Thursday, May 28, 2026

ஏக்களை தவெக பக்கம் கொண்டு வருவதற்கு முயற்சித்து வந்த நிலையில்,

 ஏக்களை தவெக பக்கம் கொண்டு வருவதற்கு முயற்சித்து வந்த நிலையில்,

வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக காங்கிரஸ் என்கிற தேவையில்லாத ஆணியை தவெகவுக்குள் ஆதவ் அர்ஜுனா கொண்டு வந்து விஜய் முதல்வராக பதவி ஏற்பு விழாவுக்கு ஆப்பு வைத்து விட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள். என்னைப் பொறுத்தவரையில் எனது அரசியல் அனுபவங்கள் வழியாகப் பார்க்கும் பொழுது இன்றைய 2026 தமிழகத் தேர்தலுக்குப் பிறகு வெற்றி தோல்விகளைக் கடந்து யாரும்ஆட்சி அமைக்க முடியாத நிலையில் ஒரு வினோதமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது! வரலாற்றைத் திரும்பி பார்த்தோமேயானால் எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜானகி அம்மையார் அந்த இடைக்கால அரசை மேற்கொள்வதற்கு தேவையான மெஜாரிட்டியை கவர்னரிடம் சமர்ப்பிப்பேன் என்று சொல்லி நின்ற போது எந்தவித ஆதரவும் திமுக காங்கிரஸ் யாரும் கொடுக்காமலே அதன் பதற்றத்தில் நொந்து போன கே கே எஸ் எஸ் ஆர் போன்றவர்கள் சட்டசபையில் மைக்கை பிடுங்கிக் கொண்டு வெளியே போனார்கள். எம்ஜிஆர் மூலம் நலம் பெற்றவர்கள் கூட ஜானகிக்கு ஆதரவு தெரிவிப்பதில் சங்கடத்தை மேற்கொண்டார்கள். அதேபோல்தான் இன்று வரலாறு திரும்புகிறது. ஒரு தேர்தல் முடிந்த பிறகு யாரை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்பதில் ஒரு கவர்னரின் பிளஷர் - திருப்தி மற்றும் அமைதி இறையாண்மை அனைத்தும் அடங்கி இருக்கிறது. அப்போதுதான் அவர் ஜனநாயகத்தின் பிரதிநிதியாக அந்த ஆட்சி அமைப்பை உளப்பூர்வமாக வரவேற்கிறார்! இன்றைக்குத் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதற்கான வரவேற்பில் அறம் சார்ந்து கவர்னர் நின்று கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஆளுங்கட்சியான திமுக அதற்கு வாய்ப்பு இல்லாமல் தோற்று இருக்கிறது. அதற்கு ஏற்ப எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க முடியாமல் தேர்தல் ரிசல்ட் இல் பின்தங்கி இருக்கிறது! இதற்கிடையில் அதிக எம்எல்ஏ எம்எல்ஏக்களை பெற்ற விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதங்களைக். கொடுத்தார். ஆனால் சட்ட மதிப்புகளின் படி அல்லது இந்திய தேசிய இறையாண்மைகளின் படி 118 உறுப்பினர்களைக் கொண்ட மெஜாரிட்டியை நீங்கள் நிரூபித்தால் மட்டுமே உங்களை ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று கவர்னர் கறாராகச் சொல்லியிருக்கிறார். அதன்படி அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு விஜய் மட்டுமல்ல வேறு யாரும் கொடுத்தால் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன் என்று அவர் சொல்லியதிலீ என்ன தவறு இருக்கிறது!? மக்களின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒரு ஆளுநர் அவரின் திருப்தி அதை ஆங்கிலத்தில் ஃபிளசர் என்று சொல்வார்கள் அப்படியாக வெற்றி பெற்ற ஒரு கட்சியை பதவி பிரமாணம் செய்து வைப்பதில் தான் தன் உண்மையான உற்சாகத்தை அடைவார்! அது ஒரு மரபு சார்ந்த விழுமியம்! உடனே இங்கே கமலஹாசன் விடுதலைச் சிறுத்தைகள் இடதுசாரிகளள் எல்லோரும் குறுக்கு மறுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் விஜய் அரசாட்சி அமைக்க கவர்னர் அனுமதி தர வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள். நேற்று வரை டிவிகெ ஆட்சிக்கு வரக்கூடாது என்று பேசிய பிரகாஷ்ராஜ் இன்றைக்கு விஜயை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் அதுவே ஜனநாயகம் என்று கூறுகிறார்! இதில் என்ன தந்திரம் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாதா!? இந்த நடிகர்களுக்கெல்லாம் நாடாளுமன்றம் முறை அதன் குடிமையியல் இறையாண்மை போன்ற எல்லா தத்துவங்களும் எல்லா அறிவும் உள்ளது போலவே இவர்கள் இந்த அரசியல் இடைவெளியில் குறுக்கிட்டுத் தங்களை ஏதோ அறிவுஜீவிகள் போல அபத்தமாகக் காட்டிக் கொள்கிறார்கள். காமிராவுக்கு பின் நிற்பது என்பது வேறு! அரசியலுக்கு முன்பு முகம் காட்டுவது வேறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊளை இடுவது ஓநாய்களின் கூச்சல் தான். கவர்னர் முன்பு அரங்கேறும் இந்தக் கூத்தாடிகளின் நாடகம் எல்லாம் செல்லாது. ஏன்எனில் கவர்னர் மூலமாக அது ஒரு ஜனநாயக அல்லது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற இன்று வரையான பெரும்பான்மை சார்ந்த நல்லிணக்கத்திற்கான வழிமுறையாகத் தொடர்ந்து வருகிறது எனது நீண்ட கால அரசியல் பார்வை இதுதான்! வெஸ்ட் மினிஸ்டர் கவர்மெண்ட்.! இப்போது புரிகிறதா ஸ்டாலின் கனிமொழி உதயநிதி கலைஞர் இது மாதிரியான சட்டமன்ற சௌகரியங்கள் எப்படியாக சரிந்து வந்துள்ளன என்பதைப் பின் தொடர வேண்டி இருக்கிறது! இவையெல்லாம் அரசியல் வரலாறு குறித்து எதிர்காலத்தில் ஆராயப்படத் தான் போகிறது. அந்த வகையில்எது நிகழ்ந்தாலும் வேடிக்கை பார்க்கும் மன நிலையோடு தான் என் அரசியல் பணிகளுடன் இருக்கிறேன்.

No comments:

Post a Comment

MSY 15