#தட்சிணப்பிரதேசம் #dakshinpradesh ————————————————————- இந்தியாவின் தென் மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசமாக அறிவிக்க இருக்கிறார்கள் என்று அறிவுலக மேதை ஸ்டாலின் அவர்கள் ஊடகங்களில் தீயைப் பரப்பி இருக்கிறார்! பாரதிய ஜனதா கட்சி எங்கே அப்படி கூறியிருக்கிறது? பாரதப் பிரதமர் மோடி அவர்கள் எங்கே தென் மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசமாக அறிவிப்போம் என்று சொல்லி இருக்கிறார்? எதையாவது பூதாகரமாகக் கிளப்பி குழப்பிய குட்டையில் அரசியல் ஆதாயம் தேட இந்த பொய்யான புரளிகளைக் கிளப்பும் போக்கு திமுகவின் புரட்டு அறிவாளிகளுக்கு வழக்கமானது தான். இந்தத் தட்சிணப்பிரதேசம் என்கிற வார்த்தையையே அக்காலத்தில் காங்கிரஸின் பிரதமர் நேரு தானே பயன்படுத்தினார். நீங்கள் அவர்களுடன் தான் இன்று கூட்டணி வைத்திருக்கிறீர்கள்! அங்கே போய்த்தானே அதை நீங்கள் கேட்க வேண்டும் .! யார் சொன்னாலும் அது தவறுதான் என்றால் அதைச் சொன்னவர்களோடு நீங்கள் வைத்திருக்கும் கூட்டணிக்கு என்ன அர்த்தம்! போகட்டும் அதற்குப் பதிலாக தான் நீங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு என்று ஆறு மாநிலங்களையும் இணைத்துத் திராவிட நாடு என்று வைத்துக் கொண்டிருந்தீர்களே. அது இப்போது என்ன ஆயிற்று? நீங்கள் கூறும் திராவிட தேசத்திற்கும் தட்சிணப் பிரதேசத்திற்கும் என்ன முரண்பாடு இருக்கிறது? இரண்டும் ஒரே அர்த்தத்தில் தானே வருகிறது!? நீங்க திகவைப் பிரிந்து திமுக என்று ஆன பிறகு பெரியார் உங்களைத்தானே கடுமையாக வசைபாடி தீர்த்தார். திமுகவை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று சத்தியப் பிரமாணமே செய்தார்! திராவிடர் கழகத்திற்கும் திமுக கழகத்திற்கும் இடையே இருக்கும் தந்திரம் தான் நீங்கள் இன்று கொள்ளையடித்துக் கும்பலாக வளர்ந்து நிற்கக் காரணம்! மோடி அவர்கள் இதைப் பற்றி வேறு எங்கு பேசாமல் இருக்கும் பொழுதே நீங்கள் தான் இதைப் பேசி தீ வைத்து இங்கே வன்முறையைக் கிளப்புகிறீர்கள்!? நாங்கள் திராவிடர்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்கிறார்கள் நாங்கள் மாட்டுக்கறி உண்போம் எங்களைத் தடுக்கிறார்கள் என்றெல்லாம் வெறும் பொய்யாகவும் புரளியாகவும் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டே அனைத்தையும் செய்து கொண்டு பிறகு குறை சொல்லும் போது உங்கள் நாக்கு அழுகிவிடாதா? இந்தியா முழுக்க வளர்ந்து நிற்கும் ஒரு தேசியக் கட்சியை எதிரி ஆக்கி தேர்தலில் ஜெயிப்பதற்கும் உங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்கும் இத்தனை அவலங்களும் பொய்யும் புரட்டுகளும் தேவையா உங்களுக்கு? நீங்கள் சொல்லும் பொய்களைப் பரப்புவதற்கு உங்கள் காலடியில் கூலி வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் பலரையும் ஊடகங்கள் முதற்கொண்டு தனிநபர் வரை பயன்படுத்திக் கொள்கிறீர்கள்! நீங்கள் செய்யும் அதிகாரங்கள் மக்களுக்குப் புரியாமலா இருக்கிறது. உங்களின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நடந்த கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் இவற்றை கட்டுப்படுத்த யோக்கியதை இல்லாமல் தட்சிணப்பிரதேசம் அது இது என்று சொல்லி மக்களின் மனதை ஏமாற்றி அதற்கிடையில் நீங்கள் செய்த அநீதிகள் அனைத்தையும் மறைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பாரதிய ஜனதா இப்படிச் சொல்லுகிறது பிரதமர் இப்படி சொல்கிறார் என்று தந்திரம் செய்கிறீர்களே! இது நிலைக்குமா? இது உங்களை வருங்காலத்தில் பாதிக்கத்தான் செய்யும். நேர்மையாக தேர்தல் களத்தில் நில்லுங்கள் உண்மையான மக்கள் பிரச்சனையைப் பேசுங்கள் ••• வரலாறு இந்திய மாநிலங்களை எவ்வாறு பிரிப்பது? அவற்றின் எல்லைகளை எவ்வாறு தீர்மானிப்பது? எவ்வாறு நிர்வாகம் செய்வது? சுதந்தரத்துக்குப் பிறகான பத்தாண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட கேள்விகள் இவை. சாம, பேத, தான தண்டம் சகலத்தையும் பயன்படுத்தி சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிவிட்டார்கள். இனி நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரித்தாக வேண்டும். எப்படிச் செய்வது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளே மாநிலங்களைப் பிரிக்கும் பணிகள் வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டன. மாநிலங்களை எதன் அடிப்படையில் பிரிப்பது, எல்லைக்கோடு எதுவாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி ஆராய்வதற்கு ஏகப்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன. தார் கமிஷன், ஜே.வி.பி கமிட்டி, பஸல் அலி கமிஷன் என்று ஒவ்வொரு கட்டமாக ஏகப்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன. கமிஷன் உறுப்பினர்களும் கள ஆய்வுகளை மேற்கொண்டு, பிரச்னையை ஆராய்ந்து, பக்கம் பக்கமாக அறிக்கைகளை எழுதி நேருவிடம் கொடுத்தார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட அத்தனை கமிஷன்களும் கிளிப்பிள்ளைபோல் சொல்லி வைத்தது ஒரே விஷயத்தைத்தான். மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவுக்கு ஒத்து வரவே வராது! பிரிட்டிஷ் இந்தியாவிலும் இதைத்தான் சொல்லியிருந்தார்கள். பன்மொழி வித்தகர்களும் இதையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். பண்டைய இந்தியாவில் பல்லாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
#தமிழகத்தில்பாரதியஜனதா
#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment