வாசலில் படுகொலை, நீதிமன்றத்தில் நீதிபதியின் மீதே கத்தி வீசப்பட்ட சம்பவம், போக்குவரத்து பெண் காவலரை ஆட்டோ ஓட்டுநர் கடத்தி சென்று பொதுமக்கள் விடுவித்தது என சட்டம்}ஒழுங்கு சீரழிந்தது. சாத்தான்குளம் காவல் நிலைய மரணத்தின்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டார்கள்?
மகளிர் இலவச பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறதே? ஆதரவு அதிகரித்துள்ளதா? அது என்ன காரணம்? மகளிர் உரிமைத் தொகையைக் கொடுத்து எப்படியாவது வாக்கு வாங்கி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் தான் திமுகவுக்கு. தமிழக அரசு எவ்வளவு நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என திமுக நினைப்பதால்தான் தமிழகம் இப்போது 10.5 சதவீதம் கூடுதல் கடன் சுமையில் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகையை எந்த நிதியில் இருந்து கொடுத்தார்கள். மாநில அரசுத் தொகுப்பிலிருந்து கொடுக்கப்பட்டதா? இல்லையே, மத்திய அரசால் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கப்பட்ட நிதியை அள்ளிவிட்டார்கள். இது யாருக்கு நஷ்டம்? தமிழ்நாடு அரசாங்கத்திற்குத்தான் நஷ்டம். வெளிநாட்டில் இருந்து என்ன முதலீடுகளை கவர்ந்து வந்தார்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைவிடவா முதலீடுகளை ஈர்த்தார்கள். எல்லாம் உல்லாச பயணங்கள் மட்டுமே. திமுக தனது திட்டங்களையும் மத்திய அரசின் பாராமுகத்தையும் முன்வைத்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படி முறியடிக்கப் போகிறது? கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் மத்திய அரசில் பங்கேற்ற கட்சி திமுக. காவிரி பிரச்னையைத் தீர்த்திருக்கலாம். முல்லைப் பெரியார் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம். இவர்கள் சொன்ன மாநில சுயாட்சிக்குத் தனி மசோதாவே கொண்டு வந்திருக்கலாம். ஹிந்தியை திணிக்கக் கூடாது என மசோதா கொண்டு வந்திருக்கலாம். ஏன் அப்போதெல்லாம் செய்யாமல் இப்போது ஹிந்தியை திணிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்? மத்தியில் 18 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது மூச்சு கூட விடவில்லையே. மோடி எவ்வளவு பணம் தமிழ்நாட்டுக்குக் கொடுத்திருக்கிறார். சும்மா விதன்டாவாதத்துக்கு பேசுறதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. திமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரûஸச் சேர்ந்த பா.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது ஹிந்தியில் பேசி ஹிந்தி பிரசாரம் செய்தார். அதே சிதம்பரம் ஹிந்தி திணிப்பு என பேசுவது வேடிக்கையல்லவா. விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் என்ற பாரதியின் வார்த்தைதான் தமிழகத்தை நினைக்கும்போது மனதில் தோன்றுகிறது. 3/3 #Tamilnadupolitics #தமிழகரசியல் #DMKFailsTN #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
#தமிழகத்தில்பாரதியஜனதா
#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment