Thursday, May 28, 2026

யார் வேண்டுமானாலும் அமைச்சர் ஆகலாம்!

 யார் வேண்டுமானாலும் அமைச்சர் ஆகலாம்!ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருக்கலாம்!

ஆனால் அவர்களது அதிகாரத்தின் இறுதி நிலையில் அவர்களது செயலாலே விமர்சிக்கப்பட்டு மங்கி விடுகிறார்கள். ஆனால் தொடர்ந்து அரசியலில் இருந்து அதை நெறிப்படுத்தியும் மக்களின் முன்பு அவர்களுக்கான நலன்கள் குறித்து பேசியும் செயல்பட்டும் வருகிற எங்களைப் போன்றவர்களைப் பார்த்து “யார் யாரோ தகுதியற்றவர்கள் எல்லாம் வந்து போகிறார்கள்?! அரசியல் சீர்மை வாய்ந்த உங்களுக்கு உரிய பதவிகளும் பொறுப்புகளோ ஏன் இன்னும் வராமல் இருக்கிறது” என்று விமான நிலையங்களிலோ ரயில் நிலையங்களிலோ கேட்கிறார்களே! அதுவே என்னைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் தானே! இங்கே #தகுதியேதடை மந்திரி! எந்திரி!! என்கிற நிலைமை இன்று வந்துவிட்டது.இதோ விஜய் வெற்றி பெற்று இருக்கிறார். சட்டமன்றத்தில் தனது ஆட்சியை அமைக்க முடியாமல் சில நாட்கள் தவித்தார்! இதையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறே நாங்கள் எங்களுக்கான கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம்! ஏதோன்றுக்கும் ஆதங்கப்படுவது!அடிமைச் சேவகம் புரிவது!அங்கே வாசலில் விழுந்து கிடப்பது! என்பதெல்லாம் எங்களுக்கு ஆகாது! வெற்றி என்றால் திமிர், தோல்வி என்றால வெறுப்பு என்று இல்லாமல் நமது போக்கு, கடமை என கொள்வோம்! இப்பொழுது தேவை நேர்மையான ஆடுகளம்! மக்களுக்கான ஆடுகளம்!! அதில் ஒரு தெளிவான பாதையைப் போட்டுக் கொண்டு தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் பணி! இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இன்று காலையில் ஒரு காலத்தில் நான் வழக்கறிஞர் ஆனதற்கு பிறகு 20 ஆண்டுகாலம் கழித்துப் பிறகு வழக்கறிஞரான அவர் இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்! தொலைபேசியில், “ என்ன சார் இப்படி அரசியல் போகிறதே “என்று கேட்டார். நேற்று சனிக்கிழமை அவர் விடுமுறையில் ஓய்வில் இருக்கிறார். அவர் என்னை அழைத்து அக்கறையுடன் இன்றைய அரசியல் நிலைமைகளைக் கேட்கும்போது நான் மேற்கண்ட அனைத்தையும் அவரிடம் பதிவு செய்தேன். “ஐயா!எவ்வளவு முக்கியமானது இந்தப் பதிவு! என்று மனதாரப் பாராட்டி உங்களைப் போன்றோரின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.! ஒரு நாள் இந்தச் சமூகமும் புரிந்து கொள்ளும் என்று சொன்னார். அரசியலில் நுழைய வேண்டும்! எப்பாடுபட்டாவது மந்திரியாக வேண்டும்! அதற்கு ஆயிரம் குறுக்கு வழிகளைப் பயில வேண்டும். அதன் மூலம் செல்வம் சேர்க்க வேண்டும்!என்றெல்லாம் வந்து கொண்டு இருப்பவர்களிடையே அப்படிப்பட்ட எந்த ஒரு குணாதிசியமும் இல்லாமல் தானே நாங்களும் அரசியல் பணி செய்து வருகிறோம். இதுதான் எந்தவிதமான கறை படியாமலும் 54 வருடங்களாக நான் இயங்கி வரும் அரசியல் தளம். அந்த விதத்தில் இதைச் செய்வதில் ஒரு மன ஆறுதலும் அநீதிக்கு எதிராக எங்கும் எவர் முன்பும் பேச தைரியம் வாய்ப்பதும் ஆன எனது தொடர் செயல்பாடுகள் மூலம் நான் எப்போதும் போல் திடமாகவே இருக்கிறேன். வெற்றியிலிருந்து பலம் கிடைப்பதில்லை.. உங்கள் பணி மற்றும் போராட்டங்களே உங்களுக்கான பலத்தை உருவாக்குகின்றன.. உடலின் துக்கத்தை மட்டுமல்ல மனத்தின் வலியையும் உடல்தான் இங்கே சுமக்கிறது. ஒளிரும் நகரங்களின் முன்னிரவில் ஒரு மீமெய்மை நிலையை உணர்வது போல, உடல்வழியாகவே மீமெய்மைத் தன்மையை அடைகிறார்கள். அங்கே உழைப்பதும், விழித்திருப்பதும், கனவு காண்பதும், காதலிப்பதும், நோய்ப்படுவதும் உடல்தான். நினைவுகளையும் லட்சியங்களையும் சுமப்பது உடல்தான், உடல் தான். அந்த வகையில் அரசியலும் என்றால் ஆடுகளம் தான்.! அங்கே அறம் கூற்றம். இது ஆதங்கம் அல்ல! இது அரசியல் அவல்!! #Poltics #publiclife #அரசியல்அறம் #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்





No comments:

Post a Comment

MSY 15