இப்போது வியாபார பண்டமாற்று முறையில் வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள். பிறகு எப்படி ஜனநாயகத்தில் இறையாண்மை இருக்கும்? தேர்தல் எப்படி ஜனநாயகத்தின் அச்சாணியாக விளங்கும்? மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை என தொடர்ந்து திமுக குற்றம்சாட்டி வருகிறதே? தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார். அதற்கு உதாரணமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், தூத்துக்குடி துறைகம் என பல சான்றுகளை சொல்லலாம். தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டாலும்கூட, பிரதமர் மோடி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என அகிலம் முழுவதும் தமிழைப் பறைசாற்றுகிறார். திருக்குறள், பாரதியை பெருமைப்படுத்தியிருக்கிறார். காசி தமிழ்ச் சங்கமத்தை நடத்திக் காட்டியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவராக்கியிருக்கிறது பாஜக. ஆந்திரத்தில் பவன் கல்யாண் சாதித்ததைப் போன்று தமிழக அரசியலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? சினிமாவிலிருந்து வருபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகிவிட முடியாது. பவன் கல்யாண் பல தோல்விகளுக்குப் பிறகு நிதானமாகத் தன்னை வளர்த்துக் கொண்டு ஆந்திர துணை முதல்வராகியுள்ளார். நடிகர் விஜய்க்கு 16 முதல் 18 சதவீத வாக்கு வங்கி இருக்கலாம். ரோமன் கத்தோலிக்க மக்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கலாம். ஆனால், விஜய்க்கு கிடைக்கும் வாக்குகள் வரக்கூடிய தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாக்கு எண்ணும்போதுதான் தெரியும். தேர்தல் களத்தை கிட்டத்தட்ட 52 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். 1989}இல் நான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டபோது "நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள்' எனக்கூறி எனக்கு பலர் கை கொடுத்துவிட்டு போனார்கள். கடைசியில் பார்த்தால் நான் தோல்வியைத் தழுவினேன். இப்போதைய காலக்கட்டத்தில் ஒரு புறம் பணம் என்றால், மறுபுறம் ஜாதி இருக்கிறது. ஜாதியும், பணமும் இந்திய இறையாண்மைக்கு நல்லதல்ல. ஊழலுக்குத்தான் வழி வகுக்கும். சசிகலாவின் வருகையால் முக்குலத்தோர் வாக்குகள் சிதறுமா? தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு என்றும் வாய்ப்பிருந்ததில்லை. பழ. நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் முயன்றும் அது பலிக்கவில்லை. சசிகலா தொடங்கியுள்ள கட்சியின் பெயர் மக்கள் மனதில் கூடப் பதியவில்லை. எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் இருப்பதால் முக்குலத்தோர் வாக்குகள் சிதறாமல் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றதை தமிழக முதல்வர் கடுமையாக விமர்சித்துள்ளாரே? நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, திமுக இந்திரா காந்தியை கடுமையாக திட்டியதும், கருப்புக் கொடி காட்டி மதுரை, திருச்சியில் தாக்குதல் நடத்திய நிகழ்வுகளும் அரங்கேறின. 1979}80} களில் இந்திரா காங்கிரஸýம், திமுகவும் கூட்டணி அமைத்தபோது எத்தனை முறை கருணாநிதி தில்லிக்கு போனார்? அன்றைக்கு முரசொலி மாறன் எத்தனை நாள் இந்திரா காந்தியைப் பார்ப்பதற்காக தில்லியில் காத்திருந்தார்? என்பது எனக்குத் தெரியும். 1980}களில் எம்ஜிஆரின் ஆட்சியை கலைப்பதற்கு தில்லியில் எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள்? எனவே, திமுகவுக்கு அதிமுகவைப் பற்றி பேச அருகதையில்லை. அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர். ஈரான் போர் விவகாரம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத் தேர்தல்கள் என அவருக்கு ஏகப்பட்ட பணிச்சுமை. அதனால்தான் அவரால் தமிழகத்திற்கு வர முடியவில்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் திமுகவினர் விமர்சனம் செய்வது அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் கூறுவது வெறும் வறட்டுத் தைரியம் என்றார். தேசிய அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை என அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியிருக்கிறாரே? ஐ. பெரியசாமியை பொருத்தவரையில் திண்டுக்கல்லில் மட்டும்தான் அவருடைய அரசியல். அவருக்கு தேசிய அரசியல் குறித்து என்ன மாதிரியான கண்ணோட்டம், புரிதல் இருக்கும் என தெரியவில்லை. அவர் தமிழகத்தில் தேசிய அரசியலுக்கு இடமில்லை என எப்படிச் சொல்ல முடியும்? முன்னாள் முதல்வர் கருணாநிதியே, "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக" என கேட்டவர். ஒரு காலத்தில் எதிர்த்தவர்கள், பின்னர் தேசிய அரசியலை எதிர்பார்த்துத்தான் கூட்டணி வைத்தார்கள். அவர் புரிதலோடு பேசுகிறாரா என்று தெரியவில்லை. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எல்லாருக்கும் தெரிந்ததுதானே? தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் மேலான கொலைகள், தாக்குதல்கள் , 36 காவல் மரணங்கள், 8 ஆயிரம் பாலியல் வன்கொடுமைகள், சிறுமியிலிருந்து 70 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் நீதிமன்ற
Subscribe to:
Post Comments (Atom)
#தமிழகத்தில்பாரதியஜனதா
#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment