Thursday, May 28, 2026
#கேலியும்கிண்டலும்….
#தோல்வியில்பாடம்படிக்குமாதிமுக!
———————————————————
#தவெக ஆட்சி அமைத்து சில நாட்களே ஆகிற நிலையில் விஜயின் அரசை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் மக்கள் வெறும் திரைக்கவர்ச்சியால் வாக்களித்து ஒருவரிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டார்கள் என்று கூறி மக்களை மக்கள் ஜனநாயகத்தை இழிவு படுத்துகிறார்கள். விஜயின் திரைக்கவர்ச்சி என்பது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் விசில் சின்னத்தையும் விஜய் என்கிற தனி மனிதரை எட்டுக்கோடி தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திமுகவின் commission and omission பயன்பட்டதே ஒழிய மக்கள் அத்தகைய சின்னங்களுக்கு வாக்களிக்க திரைக்கவர்ச்சி மட்டுமே காரணமாக அமையவில்லை என்பதைப் திமுக புரிந்து கொள்ள வேண்டும்!
ஏன் சொல்கிறேன் என்றால் அறிவு இயக்கம் நடந்த ஒரு மாநிலம் இந்தத் தமிழ்நாடு! மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்கள் பகுத்தறிவு அற்றவர்களாகி விட மாட்டார்கள்! மக்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள் அல்லவா அந்த ஆணவத்திற்குத்தான் முடிவு எழுதப்பட்டு இருக்கிறது! ஆனால் மக்கள் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு உங்களுக்கு வாக்களிக்காமல் நேர்மறையான ஊழலை செய்து இருக்கின்றனர்!! சமூகநீதி என்று பேசிக்கொண்டு நவ தாராளவாதத்தை உயிர் மூச்சாகக் கொண்டு ஆட்சி நடத்தி விட்டு மக்களை நன்றி கெட்டவர்களாகக் காட்டுவது அயோக்கியத்தனத்தின் உச்சம்!
திமுக வேட்பாளர்கள் ஒன்றும் அரிஸ்டாட்டில் அல்லது சாக்ரட்டீஸ் கிடையாது! அவர்கள் பலரின் சமூக விரோத வரலாறும் கட்டப்பஞ்சாயத்து வரலாறும் மக்களுக்கு அப்பட்டமாகத் தெரியும்! அதிகாரம் என்பது மணல் மாஃபியா சினிமா மாஃபியா என்கிற மேட்டுக்குடி குடும்பங்களின் சொத்து மட்டுமல்ல! அது உழைக்கும் கைகளின் உரிமை! அதை மக்கள் தாங்கள் விரும்பியவர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். இது என்ன நீங்கள் மட்டுமே ஆட்சி செய்ய கால கால ஒப்பந்தமா! அதிலும் ஸ்டாலின் நம்பிக்கை
கொண்டது அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்களை மீதும் மட்டுமே. ஆட்சியில் இல்லாத போது
உழைத்து, போராட்டத்தில் சிறை சென்ற பரம்பரை திமுகவினரை ஸ்டாலின் புறக்கணிப்பு செய்தார். அந்த பாவம் வேறு…..
ஜனநாயகம் என்பது சமூக ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காவிட்டால் அது நிலைக்காது! விஜய்க்கு உண்மையான சவால்கள் இனிமேல் தான் தொடங்குகின்றன! இந்த மாற்றத்தில் ஒரு செழுமையான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய கடமை திமுகவிற்கு இருக்கிறது! ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் மட்டுமல்ல! அது முதன்மையாக ஒரு சமூகம் சார்ந்த வாழ்வு முறை ….. இதற்கு ஏற்ப தமிழகத்தின் புதிய அரசியல் பயணம் அமைய வேண்டும்!
திமுகவின் தோல்வியை கொண்டாடும் மக்களை கேலி செய்பவர்கள்”விஜய் எல்லாவற்றையும் செய்து விடுவார் என்று நம்புகிறீர்களா?எனக் கேட்கின்றனர்! எப்போதும் ஒரு தனி மனிதரை நம்ப வேண்டியது இல்லை! மக்களையும் தத்துவங்களை மட்டுமே தான் நம்ப வேண்டும்!!சமரசமற்ற மக்கள் போராட்டங்கள் மூலமாக அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதில் சமூகம் உறுதியாக இருக்க வேண்டும். எப்போதும் போல மக்களோடு மக்களாக இருந்து மக்களிடம்இருந்து கற்றுக் கொண்டு அரசியல் புரிய வேண்டும்! சமரசமற்ற போராட்டக் களத்தில் மக்களுக்கான உரிமைகளுக்காக களமாட வேண்டும் என்ற வகையில் தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
கடந்த காலங்களில் திமுகவிற்கு மக்கள் வாக்களித்தது” ஸ்டாலின் வருவார்!விடியல் தருவார்” என்ற எண்ணத்தில் மட்டும் அல்ல!
காமராஜர் முதல் மு க ஸ்டாலின் வரையான மக்கள் தலைவர்களைத் தேர்தலில் மக்களே தோற்கடித்த சம்பவங்களுக்குப் பின்னால் நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன! காமராஜர் காலத்தில் பீர்மேடு கேரளாவிற்கு தாரை வார்க்கப்பட்டது தொடர்பாக அவரிம் கேள்வி எழுப்பப்பட்ட போது “மேடாவது குளமாவது” என்று பதில் அளித்தார்!நியாய விலைக் கடைகளில் மக்கள் அரிசிக்காக காத்துக் கிடக்கின்றனர் என்று சொன்னபோது சினிமா கொட்டகையில் டிக்கெட்டிற்காகக் காத்திருப்பவர்கள் இங்கு காத்திருக்க மாட்டார்களா என்று கேட்டார்! அதுபோலத்தான் மு.க ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலும் பல சம்பவங்கள் நடைபெற்றன வடசென்னை வளர்ச்சி குழுமம் சென்னை மாஸ்டர் பிளான் போன்றவற்றின் மூலம் மாநகர பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வ குடி மக்கள் நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்! இதற்கு எதிராக நடந்த போராட்டங்களை போலீஸை வைத்து இரும்புக்கரம் கொண்டு அடக்கியது ஸ்டாலின் அரசு!!
மாநகராட்சி வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டிருந்தபோது முதல்வர் கூலி படம் பார்த்ததை மக்கள் மறந்திருப்பார்களா? கொளத்தூர் தொகுதிகளில் பாலம் கட்டுகிறேன் என்கிற பெயரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இடிக்கப்பட்டன!! ஆருத்ரா நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட
Subscribe to:
Post Comments (Atom)
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment