சென்னையில் நடக்கவிருந்த சில ஆர்எஸ்எஸ் கூட்டங்கள் இன்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக அரசாங்கத்தால் தடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. மறு தலையில் முதல்வர் ஸ்டாலின் திராவிட கழகக் கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக எம்பி களின் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாகத் திராவிட கழகத்திற்கு வழங்கி உள்ளார்.
சரிதான். தடியெடுத்தால் தம்பி சண்ட பிரசண்டம் தான். நாம் ஒரு ஜனநாயகப் பார்வைக்கு வந்து சேர்ந்தால் திராவிட இயக்கம் என்பது இறை மறுப்பாளர்களின் இயக்கம் என்பதாகவும் ஆர் எஸ் எஸ் என்பது இந்திய அளவில் ஒருமித்த இந்து இறை பண்பாட்டு நம்பிக்கையாளர்களின் இயக்கம். என்பதாகவும் புரிந்து கொண்டுள்ளோம். இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றாலும் எல்லா வகையிலும் இரண்டும் மக்கள் இயக்கம்தான். ஒரு இயக்கத்தில் முதல்வர் கலந்து கொண்டு அதற்கு சலுகையும் மறு இயக்கத்தில் அதுவும் பெருவாரியான மக்கள் நம்பி வரும் இயக்கத்தைத் தடை செய்வதும் என்ன வகையில் அரசு நடுநிலை ஆகிறது. திராவிட இயக்கம் ஒரு கொள்கை சார்ந்த விஷயம் தான். அதை ஏற்றுக் கொள்வோம். அதேபோல் இந்திய அளவில் ஆர் எஸ் எஸ் இயக்கமும் இந்திய அளவில் தங்களுடைய மக்களுக்காகச் செயல்படும் ஒரு கொள்கை ரீதியான தொண்டு இயக்கமும் தான். அதை எப்படி மறுக்க முடியும். இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் டெல்லியில் பெரியார் மையத்தை இடித்த பொழுது அதற்கு இங்கு தமிழ்நாட்டில் வீரமணி கடுமையான கண்டனங்கள் தெரிவித்த போதும் அதையெல்லாம் தவிர்த்து மீண்டும் பெரியாருக்கான நினைவு இல்லத்தைக் கட்ட இடம் கொடுத்தது அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் தான். கடவுள் மறுப்பாளரான பெரியாருக்கு அன்றைய காலத்தில் ஆதரவு தெரிவித்து இணக்கமாக உடன் இருந்தவர் வைக்கம் குருகுலத்தில் இருந்த அன்றைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சேலம் வரதராஜ நாயுடு அவர்கள். அவர்தான் தமிழ்நாடு மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைளை நிறுவியவர் . அவர் அக்காலத்தில் பெரும் செல்வாக்கு மிக்கப் பணக்காரர். . அவர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த போது பெரியார் அதன் காரியக் கமிட்டியில் இருந்தார். அதெல்லாம் ஒருபுறம் இருக்க பெரியாரின் கடைசி காலத்தில் அதாவது இரு திராவிட கட்சிகளும் அவர் குறித்துப் பாவனை செய்து கொண்டிருந்த காலத்தில் சேலம் வரதராஜ நாயுடு மிக சிரமமான அவருடைய கஷ்ட நேரத்தில் விழப்புரத்தில்்இந்து மகா சபை தான் அவரை ஆதரித்து அவருக்குச் சில ஆதரவுகளையும் உதவிகளையும் செய்தது. இத்தகைய வரலாறு எல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்? நீங்கள் பெரியாருடைய திராவிட இயக்கத்தைக் கொண்டாடுங்கள். அது உங்கள் விருப்பம்! தேர்வு!!ஆனால் அப்படி அல்லாத மற்றவர்களின் தேர்வான இந்துக்களின் ஆர்எஸ்எஸின் தன இயக்கத்தை ஏன் தடை செய்கிறீர்கள். நம்பிக்கையென்று வந்துவிட்டால் அவரவர் நம்பிக்கைகளுக்கு மதிப்புத் தர வேண்டியதுதான் ஒரு பொது அரசின் நேர்மை. என்ன விதமான ஆதிக்கம். உங்களை முதல்வராக்க கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இல்லாதவர்கள் எல்லோரும் தானே திமுக என்ற பொது கட்சியின் பேரால் வாக்களித்துள்ளார்கள். அவரவர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்குரிய அமைப்புகளை ஏன் நீங்கள் தடை செய்கிறீர்கள். இதற்கெல்லாம் பதில் தர வேண்டியது ஒரு முதல்வர் என்கிற முறையில் உங்களின் தார்மீகப் பொறுப்பு. நீங்கள் நம்புவதன் மூலம் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைத்தான் மற்றவர்கள் தாங்கள் நம்புவதன் மூலம் செய்ய விரும்புகிறார்கள். அதற்கு முதலில் மதிப்பளித்து உங்களது மதிப்பை காப்பாற்றிக் கொள்ளுங்கள். #ஆர்எஸ்எஸ் #Rss #bjp #பாஜக #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment