Thursday, May 28, 2026

மக்கள் அந்த தொகுதியில் அதிகம் இருக்கின்றனர்!!

 மக்கள் அந்த தொகுதியில் அதிகம் இருக்கின்றனர்!! இத்தகைய தொகுதி சார்ந்த பிரச்சனைகளைக் கண்டும் காணாமல் இருந்ததும் மக்களைத் தங்கள் வீட்டு வேலைக்காரர்களைப் போல அணுகியதுதான் ஸ்டாலினின் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகும்.

மாநகர போக்குவரத்துக் கழகங்களை உலக வங்கியிடம் அடமானம் வைத்தது!குடிசை மாற்று வாரியத்தின் பெயரை மாற்றியது.நிரந்தர அரசுப் பணியாளர்களை வேலைக்கு எடுக்காமல் அவுட்சோர்சிங் முறையை அரசுக் கொள்கையாக மாற்றியது என்று பல கொள்கை முடிவுகளை அடுக்கலாம்!! ஒரு சில வெற்றியாளர்களை மட்டும் உருவாக்கி மற்ற மாணவர்களை கூலிகளாக மாற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சாதனை போல சித்தரித்ததும் கனிம வளம் மற்றும் பொதுப்பணித்துறைகளில் நடந்த ஊழல்களும் மக்களின் அதிருப்தியை சம்பாதித்தன! அதானியோடு கூட்டு சேர்ந்து மின்சாரத் துறையில் செய்த ஊழல் அமெரிக்க நீதிமன்ற வரை சென்று தமிழகத்தின் மானத்தை கப்பல் ஏற்றியதை நேர்மையானவர்கள் கவனிக்காமல் இருப்பார்களா? மருமகன் சபரீசனை வைத்துக்கொண்டு அரசு பணத்தில் யூ டியூபர்களுக்கு விளம்பரம் என்கிற பெயரில் வாரி இறைத்து ஆதரவான கருத்துக்களை உற்பத்தி செய்தனர்!! மக்களின் அதிருப்தியை திரை போட்டு மறைக்க சமூக வலைத்தளங்களில் வேலை செய்தது, மகன் போதாது என்று மருமகனையும் களம் இறக்கியது யாவும் மக்களின் எரிச்சலை அதிகப்படுத்தியது!! ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்களின் அதிகாரத்தைத் தடுக்கத் தவறியதோடு அரசவைப் புலவர்களை மட்டுமே அருகில் வைத்துக் கொண்டு மக்களிடமிருந்து நாளடைவில் அந்நியப்பட்டு இருந்தது திமுக!! விதவைகள குறித்து பேசிய கனிமொழி ஒன்றும் எல்லாம் அறிந்த அரசியலார் அல்ல. உதயநிதியும் யாரே எழுதி கொடுப்பதை படிக்கும் ஆற்றல் பெற்றவர் அல்ல.இதுதான் இன்றைய திமுக தலைமைகள்….. இத்தகைய bogus hero worship - dynasty worship போலி நாயக மற்றும் வாரிசு அரசியல் வழிபாட்டுக்கு அடிகோலியதே இந்த இருபெரும் திராவிட கட்சிகள் தான்! இவர்கள் தத்துவத்தைக் காட்டிலும் தனி மனிதர்களையே மீட்பராகக் காட்டி அரசியல் செய்தவர்கள்!! மு க ஸ்டாலினின் பிம்பக்கட்டமைப்புக்காக திமுக செலவு செய்த தொகை ஏராளம் ஏராளம்!! இவர்களை தூக்கி திரிபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது ஊடகங்கள், ஆங்கில இந்து போன்ற பல பத்திரிகைகள் , இலக்கியவாதிகள் திட்ட மிட்டு திமுகவை பிம்பம் கட்டினார். இந்த சேவையில் பலர் பணம், வீட்டு மனைகள் பெற்றனர் இருப்பினும் இந்த மாற்றம் முற்றிலுமாக திமுகவின் எதோச்சி காரத்திற்கு கிடைத்த அடி! ஆட்சிக்கு வந்திருப்பவர்களைக் குறை சொல்லாமல் தங்களுடைய குறை நிறைகளை அவர்கள் திரும்பி பார்க்க வேண்டும். ஒருவர் ஜெயித்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் உங்களின் (திமுக) தவறுகள் தான்! திமுக சனாதனத்தை இன்னும் பழிப்பது நல்லதல்ல. திருப்பரங்குன்றத்தில் திமுக திட்ட மிட்டு செய்த தெய்வ பிழைகள்….. பாஜக இங்கு வந்து விடும் என்ற போலி கட்டமைப்புகள்…. என திமுகவின் நடவடிக்கைகள் இதை விஜயின் தவெகவும் உணர்ந்து நடக்க வேண்டும். பாஜக இந்தியாவை ஆட்சி செய்கிறது அதில் தமிழகமும் அடங்கும். இனி விஜய் இலவச ஆறு lpg சமையல் எரி வாயு சிலிண்டர்கள், ரூ2500 பெண்கள் உரிமைத் தொகை, மூத்தவர் உதவித்தொகை, அனைவருக்கும் இலவச பஸ் பயணம் என்பதும் அவ்வளவு எளிது அல்ல. தமிழகம் இந்தியாவின் அதிக கடன் பெற்ற மாநிலம் . Already Tamilnadu exchequer is empty குருவிகள் கூட்டைக் கட்டும் முன் பருந்துகள் அங்கலாய்க்க கூடாது!! #தவெகஆட்சி #DMKRule #DMKFails #tailnadupoltics #தற்போதையதமிழகஅரசியல்சூழல் #திமுக #tnpoliitcs #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

MSY 15