திமுகவின் தோல்விக்கு வழி வகுத்தது குடும்ப அரசியலும் சட்ட ஒழுங்குச் சீர்கேடு, ஊழல என பல காரணங்கள் உண்டு. நல்ல ஆட்சி நடத்துவதற்கான எந்த சாணக்கியத் திறமையும் இல்லாத ஸ்டாலினின் தகுதியும்தான்!
திருநெல்வேலியில் ஒரு ஆசிரியரின் மகனாகப் பிறந்து ஸ்டாலினின் மருமகனாக வந்த சபரீசனின் எல்லாம் எனக்கு தெரியும் என்கிற மெத்தனப்போக்கு மற்றும் எல்லாத் துறைகளிலும் தலை நீட்டி அவர் செய்த அதிகாரம் ஒரு மோசமான பின்னடைவைத் திமுகவிற்குத் தந்தது! மற்றபடி முதல்வரின் துணைவியார் ஒவ்வொரு கோயிலுக்குச் செல்லும் பொழுதும் பொதுமக்கள் யாருக்கும் அனுமதியளிக்காமல் கதவை மூடுகிற கொடுமைகள், பல அமைச்சர்களின் அலட்சியமான பேச்சு என்று பலவகையிலும் ஜனநாயகத்தின் மாண்புகளைக் குலைத்த ஸ்டாலினால்தான் விஜய் இந்த வெற்றியை பெற முடிந்தது! ஜாதகத்தில் ஏதோ பிரம்மஹத்தி தோஷம் என்பார்கள். அதுபோல தமிழகத்தைப் பிடித்த பீடை விலகி விட்டது. என்றைக்கு அதிமுகவில் இருந்து விலகி வந்த பலருக்குத் திமுகவில் ஸ்டாலின் முதலிடம் கொடுத்தாரோ அன்றைக்கே சரிவும் அதிருப்தியும் உண்டானது! துரைமுருகனுக்கோ டி ஆர் பாலுக்கோ அல்லது என்னைப் போன்றவர்களுக்கோ கொடுக்க வேண்டிய தகுதிகளை மறுத்து ஒதுக்கி வைத்தார்கள். இல்லையா? அதற்கு இந்தத் தமிழக மக்கள் கொடுத்த தண்டனை தான் இந்தத் தோல்வி! . யார் யாரோ வெற்றி பெற்றுள்ளார்கள்! ஆனால் அந்தக் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற முடியவில்லை"!. இனித்தான் ஸ்டாலின் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள், பார்க்க வேண்டிய காட்சிகள், போக வேண்டிய தூரங்கள், அதிகமாகிறது! . கட்சிக்கும் கழகத்திற்கும் அதற்காக உழைத்தவர்களுக்கும் அவரிடம் மதிப்பு இல்லை!! எல்லாம் என் குடும்பத்திற்கு நல்ல சேவை செய்யால்தான் கிடைக்கும் என்று சொன்னால் அந்த சுயநலப் போக்கும் அதற்கான மரியாதையும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? எப்படி எம்ஜிஆர் திமுகவிற்குப் பாடம் கற்பித்தாரோ, அதே போல விஜயும் பாடம் கற்பிப்பார்! எந்தவித அரசியல் பின்புலங்களும் இல்லாமல் கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில் சினிமாவில் இருந்து வந்து பெரும்பாலான வாக்குகளை பெற்று 100க்கும் மேலான இடங்களைத் தவெக பிடித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் திமுகவில் முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுடைய தவறுகள் தான். எதைச் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்யாமல் விட்டு விட்டு தேவையில்லாத பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது! தொடர்ந்த காவல் நிலைய மரணங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை! எங்கு சென்றாலும் ஊழல்,லஞ்சம்,நிர்வாக திறன் இன்மை! அதிகாரிகளை மட்டும் நம்பியே ஆட்சியை ஒப்படைத்தது போன்றவற்றால் நாட்டில் நடப்பது என்ன என்று அவர் அறியாமலே போய்விட்டார். பக்கத்தில் கருத்துக் கந்தசாமிகளை வைத்துக்கொண்டு மற்றும் கூலி ஊடகங்களின் மூலமாக வாக்குறுதிகள் பிரச்சாரங்களைக் கட்டி நிமித்தினாலும் உள்ளே ஓட்டை விழுந்துள்ளதை அவர் கவனிக்கத் தவறி விட்டார்! பிரதமர் மோடி அவர்களும் காங்கிரஸ் திமுக முதுகில் குத்தி விட்டது என்ற கருத்தை சொல்லி உள்ளார் . இளி காலமதான் பதில் சொல்லும். ஸ்டாலினுக்கு எனத்தனிப்பட்ட செல்வாக்கு என்றுமே இருந்ததில்லை! இப்பொழுதும் இல்லை!! அவர் ட்விட்டர் பேஸ்புக் pen இன்னும் பல்வேறு வகையான ஊடக விளையாட்டுகளை வைத்து ஆட்சியை நகர்த்திக் கொண்டு போனார். மேற் சொன்னவைதான் கடந்த ஐந்து வருடங்களாக அவர் ஆட்சியை கடத்தி வந்ததற்கான காரணிகள். திமுகவின் தோல்விக்கான முழு பொறுப்பையும் அவர்தான் ஏற்க வேண்டும்!!
Subscribe to:
Post Comments (Atom)
#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!
#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment