தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளரவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதுதான் திமுகவின் வழக்கம்.
——————————————————— இன்றைக்குப் பழனி கிணத்துக்கடவு என பல தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் முன்பு வந்து பலரும் போராடி நிற்கிறார்கள். ஒரு காலத்தில் அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றம் சட்டமன்றத் தேர்தலுக்காக வந்து நின்று இம்மாதிரிப்போராடியதும் உண்டு. இன்றைக்கு பாரதிய ஜனதா அலுவலகத்தில் வந்து எங்களுக்கு வேட்பாளராக நிற்பதற்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கூட்டமாக பலரும் வந்து நிற்பதைப் பார்க்கும் பொழுது பாரதிய ஜனதா தமிழகத்தில் எவ்வாறு வளர்ந்து நிற்கிறது அதன் அடிப்படையில் ஒரு மாற்று அரசியலுக்காக மக்களின் மனமும் எவ்வாறு மாறி உள்ளது என்பதற்கான அடையாளமாகவும் தேர்தல் காலத்தில் பாஜக அலுவலகம் நிரம்பி வழிகிறது. அது ஒரு தளத்தையும் ஒரு இடத்தையும் எவ்வாறு பிடித்து மேலோங்கி நிற்கிறது என்பதைத் திமுகக் காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கட்சியிலும் இப்படியான போராட்டங்கள் நடந்தன. அப்போது நீங்கள் இது வெகுஜனக் கட்சி” அப்படித்தான் நடக்கும்!என்று சொன்னீர்கள் என்பதும் எனக்கு மிக நன்றாகத் தெரியும் அப்போது நான் அங்கு இருந்தவன். இன்றைக்கு பிஜேபி கம்யூனிஸ்ட்களை விட காங்கிரஸை விட டிவிகேயை மிகச் சிறப்பாக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது. இந்து பத்திரிகையில் தமிழகத்தை பொறுத்தவரையில் ஸ்டக்ரலிங் பிஜேபி என்று இந்து ராமின் ஆங்கில இந்துவில் நண்பர் கோளப்பன் ஒரு குறிப்பான மனநிலையில் ஒரு கட்டுரை போன்ற ஒன்றை எழுதி இருந்தார். உண்மையில் காங்கிரஸ் கட்சி இங்கே பின்தங்கிவிட்டது ஆங்கில இந்துப் பத்திரிக்கை எப்போதும் திமுகவை உயர்த்தி பிடித்துத் தான் எழுதும் என்பது எல்லோருக்கும் தெரியும்! அங்கு வேலை செய்யும் ஒரு சில பத்திரிகையாளர்கள் தவிர மற்ற எல்லோரும் முரசொலிப் பத்திரிகையில் வேலை பார்ப்பது போலவே தான் நடந்து கொள்கிறார்கள். நடுநிலையான மனமாச்சரியமற்ற செய்திகள் ஏதும் ஆங்கில இந்துப் பதிவில் வருகிறதா!? இல்லை!? இந்தப் போராட்டங்களை எல்லாம் பார்க்கும் பொழுது பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்பதைத் தான் யார் என்ன பேசினாலும் மறுத்தாலும் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. #பாஜக #காங்கிரஸ் #திமுக #BJP #DMK #Congress #தமிழகஅரசியல் #tamilnadupoltics #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
#தமிழகத்தில்பாரதியஜனதா
#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment