Thursday, May 21, 2026

மூத்த தலைவர் ஜீவா மயங்கி விழுந்தார்.

 மூத்த தலைவர் ஜீவா மயங்கி விழுந்தார். மற்றொரு தலைவரான எம்.ஆர் வெங்கட்ராமன் மீது தடியடி நடத்தப்பட்டதில் அவரது கண்ணாடி உடைந்து, நெற்றியில் பெரிய காயம். தொண்டர்கள் யாரும் கலைந்து செல்ல வேண்டாம். அமைதி வழியில் நின்று, ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்துமாறு சொல்லிவிட்டு இருவரும் காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமே தடியடிக்கு பாதிப்புக்குள்ளானார்கள். மற்ற கட்சியினரோ நேரடியாக பொதுக்கூட்டத்திற்கு வந்துவிட்டார்கள். அங்கே கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுபற்றி கூட்டத்தில் யாரும் பேசவில்லை. தட்சிணப் பிரதேசத் தீர்வை எதிர்ப்பதென்றும் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் தமிழ்நாடு அமைய வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினார்கள். பின்னர் கலைந்து சென்றார்கள். மறுநாள் சென்னை நகரமெங்கும் போஸ்டர்கள். ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுக்கெதிராக தட்சிணப் பிரதேசத்திற்குத் துணை நிற்கும் காமராஜரின் ஆட்சியை எதிர்த்து தி.மு.கவினர் மேற்கொண்ட போராட்டம் வெற்றி பெற்றதாக போஸ்டர்களில் சொல்லப்பட்டிருந்தது. ம.பொ.சி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் முயற்சியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ‘கண்ணீர்த்துளி இயக்கத்தினர்’ (பெரியார் திமுகவுக்கு வைத்த பெயர்), போராட்டத்தைத் தங்களுடைய வெற்றியாக காட்டிக்கொண்டது பெரியாருக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அடுத்து வந்த ஒரே வாரத்தில் தட்சிணப் பிரதேச ஐடியாவை நேரு அரசு வாபஸ் வாங்கிக் கொண்டது. அரசியலில் இருந்த ஒதுங்கிய ராஜாஜி, சக்கரவர்த்தித் திருமகன் என்னும் பெயரில் ராமாயணத்தைத் தமிழில் எழுத ஆரம்பித்தார். பெரியாரே சொன்னாலும் தமிழ்நாடு என்னும் பெயர் வைக்க முடியாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது! #dakshinpradesh #தட்சிணப்பிரதேசம் #திமுகதவறுகள் #DMKFails #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்



No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...