Thursday, May 21, 2026
#dmkelectionmanifesto
#திமுகதேர்தல்அறிக்கை2026
————————————————————————————-
நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.! அதிமுக தங்களது தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குளிர்சாதனப்பெட்டி வழங்குவோம் என்று அறிவித்திருக்கிறது. அதன் மறு விளைவாக திமுக நாங்கள் கீழே குறிப்பிட்டிருக்கும் பொருட்களில் நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் அதற்காக வீடு வீடாக கூப்பன் தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படிச் சொல்லிவிட்டு திமுகவின் தேர்தல் அறிக்கைதான் முதன்மையான ஹீரோ ஹீரோயின் அறிக்கை என்றும் ஜம்பம் அடிக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாகக் கலைஞர் இருந்த காலத்தில் நடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அப்படி வெற்றி பெற்ற போது அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் ப சிதம்பரம் பேசும்போது திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என்று முதன் முதலாக அறிவித்தார். அப்போதைக்குத் திமுக காங்கிரஸுடன் கூட்டணி. இன்றைக்கு 2026 தேர்தலுக்கும் திமுகவின் அறிக்கை தான் ஹீரோ ஹீரோயின் என்று சொல்லியுள்ளார் ஸ்டாலின்!
நினைத்தால் வேதனையாக இருக்கிறது! 7000க்கும் மேலான பாலியல் பலாத்காரங்கள்! பட்டப் பகலில் சாலைகளில் வெட்டிக் கொலை! நீதிபதியின் மீதே அரிவாள் வீச்சு! டிராபிக் காவலரைக் கடத்திச் செல்லும் போது பொதுமக்கள் ஈடுபட்டு மீட்டது! போன்ற பல சம்பவங்கள்! படுகொலைகள் மட்டுமே ஏறக்குறைய 8000 வரை நெருங்கி விட்டது. போதாதற்கு காவல் நிலைய மரணங்கள் 36 ஐ தாண்டி விட்டது! சாத்தான்குளம் காவல் நிலைய மரணத்திற்கு அண்ணனும் தங்கச்சியும் நீதி கேட்டுச்சாடித்துள்ளிப் போராடினார்கள். அதை ஒரு பெரிய நெரடிவ்வாகக் கொண்டு விளம்பரம் செய்தார்கள். இவர்கள் ஆட்சியில் நடந்த கொலைகளுக்கு யார் வந்து போராடுவது.
ஸ்டாலின் வேண்டுமானால் இதை ஹீரோயின் ஹீரோ அறிக்கை என்று கதை விடலாம். ஆனால் உண்மையில் யோசித்துப் பார்க்கும் பொழுது இது மிகவும் வில்லத்தனமான ஒரு ஆட்சியின் அறிக்கை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டின் வில்லன் தான் திமுக என்பதற்கு இத்தனை சம்பவங்களுக்கும் சாட்சி ஆகின்றன. இது கதாநாயகன் கதாநாயகி அறிக்கை அல்ல மக்களே! வில்லன் வில்லி அறிக்கை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
2016 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இந்த ஐந்து வருடத்தில் 90% நிறைவேற்றி விட்டோம் என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் இவர்கள் அதில் ஒரு பத்து சதவீதத்தை கூட ஒழுங்காக நிறைவேற்ற வில்லை! நிறைவேற்றியதற்கும் ஆதாரங்கள் இல்லை என்பதால் மறைத்தும் விடுகிறார்கள்! வெக்கங்கெட்டுப் போன நிலையில் இந்த 2026 தேர்தலுக்கும் அதே வாக்குறுதிகளை மீண்டும் தருகிறார்கள்! மக்களை மடையர்கள் என்று நினைக்கிறார்களா எனப் புரியவில்லை. அதுதான் பணம் கொடுத்தால் உலகத்தையே வாங்கிவிடலாம் என்கிற கித்தாப்பு இருக்கும்போது இதில் சொல்ல என்ன இருக்கிறது. சொன்னதை செய்யவில்லையே
மதுவை ஒழிப்போம் நீட்டை ஒழிப்போம் அதை ஒழிப்போம் இதை ஒழிப்போம் சொல்லும்போது இவர்கள் கதாநாயகன் கதாநாயகிகள் தான்!! ஆனால் முடிக்கும் போது வில்லன் வில்லியாக மாறிவிடுகிறார்களே! போகட்டும் எத்தனை காலம்தான் இவர்கள் ஏமாற்றுவார்கள்!?
#TamilNaduElections2026
#தமிழகதேர்தல்2026
#dmkelectionmanifesto
#திமுகதேர்தல்அறிக்கை2026
#தமிழகஅரசியல்
#tamilnadupoltics
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
#தமிழகத்தில்பாரதியஜனதா
#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment