Thursday, May 21, 2026
#ஸ்டாலின்திமுக
ஸ்டாலின் காலத்துத் திமுகவினரின் இன்றைய நிலை இந்திய வரலாற்றின் அரசியலின் படி எவ்வளவு கேடுகெட்ட மோசமான நிலையை அடைந்திருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கிறேன்.
1949 ற்கு முன்பிருந்து தொடங்கிய நீதிக்கட்சி பிராமணர் அல்லாதோர் சங்கம் மற்றும் அதன் பிறகு பெரியாரின் திராவிட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமாகி அதாவது பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து விலகி அண்ணா ஆரம்பித்து இயக்கிய திராவிட அரசியல் கட்சி1967 இல் காங்கிரஸுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி ஆட்சியைப் பிடித்தது அந்த வகையில் காங்கிரஸின் அரசியல் வரலாற்றைத் தமிழகத்தில் முடித்தும் வைத்தது.
அடப்பாவிகளே உங்களை ஒடுக்குவதற்கு இவ்வளவு எதிர்வினை செய்த காங்கிரசை அல்லது அதை வெளியேற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் வெற்றி அடைந்த அண்ணாவுக்குப் பிறகு கலைஞருக்கும் பிறகும் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இந்த காங்கிரஸை மீண்டும்தூக்கி வைத்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. வெக்கங்கெட்ட மன்னன் தன் தந்தையை புதைப்பானாம்.
இந்திரா காங்கிரஸின் மிசா காலத்தில் துன்புறுத்தப்பட்டு சிறையில்அடித்துக் கொல்ல முயன்ற ஸ்டாலினை காப்பாற்றுவதற்காக ஒரு திமுக வின் ஒரு தொண்டர் ஸ்டாலின் மீது கவிழ்ந்து படுத்து அவரை வயிற்றுக்கு கீழே போர்த்தி அடிவாங்கி இறந்தும் போனார். அதனுடைய விளைவுகளை இன்றும் அவர் உடல் ரீதியாக சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வெட்கங்கெட்ட நிலையில் ஸ்டாலின்தான் இவ்வளவு துன்பங்களுக்கும் பிறகும் மானங்கெட்ட முறையில் காங்கிரஸைக் காப்பாற்றுகிறார்.
பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் நுழைந்து விடக்கூடாது சரிதான் இருக்கட்டும். என்ன ஒரு அறிவுப்பூர்வமான சிந்தனை. இன்னொரு கேள்வி மிச்சம் இருக்கிறது!உங்கள் கூட்டணியில் உள்ள தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது அவரது பெயரையாவது சொல்லுங்கள் அல்லது ராகுல் காந்தியை உங்களுக்கு ஆதரவாகப் பேச சொல்லுங்கள்! பேசுவாரா? இன்றைக்கு உங்களுக்கு அவரே எதிராக இருக்கிறார்!?
அன்றைக்குச் ஸ்டாலின் காலத்து அரசியல் சிறையில் நீங்கள் அடிபட்டு இறந்திருந்தால் நீங்கள் இன்றைக்குத்தமிழ்நாட்டின் முதல்வர் ஆக இருப்பீர்களா!?
அப்படியான திமுக தியாக சீலர்களை மறந்து, மறுத்து ; நேற்று வரை திமுகவை கலைஞரை திட்டிய அதிமுகலில் இருந்து சம்பதித்தவர்களை தன் அருகே வைத்து மெச்சி
பதவிகளை தருகிறார் ஸ்டாலின்…
#dmkfail
Subscribe to:
Post Comments (Atom)
#தமிழகத்தில்பாரதியஜனதா
#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment