Friday, October 16, 2026

Oct 9, 2025 #உள்சுவரைப்பூசாமல்வெளிச்சுவரைப்பூசுவதால்என்னபயன்?

 #உள்சுவரைப்பூசாமல்வெளிச்சுவரைப்பூசுவதால்என்னபயன்?

—————————————————- #பாலஸ்தீனத்திற்கான தூதரகம் 1980களில் காங்கிரஸ் ஆடசி காலத்திலேயே டெல்லியில் அமைந்து விட்டது. நாம் ஒன்றை இப்போது புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய பாரதிய ஜனதா அரசும் அதன் பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ஆன பிறகு, ஐநா மூலம் #காசாவிற்கு பல்வேறு உதவிகளை நிதிகளை வழங்கி வந்திருக்கிறார்கள்.. 2014 க்கு பின் பல மில்லியன்கள் பணம் காசாவிற்காக இந்தியா நல்லெண்ணத்தின் பொருட்டு வழங்கி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அங்கே புதிய கட்டுமானத் தொழில்கள் ஐடி கம்பெனிகள் மற்றும் யுத்தத்தினால் காயம்பட்ட வர்களுக்கான மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு மில்லியன்கள் நிதி வழங்கி இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. ஏதோ விவரம் புரியாதவர்கள் மோடி இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு; பாலஸ்தீனத்திற்கு இந்தியா எதுவும் செய்வதில்லை என்றெல்லாம் அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மோடி காசா விடயத்தில் வேடிக்கை பார்க்கிறார் என்று சிலர் அர்த்தம் இல்லாமல் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் இஸ்ரேலுக்கு நேருவும் நட்பு ஆதரவாக இருந்தார். அதற்குப் பிறகு இஸ்ரேல் கோல்டா மேரி பெண் பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தியும் நல்ல உறவு இருந்தனர்..இரு நாடுகளுக்கான பொருளாதார உறவுகள் மற்றும் இஸ்ரேலின் விவசாய வளர்ச்சிக்குக் குறிப்பாக அந்த உலர்ந்த நிலத்தில் வல்லுநர்களை கொண்டு விவசாய உற்பத்திகளைச் செய்வதற்கு இந்தியா- இஸ்ரேலுக்கு கூட்டு பயிற்சி செய்ததும் வரலாறு தான். வறட்சியான காலத்தில் எப்படி விவசாயம் செய்வது என்று இந்திராகாந்தி காலத்தில் இஸ்ரேல் சென்று இந்திய நிபுணர்கள் அறிந்து வந்ததும் உண்டு. சீனப் போர்காலத்தில் நேருவிற்கான ஆயுத உதவியையும் பாகிஸ்தானுடன் ஆன யுத்தத்தில் இந்திரா காந்திக்கும் ஆயுத உதவியையும் இஸ்ரேல் வழங்கியது. அதற்காக இந்திரா காந்தியை இஸ்ரேல் ஆதரவாளர் என்று சொல்ல முடியுமா? அதேபோலத் தானே பிரதமர் மோடியையும் பார்க்க வேண்டும். மோடி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டுக்குமே ஆன அந்நிய நாட்டு உறவுகளைச் சரியாக பேணிக் கொண்டுதான் வருகிறார். இதையெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் காசாவுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து என்ன செய்யப் போகிறார்கள்!? இதே சட்டமன்றத்தில் ஈழத் தமிழருக்கு தீர்மானம் போட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏதும் நடக்கவில்லை. பலவிதமாக முயற்சி எடுத்து டெசோவை நான் நடத்தினேன் எல்லோரையும் இணைத்துக் கூடப் பார்த்தேன். ஆனால் இன்றுவரை அதற்கு அடுத்து முதல்வர் அந்தப் பிரச்சினையை பற்றி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அக்கடா என்று தூக்கிப் போட்டுவிட்டு அவர் வேலையில் கவனமாக இருக்கிறார். இப்போது காசாவுக்குத் தீர்மானம் போட்டு மட்டும் என்ன செய்யப் போகிறார்? உள் சுவரைப்பூசாமல் வெளிச்சுவரைப் பூசுவதால் என்ன பயன்? திமுக மனிதாபிமானம் என்றால் அது ஈழத் தமிழருக்கும் காட்டப்பட்டிருக்க வேண்டும். #modigovernment_palastinam #GazaGenocide #GazaHolocaust #gaza_india #பாலஸ்தீனம் #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...