Thursday, May 28, 2026

பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த இந்தியா

 பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த இந்தியா பாராளுமன்ற சட்டமன்றச் சட்டங்களை ஏறக்குறைய இங்கிலாந்து சட்ட வரைவுகளை மற்றும் westminester system மரபை பின்பற்றியே அமைத்துக் கொண்டது என்பது நாம் அறிந்த வரலாறு!

இதுவே தொடரும் வாடிக்கையாகவும் மரபாகவும் இந்திய அரசியல் அமைப்பில் இயங்கி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் வெஸ்ட் மினிஸ்டர் இங்கிலாந்து எனும் ஆட்சி அதிகார முறையியலின் வரைவுதான் இந்தியாவின் நாடாளுமன்ற சட்டம் என்றும் பார்க்கலாம். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாட்டின் கவர்னர் அதிக அளவு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற ஒரு கட்சியின் தலைவரைப் பார்த்து நீங்கள் பெரும்பகுதியான மெஜாரிட்டியை அதாவது நீங்கள் அதற்கான உறுப்பினர்களை கொண்டு வந்து உங்கள் கட்சி சார்ந்து சமர்ப்பித்தால் மட்டுமே நான் உங்களை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு சட்டப்படி வாய்ப்பு இருக்கிறது! அப்படியான மெஜாரிட்டி மீது எனக்கு எந்த ஆட்சேபபனையும் இல்லை! ஒரு வேளை நீங்கள் தனி மெஜாரிட்டியாக இல்லாமல்ப் போனாலும் கூட கூட்டணி கட்சிகளின் ஆதரவுக்கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தால் போதும்!உங்களை ஆட்சி அமைக்க நான் அழைப்பேன் என்று அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது!? என்னைப் பொறுத்தவரையில் எனது அரசியல் அனுபவங்கள் வழியாகப் பார்க்கும் பொழுது இன்றைய 2026 தமிழகத் தேர்தலுக்குப் பிறகு வெற்றி தோல்விகளைக் கடந்து யாரும்ஆட்சி அமைக்க முடியாத நிலையில் ஒரு வினோதமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது! வரலாற்றைத் திரும்பி பார்த்தோமேயானால் எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜானகி அம்மையார் அந்த இடைக்கால அரசை மேற்கொள்வதற்கு தேவையான மெஜாரிட்டியை கவர்னரிடம் சமர்ப்பிப்பேன் என்று சொல்லி நின்ற போது எந்தவித ஆதரவும் திமுக காங்கிரஸ் யாரும் கொடுக்காமலே அதன் பதற்றத்தில் நொந்து போன கே கே எஸ் எஸ் ஆர் போன்றவர்கள் சட்டசபையில் மைக்கை பிடுங்கிக் கொண்டு வெளியே போனார்கள். எம்ஜிஆர் மூலம் நலம் பெற்றவர்கள் கூட ஜானகிக்கு ஆதரவு தெரிவிப்பதில் சங்கடத்தை மேற்கொண்டார்கள். அதேபோல்தான் இன்று வரலாறு திரும்புகிறது. ஒரு தேர்தல் முடிந்த பிறகு யாரை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்பதில் ஒரு கவர்னரின் பிளஷர் - திருப்தி மற்றும் அமைதி இறையாண்மை அனைத்தும் அடங்கி இருக்கிறது. அப்போதுதான் அவர் ஜனநாயகத்தின் பிரதிநிதியாக அந்த ஆட்சி அமைப்பை உளப்பூர்வமாக வரவேற்கிறார்! இன்றைக்குத் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதற்கான வரவேற்பில் அறம் சார்ந்து கவர்னர் நின்று கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஆளுங்கட்சியான திமுக அதற்கு வாய்ப்பு இல்லாமல் தோற்று இருக்கிறது. அதற்கு ஏற்ப எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க முடியாமல் தேர்தல் ரிசல்ட் இல் பின்தங்கி இருக்கிறது! இதற்கிடையில் அதிக எம்எல்ஏ எம்எல்ஏக்களை பெற்ற விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதங்களைக். கொடுத்தார். ஆனால் சட்ட மதிப்புகளின் படி அல்லது இந்திய தேசிய இறையாண்மைகளின் படி 118 உறுப்பினர்களைக் கொண்ட மெஜாரிட்டியை நீங்கள் நிரூபித்தால் மட்டுமே உங்களை ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று கவர்னர் கறாராகச் சொல்லியிருக்கிறார். அதன்படி அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு விஜய் மட்டுமல்ல வேறு யாரும் கொடுத்தால் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன் என்று அவர் சொல்லியதிலீ என்ன தவறு இருக்கிறது!? மக்களின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒரு ஆளுநர் அவரின் திருப்தி அதை ஆங்கிலத்தில் ஃபிளசர் என்று சொல்வார்கள் அப்படியாக வெற்றி பெற்ற ஒரு கட்சியை பதவி பிரமாணம் செய்து வைப்பதில் தான் தன் உண்மையான உற்சாகத்தை அடைவார்! அது ஒரு மரபு சார்ந்த விழுமியம்! உடனே இங்கே கமலஹாசன் விடுதலைச் சிறுத்தைகள் இடதுசாரிகளள் எல்லோரும் குறுக்கு மறுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் விஜய் அரசாட்சி அமைக்க கவர்னர் அனுமதி தர வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள். நேற்று வரை டிவிகெ ஆட்சிக்கு வரக்கூடாது என்று பேசிய பிரகாஷ்ராஜ் இன்றைக்கு விஜயை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் அதுவே ஜனநாயகம் என்று கூறுகிறார்! இதில் என்ன தந்திரம் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாதா!? இந்த நடிகர்களுக்கெல்லாம் நாடாளுமன்றம் முறை அதன் குடிமையியல் இறையாண்மை போன்ற எல்லா தத்துவங்களும் எல்லா அறிவும் உள்ளது போலவே இவர்கள் இந்த அரசியல் இடைவெளியில் குறுக்கிட்டுத் தங்களை ஏதோ அறிவுஜீவிகள் போல அபத்தமாகக் காட்டிக் கொள்கிறார்கள். காமிராவுக்கு பின் நிற்பது என்பது வேறு! அரசியலுக்கு முன்பு முகம் காட்டுவது வேறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊளை இடுவது ஓநாய்களின் கூச்சல் தான். கவர்னர் முன்பு அரங்கேறும் இந்தக் கூத்தாடிகளின் நாடகம் எல்லாம் செல்லாது. ஏன்எனில்1/2

No comments:

Post a Comment

MSY 15