#Poltics #publiclife #அரசியல்அறம்
——————————————————- 1971 ஆம் வருடம்!. எனது தந்தையார் எங்கள் கிராமத்தில் நில புலத்துடன் மிக மதிப்பு மிக்கவராக இருந்தார்!ஒரு நான்கு ஐந்து கிராமத்திற்கு முனிசீப்பாகவும், . மிகச் சிறப்பான அந்தஸ்தோடும் ஏனையோர் கௌரவமாக வந்து அவரைச்சந்திக்கும் வண்ணம் வாழ்ந்தார்! அந்த நேரத்தில் நான் கல்லூரியில் சேர்ந்து புகுமுக வகுப்பில் , PUCபடித்துக் கொண்டிருக்கிறேன். காமராஜர் தலைமையில் ஸ்தாபனக்காங்கிரஸ் திறமாக இருந்த நேரம்! எங்கள் வீட்டிற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் வந்து போவார்கள். அதை ஒட்டிய எனது அரசியல் ஆர்வம் காரணமாக நான் காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றினேன்!! அந்த சமயத்தில் மாணவர் ஸ்தானப காங்கிரஸிலும் எனக்குப் பொறுப்பும் கிடைத்தது! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் டாக்டர் பட்டம் பெற வந்த போது அங்கே மாணவர் உதயகுமார் கொல்லப்பட்டார்! அதற்குப் பிறகு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என் எஸ் ராமசாமி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது! நான் படித்த பாளையங்கோட்டை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சேலத்தைச் சார்ந்த பிகாம் வகுப்பு மாணவர் லூர்துநாதன் ஆற்றுப்பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்தார்!. லூர்து நாதன் திடகாத்திரமான இளைஞர்!விதவிதமான வண்ணங்கள் ஊடான ஆடைகள் அணிந்து வருபவர்! அவருக்கு நன்றாகக் கிட்டார் வாசிக்கவும் தெரியும்! அந்த மாணவர் அன்று அப்படியாகச் சாகடிக்கப்பட்டார்! அவரது மரணத்துக்கு நீதி கேட்டு நாங்கள் சென்னை வரை வந்தோம். ஸ்ரீரங்கத்தில் எம்எல்ஏவாக இருந்த வெங்கடேஸ்வர தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் கடுமையாக எதிர்வினை செய்தார்கள். அந்த விஷயத்தில் பழ நெடுமாறன் கருத்திருமன் போன்றவர்கள் கூட காமராஜரின் பின்னணியில் நின்றார்கள் ஆதரித்தார்கள்! மேற்கண்ட வழக்கை விசாரிக்க ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கோதண்டராம ராஜா கமிஷனும் நியமிக்கப்பட்டது. அதேபோல அன்றைய கலைஞர் ஆட்சியில் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் விடுதியான கிளைவ் ஹாஸ்டலில் போலீசார் உள்ளே நுழைந்து கடுமையாக மாணவர்களைத் தாக்கி அவர்களைத் துவம்சம் பண்ணினார்கள். தலையிலும் உடம்பிலும் ரத்தக் கரையோடு மாணவர்கள் வெளியே ஓடினார்கள் நெடு நாட்களாக அந்தக் கிளைவ் ஹாஸ்டல் தரையிலும் சுவற்றிலும் ரத்தக்கறைகள் உறைந்து போய் இருந்தன. அந்த வகையில் தொடர்ந்து மாணவர் அமைப்பின் மூலம் மூன்று போராட்டங்களை நாங்கள் மாணவர் காங்கிரஸிலேயே நடத்தினோம். பிறகு இந்தத் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் சம்பவத்திற்கு ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நீதிபதி குப்பண்ணா தலைமையில் விசாரணைக்குழு அமைத்தார்கள்! இப்படியான போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்த நேரத்தில் எனது தந்தையார் அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னை அழைத்து “என்னப்பா! இப்படி படிப்பு வீடு உறவு சுற்றம் எதிர்காலம் என்று பார்க்காமல் அரசியலில் ஈடுபட்டு இப்படி போய்க்கொண்டிருக்கிறாயே! சரிதானா? என்று கேட்டார். அரசியலில் உனக்கு விருப்பம் இருந்தால் அதில் ஈடுபட எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை!அது வேறு விஷயம்! ஆனால் படிப்பைத் தான் முதலில் கவனிக்க வேண்டும் என்று அவர் வாழ்வில் இறுதியாக பேசி எனக்கு புத்தி சொன்னார். ஆனால் என்னை பொறுத்தவரையில் நான் என்னதான் அரசியலில் ஈடுபட்டாலும் கல்லூரியில் நல்லவகையில் படித்து முதல்நிலை மதிப்பெண்கள் பெற்று விடுவேன்! அந்த வகையில் என் மீது என் தந்தையாருக்கும் நம்பிக்கை இருந்தது! நேர்மையானவனாக இருக்கின்றான்! பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறான்! வீணாகிப் போய்விடக் கூடாது என்ற நிலையில் எனக்கு ஆலோசனைகள் சொன்னார். ஆனால் அவர் இறக்கும்போது நான் அவருடன் இல்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். பேர் சொன்ன வகையில் இறுதியாக கடைசியாக நானும் அவரும் பேசிய வார்த்தைகள் இவ்வளவுதான். அன்றிலிருந்து அரசியலில் தொடர்ந்து நீடித்து வருகிறேன்! 54 மேல் வருடங்கள் ஆகிறது! நான் சில கட்சிகள் மாறினேன். ஏன் மாற வேண்டிய நிலைமை வந்தது? நான் ஏதாவது கேள்விகள் கேட்கும் போது சில விஷயங்களில் அவர்களது நடத்தைத் தவறாக போகிறது என்று சொல்லும் பொழுது என்னை அவமானப்படுத்தினால் இப்போதும் சொல்வேன் அங்கே என் சுயமரியாதையைத் தான் முக்கியமாக நினைப்பேன். என்றும் என்னளவில் அவர்களுக்காக அக்கறையுடன் உழைத்து உதவி செய்து அவர்களது சிரமங்களை எல்லாம் பக்கபலமாக இருந்து தீர்த்துக் கொடுக்கும் அளவிற்கு வந்த பிறகும் அதை அனுபவித்தவர்களே என்னைப் புறக்கணிக்கும் பொழுது நான் என்னைப் பொருத்தளவில் இருப்பதா?வெளியேறுவதா? என்று முடிவு எடுக்க வேண்டியது தானே நியாயம்! அந்த வகையில் நான் எனது வழக்கமான நம்பிக்கையோடு கட்சிகள் மாறினேன். எங்கு சென்றாலும் முறைகேடுகள். எது எப்படி இருந்த போதும் அங்கே பல வகையில் நான் உழைத்துக் கொடுத்த பிறகு
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment