Friday, October 16, 2026

Oct 8, 2025 கடந்த திங்கட்கிழமை (6-10-2025)இலங்கையில் வரும்

 கடந்த திங்கட்கிழமை (6-10-2025)இலங்கையில் வரும் காலங்களில் நல்லிணக்கம் ஈழத்தமிழர்களுன் மனித உரிமைகள் அதற்கான பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை வலியுறுத்துவதற்கான தீர்மானம் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஈழத்தமிழர்கள் நலனில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 60-L 01 தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு JVPஅரசின் தீவிர முயற்சியை எந்த உலக நாடும் ஆதரிக்கவில்லை வாக்கெடுப்பு இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கையில் மனித உரிமைகள் ஆணையரின் பணிகளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வழி வகுத்திருக்கிறது. இலங்கையில் நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மாகாண கவுன்சில் தேர்தல்களை விரைந்து நடத்தி அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது சட்ட திருத்தத்தின் படி அனைத்து சரத்துகளும் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஊழல் மற்றும் பொருளாதாரச் சீரழிவிற்கு எதிராக தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை கைது செய்வதற்கெனத் தவறாகப் பயன்படுத்த பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இணைய பாதுகாப்புச் சட்டம் மற்றும் கருத்துரிமை சட்டங்களைப் பாதுகாத்து அதில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். பல புதைகுழிகளைத் தோண்டி ஆய்வு நடத்த சர்வதேச அளவில் நிதி மற்றும் மனித தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசு முன்கூட்டியே கோர வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள சுயாதீன அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் மேலும் வேகம் . ஒட்டுமொத்தமாக இலங்கையில் நல்லிணக்கம் மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இதற்கான வரவேற்பும் எதிர்ப்பும் இருந்தாலும் கூட இந்த தீர்மானத்தை வரவேற்றுத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சர்வதேச கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் ..2012 இல் இருந்து இது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பதினாறு ஆண்டுகள் கடந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றார். மனித உரிமைகள் ஆணையத்தின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் நடைமுறை நீட்டிக்கப்பட்டதற்கு ஐநாவிற்கான நிரந்தர இலங்கைத் தூதர் கண்டனமும் தெரிவித்துள்ளார். ஐநாவில் தங்களது வாதங்களை முன்வைத்த இலங்கை அரசின் பல கோரிக்கைகளை சர்வதேச நாடுகள் நிராகரிப்பதுடன் தங்களது கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.அங்கு மத நல்லிணக்கமும் மனித உரிமைகளும் சரியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் பல வருடங்களாக துக்கப்பட்டு வந்த மக்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். ஜனநாயகப் பண்புகளை கைவிட்டு பல்வேறு மனிதமரணங்களை உண்டாக்கிய இனப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவுவந்தே தான் ஆக வேண்டும். ஆனால் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்ளில் தொலை நோக்கம் வேண்டும். #UNHRC #இலங்கை #ஈழத்தமிழர்கள் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...