் தட்சிணப் பிரதேசத்திற்கு ஆதரவு தேடி ராஜாஜியின் சிஷ்யர்கள் பெங்களூரில் முகாமிட்டார்கள். தட்சிணப் பிரதேச அமைப்பு, எல்லை பற்றியெல்லாம் முடிவு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கூடினார்கள். அதில் காமராஜரும் கலந்து கொண்டார். ஜனவரி 27, 1956. ஜீவா, பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், மா.பொ.சி, டி.கே சண்முகம், பி.டி. ராஜன், அண்ணாதுரை, நெடுஞ்செழியன் என ஏகப்பட்ட பேர் சென்னையில் கூடினார்கள். ஆனந்த் தியேட்டர் உரிமையாளரும் பின்னாளில் அக்னி நட்சத்திரப் படப் புகழ் வில்லனுமான ஜி. உமாபதியின் வீட்டில்தான் கூட்டம் நடந்தது. தட்சிணப் பிரதேசத்தை நிராகரித்து மொழிவழி மாநிலம் அமைப்பது, மதராஸ் மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிடுவது என்று காமராஜர் அரசை வலியுறுத்துவது என்று முடிவு செய்தார்கள். இதை முன் வைத்து தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு செய்வதென்றும், சென்னையில் ஒரு மெகா பொதுக்கூட்டம் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது. பெரியார் கலந்துகொள்ள வேண்டும் என்றார்கள். ஆனால், பெரியார் மறுத்துவிட்டார். அவசரப்படாமல் இருந்தால் காமராஜரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்பது பெரியாரின் நம்பிக்கை. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்துவிட்டாலே போதும். அதை காமராஜர் செய்துவிடுவார். முதல்வராக காமராஜர் இருக்கும்போது எதற்கு கவலைப்படவேண்டும் என்றார் பெரியார். பிப்ரவரி 19, மாலை 4 மணி. திருவல்லிக்கேணி. தீவுத்திடலில் ஆரம்பித்த ஊர்வலம் புறப்பட்டு திருவல்லிக்கேணி வழியாக மவுண்ட்ரோடை நோக்கி வந்து கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது காவல்துறை. காமராஜர் அரசைக் கண்டித்துக் கோஷமிட்ட கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை அடித்து விரட்டுவதில் காவல்துறை மும்முரமானது.
Subscribe to:
Post Comments (Atom)
#தமிழகத்தில்பாரதியஜனதா
#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment