வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகக் கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக ஆகியோருக்க்குக் கிடைக்கும் மரியாதை மற்றும் அவ்விரண்டு கட்சிக்கும் அதிக சீட்டுகள் ஒதுக்கப்படுவதைக் கண்டு கம்யூனிஸ்டுகள், மதிமுக, விசிக கட்சியினர் யாவரும் தங்களுக்குள் நொந்துபோயிருக்கிறார்கள்.
.இந்த நான்கு கட்சியினரும் என்ன நடந்தாலும் இறுதிவரை திமுகக் கூட்டணியில் தான் நீடித்து இருப்போம் வேறு யாருடனும் எங்களுக்குக் கூட்டணி இல்லை என்று தீர்மானமாக அறிவித்து அதன்படி இருந்தவர்கள்!. அதாவது வாழ்ந்தாலும் மரித்தாலும் அது திமுகவோடுதான் என்று வெளிப்படையாகவே மேடைகளில் உறுதி சொன்னார்கள். இதற்கெல்லாம் திமுக மயங்குமா? விவரம் தெரியாதவர்கள் பாவம்! பல வாய்ப்புகளைத் தவற விட்ட பிறகு இப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவுடனேயே இந்த நால்வருக்கும் அந்தக் கூட்டணியில் இடம் இல்லை என்பதும் . தெளிவாகிவிட்டது. ஆனால் தேமுதிக கடைசிவரை இங்கேயா அங்கேயா என்று ஆட்டம் போட்டு விட்டு இறுதியில் திமுக வில் அடைக்கலம் ஆனவுடன் ஒரு மேல்சபை எம் பி யைக் கொடுத்தது திமுக தனக்குள் இணைத்துக் கொண்டது . அதன் அடிப்படையில் ஏதோ தன் செல்ல குழந்தைக்குக் கொடுப்பது போல சட்டமன்றத்துக்கும் இரட்டை இலக்கங்களில் குறிப்பாக 10 சீட்டு வரை கொடுக்க இருப்பதாகப் பேச்சுவார்த்தையை முடித்து வைத்திருக்கிறார்கள்! . காங்கிரஸும் ஆன மட்டும் தவெக வைக்காட்டி அங்கும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கிராக்கி செய்து , ஆட்சியில் பங்கு தர வேண்டும் மேலும் அதிக இடங்கள் கொடுக்க வேண்டும் என்கிற கடுமையான பேரங்களை முன் வைத்ததால் தான் , ஒரு வழியாக அவர்களுக்கு 23 இடங்கள் கிடைத்திருக்கிறது. இந்த முறை காங்கிரசுக்கு அளவாக சீட் கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சியில் பங்கேற்ற எல்லோருமே அதிருப்தி தெரிவித்து இருந்தார்கள் . மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கடைசி வரை ஒன்றைப் புரிந்து கொள்ள வில்லை. அதனால்தான் மதிமுகவிற்கு 3+1; இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஐந்துக்குள் தான் என்கிற அளவில் கறார்தனம் செய்யும் திமுக கூட்டணிகளைத் தங்களது கட்சி சின்னத்தில் நிற்குமாறும் கட்டாயப்படுத்துகிறது இதுபோக திருமாவளவனின் விசிக விற்கு 6 சீட் கொடுத்தாலே பெரிது என்கிற நிலையில் திருமா விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார். இதுதான் நிதர்சனம்! மற்றும் திமுகவின் தொலைநோக்கும் இதுதான்.. இதனை ஏற்றுக்கொண்டு (மதிமுக போல) அவர்கள் குடும்பத்துடன் குடும்பக் கட்சியாகத்தங்களைச் சுருக்கிக்கொண்டால் மேலும் கொஞ்சம் கூடுதல் சீட் பெற்று பிழைக்கலாம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கரைந்து மறைந்து காற்றோடு போகவேண்டியதுதான்.! இந்த படம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தெளிவான பாடத்தை அளிக்கும்….
Subscribe to:
Post Comments (Atom)
#மேகாதாட்
#மேகாதாட் மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
ஆடித்திருநாள் 18-ம் பெருக்கு அனைவருக்கும் நலமே பெருகட்டும். *** ஆடிப்பெருக்கு பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருக...
No comments:
Post a Comment