Thursday, May 21, 2026
#சிலகசப்பான_உண்மைகள்
———————————————————
#மனதிலுறுதிவேண்டும்,
#வாக்கினிலேயினிமைவேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்-#பாரதி
••••
கோபப் படும் நேரத்தில் கோபப் படவில்லை …. அந்த நிலையில் பேசவில்லை என்றால் கோமாளிகளாக ஆக்கிவிடுவார்கள் நம்மை..
இந்த பதிவு ஆதங்கத்தில் எழுதப்பட்டது அல்ல
ஒவ்வொருவரும் சுயநல வாழ்கையில் எதையோ நோக்கி ஓடுராங்க....... தொடங்கிய இடமும் தெரியல சேர போர இடமும் தெரியல..
இது உண்மைகளை சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடனான மதிமுகவின் கூட்டணியில் வடசென்னை தொகுதியை எனக்கு என்று ஒதுக்கினார்கள். அப்போது அதிமுக சார்பாக வட சென்னை தொகுதிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை மாற்றி அந்த இடத்தை எனக்கு தருவதாகப்பேச்சு.
ஜெயலலிதா அவர்களும் வட சென்னைத் தொகுதியை கே எஸ் ராதாகிருஷ்ணனுக்கு கொடுத்துவிடுங்கள் என்று சொல்லித்தான் வைகோவிடம் தொகுதிப் பங்கீட்டை ஒப்படைக்கிறார்.
அதன்பின்தான் வைகோவின் கோளாறு மனம் வேலை செய்கிறது. முடிவில் ஒரே சாதியைச் சார்ந்த நாயுடுகள் இருவருக்கு எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும் என்று கேட்டு எனக்கான அந்த வாய்ப்பை வைகோ மறுத்தும் ஒத்தியும் வைத்தார். ஒரே சாதி என என்னை ஒதுக்கிய வைகோ தன் மகனையே கொண்டு வந்து விட்டார். இதில் உள்ள logic - அவரின் நேர்மை புரியல
தகுதியும் திறமையும் முக்கியமா? சாதி முக்கியமா? ஒரே சாதி என்று ஒருவரை தள்ளி வைக்க முடியுமா? இப்படியான அற்பத்தனமான முடிவுகள் என சிலர் அப்போது இது குறித்து கேட்டதுண்டு. மதிமுகவிலிருந்ததை நான் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
இது உண்மையில் நடந்தது. மிக சத்தியமாக என் தாய் மீது ஆணையாக நடந்தது.
இதற்கு சாட்சியாக வெறும் சாட்சியாக மட்டும் இல்லாமல் மனசாட்சியாக இருந்தவர்கள் இருக்க வேண்டியவர்கள்
மதுராந்தகம் ஆறுமுகம்,எல் கணேசன் முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன் செஞ்சி ராமச்சந்திரன்
பத்திரிகையாளர்கள் பி டி ஐ ராமசாமி அன்றைய இந்து ஆங்கில பத்திரிக்கையின் கணபதி, தினமணி இன்றைய ஆசிரியர் கே. வைத்தியநாதன், கல்கிப் பிரியன் மை பா நாராயணன் போன்றவர்கள் பலரும்தான்.
அதற்குப் பின் வைகோ நடந்தது கொண்டதெல்லாம் மறக்கவோ முடியாத செயல்பாடுகள். நான் கேட்கிறேன் அதே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களை இருவரை வேட்பாளர்களாக திண்டிவனத்திலும் என்னிடம் பறித்த வடசென்னையிலும் போட்டியிட எப்படி வாய்ப்புத் தந்ததாராம் அந்த நல்ல வைகோ.
அதேபோல் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே சாதியைச் சேர்ந்த இருவரைப் பழனியிலும் திருச்செங்கோட்டிலும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட வாய்ப்பு தந்ததும்தான் வைகோவின் அடிப்படை நேர்மையா?
ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு. அப்படிப்பட்டவர் தான் வைகோ.
1998 இல் நாடாளுமன்ன வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்தவுடன் ஜெயலலிதா அவர்கள் என்னை அழைத்து வடசென்னை தொகுதியை உங்களுக்குத்தானே கொடுக்கச் சொல்லி வைகோவிடம் சொன்னேன். அதற்காகத்தானே ஜெயக்குமாரை கூட வேறு தொகுதிக்கு மாற்றினோம். ஏன் உங்கள் பெயர் இல்லை.
எனக்கு உங்களைத் தானே நன்றாக தெரியும் . ஈழ விவகாரத்தில் பிரபாகரனை என்னிடம் அழைத்து வந்து சந்திக்க வைத்தீர்கள் ! உங்களுக்கு அந்த தொகுதியை ஒதுக்குவார் என்று தான் நான் கூட்டணி பேச்சு வார்த்தையில் குறிப்பிட்டு இருந்தேன்! ஏன்அவர் உங்களுக்கு கொடுக்கவில்லை? என்று கோபமாக் கேட்டார் நான் வேறு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொன்னேன்.
இதுகுறித்து அதிமுக தொகுதி பேச்சு வார்த்தை குழு தலைவர்,தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா அப்போது அதிமுகவில் பொருளராக இருந்தார் பிறகு திமுகவிற்கு வந்தார் . அவர் என்னிடம் “அம்மா தனிப்பட்ட முறையில் மிகவும் சங்கடப்பட்டார்” நீங்கள் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று தானே விருப்பப்பட்டு அந்த தொகுதியை விட்டுக் கொடுத்ததாக சொன்னார்! பிறகு ஏன் இப்படி ஆகிவிட்டது உங்களுக்கு ஏன் அந்த சீட் கொடுக்கப்படவில்லை எனக் கேட்டார்.
அப்போது சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள ப்ரீஸ் ஹோட்டலில் ரம்ஜான் விருந்துக்கு வந்த ஜெயலலிதா அங்கே வந்திருந்த வைகோவுடன் முகம் கொடுத்து கூடப் பேசாமல் கொண்டு போய்விட்டார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பிரச்சாரத்திற்கு சென்ற ஜெயலலிதா அவர்கள் வடசென்னை பிரச்சாரத்திற்கு மட்டும் வரவே இல்லை.
இதற்கும் பிறகு 2001 இல் திமுக மதிமுக கூட்டணி அமைய வைகோவை கலைஞருடன் பல பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் நான் சந்திக்க வைத்தேன். அச்சந்திப்பு நிறைவேறிய போது நடந்த ஒப்பந்த அளவுகள் என்ன அதன் பின் வைகோ தன்னிச்சையாக வெட்டிய1/2
Subscribe to:
Post Comments (Atom)
#காவிரி....
#காவிரி .... #ஆடிப்பெருக்கு நீராடையின்றி நிர்வாணமாய்க் காவிரி தாயின் ரணங்கள் ; மேலாடைத் தருவாளா மேகத்தாய்?
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment