Thursday, July 4, 2019

#புவியரசியலில்இலங்கையில் உள்ள #திரிகோணமலை

#புவியரசியலில்இலங்கையில் உள்ள#திரிகோணமலை தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய கேந்திரப் பகுதியாகும். ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு அடுத்து இயற்கையான துறைமுகமாக அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து கடந்த ஒரு நூற்றாண்டுகளாக மேற்கு நாடுகள் மட்டுமல்ல, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் தன் வசமாக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள கடலில் கச்சா எண்ணெய் ஆய்வுக்கு ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுடைய வியாபார வசதியை பெருக்கிக் கொள்ளவும், தங்களுடைய ஆதிக்கத்தை இந்த மகா சமுத்திரத்தில் நிலைநாட்டவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் அடங்கும். இங்குள்ள ஈஸ்வரத் ஸ்தலத்தினுடைய மகிமையை சிங்களர்கள் அழித்து வருவது என்ற குற்றச்சாட்டு ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளது. 
அழகான ரம்மியமான திரிகோணமலையில் அதன் கடற்கரை இயற்கையின் அருட்கொடையாகும். இது தான் இராவணன் ஆண்ட பூமியான திருகோணமலை. கடலோடு சேர்ந்த உயர் மலை. சுந்தரமூர்த்தி நாயனாரால் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருப்பதிகம் பாடப்பெற்ற சிவத்தலம். இங்கு இராவணனின் அன்னையார் இலிங்கம் அமைத்து வழிபாடு ஆற்றுவதற்காக இராவணன் தன் புட்பக விமானத்தில் தினந்தோறும் கைலாயமலை சென்று மண்ணெடுத்து வருவாராம். இப்படி ஒரு நம்பிக்கை. இதுபோன்ற பல்வேறு வரலாற்றுப் பின்புலங்களைக்கொண்டு தூய தமிழும் பண்பாடும் சிறந்து விளங்கிய திருகோணமலைக்கு இன்னுமோர் சிறப்பம்சம் இருக்கிறது. அதுதான் தமிழீழ நாட்டின் தலைநகரம் என்ற தனிப்பெரும் அந்தஸ்து.
திருஞானசம்பந்தர்

திருகோணமலை கடற்படைத்தளம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பழமையான புகைப்படங்கள் சில…
இலங்கையில் உள்ள பெரிய கடற்படைத்தளமான திருகோணமலை கடற்படைத்தளம் பிரித்தானிய ஆட்சியின் கீழ் Royal Naval Dokyard எனும் பெயருடன் இயங்கிய போது 1900ம் ஆண்டு பழமையான புகைப்படங்களாகும்.

#திரிகோணமலை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-07-2019.

#புவியரசியலில்இலங்கையில் உள்ள#திரிகோணமலை தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய கேந்திரப் பகுதியாகும். ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு அடுத்து இயற்கையான துறைமுகமாக அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து கடந்த ஒரு நூற்றாண்டுகளாக மேற்கு நாடுகள் மட்டுமல்ல, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் தன் வசமாக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள கடலில் கச்சா எண்ணெய் ஆய்வுக்கு ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுடைய வியாபார வசதியை பெருக்கிக் கொள்ளவும், தங்களுடைய ஆதிக்கத்தை இந்த மகா சமுத்திரத்தில் நிலைநாட்டவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் அடங்கும். இங்குள்ள ஈஸ்வரத் ஸ்தலத்தினுடைய மகிமையை சிங்களர்கள் அழித்து வருவது என்ற குற்றச்சாட்டு ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளது. 
அழகான ரம்மியமான திரிகோணமலையில் அதன் கடற்கரை இயற்கையின் அருட்கொடையாகும். இது தான் இராவணன் ஆண்ட பூமியான திருகோணமலை. கடலோடு சேர்ந்த உயர் மலை. சுந்தரமூர்த்தி நாயனாரால் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருப்பதிகம் பாடப்பெற்ற சிவத்தலம். இங்கு இராவணனின் அன்னையார் இலிங்கம் அமைத்து வழிபாடு ஆற்றுவதற்காக இராவணன் தன் புட்பக விமானத்தில் தினந்தோறும் கைலாயமலை சென்று மண்ணெடுத்து வருவாராம். இப்படி ஒரு நம்பிக்கை. இதுபோன்ற பல்வேறு வரலாற்றுப் பின்புலங்களைக்கொண்டு தூய தமிழும் பண்பாடும் சிறந்து விளங்கிய திருகோணமலைக்கு இன்னுமோர் சிறப்பம்சம் இருக்கிறது. அதுதான் தமிழீழ நாட்டின் தலைநகரம் என்ற தனிப்பெரும் அந்தஸ்து.
திருஞானசம்பந்தர்

திருகோணமலை கடற்படைத்தளம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பழமையான புகைப்படங்கள் சில…
இலங்கையில் உள்ள பெரிய கடற்படைத்தளமான திருகோணமலை கடற்படைத்தளம் பிரித்தானிய ஆட்சியின் கீழ் Royal Naval Dokyard எனும் பெயருடன் இயங்கிய போது 1900ம் ஆண்டு பழமையான புகைப்படங்களாகும்.

#திரிகோணமலை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-07-2019.

Image may contain: cloud, sky, nature and water
Image may contain: ocean, sky, outdoor, nature and water
\Image may contain: people sitting, ocean, outdoor and water
Image may contain: sky, tree, outdoor and nature
Image may contain: outdoor
Image may contain: outdoor and water
Image may contain: outdoor and water

Wednesday, July 3, 2019

தனிமை - தனியாக இருப்பவனே கபடமற்றவன்.





தனிமை - தனியாக இருப்பவனேக படமற்றவன்.

மனிதன், ஆழ்ந்து தனிமைப்பட்டு போதலே அவனுடைய துயரத்தின் ஒரு காரணி. உங்களுக்கு தோழமை,இயற்கை , பேரளவு அறிவு ஆகியவை இருக்கலாம், நீங்கள் சமூக செயலில், சுறுசுறுப்பாக ஈடுபடலாம், அரசியலைப் பற்றி முடிவில்லாமல் பேசலாம் –பெரும்பாலானோர் பேசியே பொழுதை கழிப்பார்கள் என்பது வேறு விஷயம் – ஆனால், இந்த தனிமைப்படுத்தப்பட்டதோர் உணர்வு இருந்துகொண்டேயிருக்கிறது.
No photo description available.அதன் காரணமாக, மனிதன் வாழ்க்கைக்கு ஒரு முக்கியத்துவத்தை கண்டுபிடிக்கிறான். ஆனாலும், இந்த தனிமைப்படுத்தப்பட்டதோர் உணர்வு இருந்துகொண்டேதான் இருக்கிறது. எனவே, எந்தவொரு ஒப்பீடு செய்யாமல், அதைவிட்டு ஓட முயற்சிக்காமல், அதை மூடிமறைக்க முயற்சி செய்யாமல் அல்லது அதிலிருந்து தப்பிக்க முயலாமல், அதை உள்ளது உள்ளபடி நீங்கள் பார்க்க முடியுமா? அப்போது அந்த தனிமைப்படுத்தபட்ட உணர்வு, முற்றிலும் வேறு கோணமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.
Image may contain: 1 person, child and outdoorதனிமைப்படுத்தப்பட்டு போவது வேறு, தனிமையாக இருப்பது வேறு. நாம் தனிமையாகவே இருப்பதில்லை. ஆயிரக்கணக்கான தாக்கங்கள், உளவியல் மரபு, கலச்சாரம், பிராச்சாரங்கள் ஆகியவற்றின் விளைவுகளாக நாம் இருக்கிறோம். ஆயிரக்கான விஷயங்கள், நம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. நாம் தனிமையாக இருப்பதில்லை, நாம் இரண்டாம் தர மனிதர்களாக இருக்கிறோம்.
நாம் தனிமையாக இருக்கும்போது, நாம் குடும்பத்திலிருந்தாலும், எந்தவொரு குடும்பத்தை சாராதவராக, எந்தவொரு நாட்டையும் கலாச்சாரத்திற்கும் உட்படாமல், நம்மை குறிப்பிட்ட விஷயத்திற்கு அர்ப்பனித்து கொள்ளாமலும் இருப்போம்.
அப்போது, வெளிப்புறத்தே இருக்கும் நபர் போன்றதோர் உணர்வு வரும் – அனைத்து வித எண்ணங்கள், செயல், குடும்பம், நாடு முதலானவற்றிற்கு வெளிப்புறத்தே இருக்கும் நபர். இவற்றிலுருந்து முற்றிலும் தனியே வந்த அவனே, கபடமற்றவன்.
கபடமில்லா தன்மையால்தான் மனதை துயரத்திலிருந்து விடுவிக்க முடியும்.


Not good for healthy Federalism.... நீதிமன்றங்களில் தமிழ் மொழியும் வழக்காடு மொழியாக வேண்டும்


நீதிமன்றங்களில் தமிழ் மொழியும் வழக்காடு மொழியாக வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது தமிழகம் .ஆனால தமிழை மட்டும் தவிர்த்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்தி மற்றும் இந்தி அல்லாத தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி மற்றும் ஒடியா என சில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-07-2019
No photo description available.

நீரின்றி அமையாது உலகு - ஊற்றில் நீர் சுரக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள்.

இன்றைய(3-7-2019)தினமணியில் வெளிவந்துள்ள தண்ணீர் தட்டுப்பாடு குறித்த எனது பத்தி.
நீரின்றி அமையாது உலகு - ஊற்றில் நீர் சுரக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள்.
-----------------------------
வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளுக்கு சென்றபோது, அந்த கந்தக மண்ணில் கொளுத்தும் வெயிலில் ஊற்றில் நீர் சுரக்கும் என நம்பிக்கையில் வேலிக்காட்டில் மக்கள் காத்திருக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. வைப்பாற்றில் எப்பொழுது தண்ணீர் கிடைக்கும் என்று பிளாஸ்டிக் குடங்களும், தேங்காய் சிரட்டை, நீண்ட மூங்கில் கட்டைகளால் செய்யப்பட்ட சிரட்டையை வைத்துக் கொண்டு பெண்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் வேதனையடைகிறது.
குளங்கள் தூர்வாரப்படவில்லை. ஆற்று மணலை கொள்ளையடித்து விற்றாயிற்று. மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டோம். இயற்கையை கபளீகரம் செய்துவிட்ட பிறகு சாதாரண பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 12 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை. ஏன் கடல்நீரை குடிநீராக மாற்றி குளிர்பான நிறுவனங்களுக்கு அளிக்காமல் சுவை நீராக இருக்கும் தாமிரபரணி நீரை குளிர்பான நிறுவங்களுக்கு யாரோ வீட்டு சொத்தாக அள்ளி இறைத்ததால் வந்த வினை தான் இன்றைக்கு தண்ணீர் பஞ்சம். அது மட்டுமல்லாமல் தாமிரபரணியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு மட்டுமல்லாமல், கோவில்பட்டி, தூத்துக்குடி நகர், விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வரை உள்ள மக்களுக்கு தாமிரபரணி நீர் தாகத்திற்கு பயனளிக்கிறது.
தாகம் எடுக்கிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை. என்ன செய்ய? தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதே நிலை. இப்படியானதொரு கொடூர சூழ்நிலை வரும் என்று என்னுடைய சமூக வலைத்தளங்களில் 2017லிருந்து எச்சரித்து வந்திருக்கிறேன். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் ரேசனில் தண்ணீர் வழங்குவதையும், அங்குள்ள மக்களின் பாடுகளையும் சொன்னபோது, ஒரு மெத்தப் படித்தவர், மக்களின் பிரதிநிதியாக நீண்டகாலம் இருந்தவர். அரசியல் களத்திலும் பிரதானமாக இருப்பவர். என்னுடைய பதிவுகளை பார்த்து ஏகடியமாக, “இப்படியெல்லாம் தமிழ்நாட்டுக்கு வராதுங்க. சும்மா பயமுறுத்தாதீங்க” என்றார். அப்படி வரக்கூடாத கவலையான தண்ணீர் பஞ்சம் தமிழகத்திற்கு வந்துவிட்டது.
ஏனெனில், நம்மிடம் தொலைநோக்கு பார்வையில்லை. அவ்வப்போது, பிரச்சனை என்றால் மண்டை வலிக்கு அனாசின் மாத்திரை போடுவதுபோல, காவிரிக்கு, முல்லை – பெரியாறுக்கு பேசிவிட்டு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சிந்திக்காத, புரிதலில்லாத நெஞ்சங்களும் அதற்கான செயல்பாடுகளும் இல்லையென்றால் இப்படித்தான் தீர்க்க முடியாத தண்ணீர் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும். இப்போது நிலைமை என்ன?
தென்னமெரிக்காவில் கேப் டவுன் நகரில் கடந்த 4, 5 ஆண்டுகளாக ரேசனில் தண்ணீர் கொடுக்கும் நிலையைப் போன்ற நிலைமைகள் வந்துவிடக்கூடாது என்று போர்க்கால நடவடிக்கைகளிலாவது அனைவரும் ஒருங்கிணைந்து கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். தண்ணீர்த் தேவைக்கு அதிக விலை கொடுத்தாலும், உரிய நேரத்தில் தேவையான அளவு கிடைத்திராத பரிதாப நிலை. தண்ணீர் பஞ்சத்தினால் சட்ட ஒழுங்கும், வெட்டுக் குத்து கூட நடந்துவிடுமோ? என்ற அச்சங்கள் எழுகின்றன. லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கும் போது, மல்லுக்கட்டலும், முட்டல்களும் பெண்கள் மத்தியில் நடக்கின்ற நிலைமை. இராமாவரம் வட்டாரத்தில் இதனால் ஒரு பெண் மீது அரிவாள் வெட்டு நடந்துள்ளது.
சென்னையில் உணவு விடுதிகளும் மூடப்படும் நிலை, மருத்துவமனைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. சென்னையில் 13 மருத்துவமனைகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. நான் வசிக்கும் பாலவாக்கம் தண்ணீர் ஒரு காலத்தில் சுவையான தண்ணீராக இருந்தது. அது தற்போது மாறி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல் நீர்மட்டம் உள்ளே வந்துவிட்டது. கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் நிலத்தடி நீரில் கடல்நீர் சேர்ந்து தான் அந்த தண்ணீர் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆகிவிட்டது.
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெமிலி, பேரூர் போன்ற இடங்களில் செயல்பாட்டிற்கு வந்தது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் உப்பு நீக்கப்பட்டு கால்சியம், மெக்னீசியம், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், புளோரைடு போன்ற முக்கிய சத்துகள் நீரில் திரும்பவும் சேர்க்கப்பட்டு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மெக்சிகோவில் தான் பெரிய திட்டமாக அமைந்துள்ளது. அடுத்து அரபு நாட்டில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் 20,516 உப்புநீரை நன்னீராக்கும் ஆலைகள் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரி மழை 96 செ.மீ. ஆகும். கடந்த 2018இல் 81 செ.மீ. தான் மழை பெய்தது. கடந்த 2019 துவக்கத்திலிருந்து மே மாதம் வரை 10லிருந்து 15 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 3.4 செ.மீ. மழை தான் பெய்தது. இந்த சிக்கல் வருமென்று தெரிந்தும் மாநில அரசும் மெத்தனப் போக்கில் இருந்தது. சென்னை குடிநீர் வாரியத்திற்கு ரூ. 122 கோடியும், மற்ற பகுதிகளில் குடிநீர் விநியோகிக்க ரூ. 36 கோடியும் ஒதுக்கி அதை முறைப்படுத்தவுமில்லை, கண்காணிக்கவும் இல்லை. அதை மாநில அரசு ஒருங்கிணைக்கவும் இல்லை. கிராமப்புறங்களில் புதிய ஆள்துளை குடிநீர்க் கிணறுகள், பழுதடைந்த குடிநீர் குழாய்கள், பாழடைந்த குடிநீர் கிணறுகள் ஆகியவற்றை சீர் செய்திருக்க வேண்டும். அதிலும் சரியான கவனிப்பில்லாமல் மெத்தனப் போக்கில் அரசு நிர்வாகம் இருப்பதும் ஒரு காரணம்.
இதை குறித்து அரசு அதிகாரிளை தொடர்புக் கொண்டாலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொலைபேசியை கூட எடுப்பதில்லை. இராமநாதபுரத்தில் குடிநீருக்கு பெரும் திண்டாட்டம் தான். வைகை ஆறு, பெரியகுளத்தில் ஊற்றை தோன்றி தண்ணீர் வரும் வரை மணிக்கணக்கில் காத்திருந்து கிடைத்த தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை. தண்ணீர் வந்தாலும் வரும், வராமலும் இருக்கும், சொல்வதற்கில்லை. இதே நிலை தான் திண்டுக்கல்லிலும் உள்ளது. இந்த ஊருக்கு ஒரு காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் பெண் கொடுக்க மாட்டார்கள் என்று வேடிக்கையாக பேசுவது உண்டு.
தேனி நிலத்தடி நீர் அதிகமுள்ள வட்டாரம் என்றாலும் அங்கும் குடிநீர் பஞ்சமே. காவிரி பாயும் திருச்சியிலும் 1000 அடிக்கு மேலாக போர்வெல் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதேபோல, தஞ்சையிலும் காவிரி – கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் இப்போது தேவைக்கு போதுமான தண்ணீர் வருவதில்லை. இங்குள்ள திருமானூர் நீரேற்ற நிலையத்தின் கிணறுகளில் வெறும் 5 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தென்பென்னையாறு, மணிமுக்தாறு, கோமுகியாறு, மலட்டாறு, கெடிலம் போன்ற ஆறுகளெல்லாம் வற்றி வறண்டுவிட்டது. கள்ளக்குறிச்சி, செஞ்சி, விழுப்புரம், விருத்தாசலம், சிதம்பரம், கடலூர் வரை தண்ணீர் பற்றாக்குறை. புதுச்சேரி மாநிலத்தில் பாகூர் கொம்யூனிலும் நீரளவு குறைந்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பெரும் நெருக்கடி. திருவண்ணாமலை, வெயில் வாட்டியெடுக்கும் வேலூரிலும் தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. காவிரியில் நீர் வற்றிவிட்டதால் சேலத்துக்கு வரவேண்டிய குடிநீரும் முறையாக வருவதில்லை. சேலத்தில் நிலத்தடி நீரும் இல்லாததால் 270 கோடி ரூபாயில் 2015இல் துவக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்பாட்டில் இல்லை.
தருமபுரி மாவட்டத்திலும் ஒகேனக்கல் தண்ணீர் வரத்தில்லாமல் குடிநீர் பற்றாக்குறை. அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் வறட்சியினால் கிடைக்க வேண்டிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதில்லை. வரும் தண்ணீரை அங்குள்ள அரசு சிமெண்ட் ஆலைகள் எடுத்துக் கொள்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வறண்ட குடிநீர் கிணறுகளும் ஏரி, குளங்களால் 10 நாட்களுக்கு ஒரு முறை கூட தண்ணீர் வழங்குதல் கிடையாது. கரூர் வட்டாரத்திலும் பெரும் பிரச்சனை தான். தொழில் பகுதியான திருப்பூரில் 1000 ரூபாய்க்கு 1000 லிட்டர் வாங்க வேண்டிய நிலையில் தொழிற்கூடங்கள் உள்ளன. கோவையிலும் 2 வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி நீரின் வரத்தும் பற்றாக்குறையில் தான் உள்ளது. மழை வளம் அதிகமுள்ள நீலகிரியிலும் குடிநீர் திண்டாட்டம் தான். ஊட்டிக்கு பார்சன் வேலியிலிருந்து தண்ணீர் கிடைக்கக் கூடிய ஏற்பாட்டை செய்யலாம். அதேபோல, குன்னூருக்கு ரேலியா அணையிலிருந்தும், கூடலூர், பந்தலூர், கோத்தகிரிக்கு தண்ணீர் கிடைக்கக் கூடிய வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. மேட்டுப் பகுதியில் தண்ணீர் கிடைக்கக் கூடிய வகையில் திட்டங்கள் வேண்டும். ஊட்டி சுற்றுலாத் தலம் என்பதால் விடுதிகளிலும் நீர் வேண்டும். சுற்றுலாப் பயணிகளும் சிரமமாக உள்ளன.
மதுரை மாநகரிலும் வைகை அணையின் தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக 1.10 கோடி லிட்டரும், மற்ற வகையில் 4.90 கோடி லிட்டரும் மற்ற நீராதாரங்களின் மூலமாக கிடைத்து வந்தது.
ஆனால், இந்தளவு கூட கிடைக்காமல் பற்றாக்குறையில் உள்ளது. வானம் பார்த்த விருதுநகர் மாவட்டத்திற்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தான் கைகொடுத்தது. எனவே இங்கு இது தான் பிரச்சனை. திருநெல்வேலி மாவட்டத்திலும் தாமிரபரணி நீர் குறைந்துவிட்டதாலும், மற்ற மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தாமிரபரணி நீர் செல்வதால் இங்கு பெரும் குடிநீர் தட்டுப்பாடு.
துவக்கத்திலேயே சொன்னவாறு தூத்துக்குடி ஒரு வானம் பார்த்த பூமி. இங்கும் பெரும் தட்டுப்பாடு தான். பசுமையான கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியபின் சற்று மழை பெய்ததால் முழுமையாக தட்டுப்பாடு தீரவில்லை என்றாலும், தென்மேற்கு பருவக்காற்று மழையினால் ஓரளவிற்கு இந்த மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சனை இருப்பதாக சொல்கின்றனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி பகுதிகளில் பெரும் தட்டுப்பாடு. ஆனால், பொன்னேரி, காஞ்சிபுரம் பகுதிகளிலிருந்து தான் தண்ணீர் எடுத்து வந்து சென்னைக்கு கடந்த காலத்தில் விற்பனை செய்ததுண்டு.
இப்படி தமிழகம் முழுவதும் வறட்சியும், குடிநீருக்கே தட்டுப்பாடு என்று நிலையில் தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 1829 குடிமராமத்து பணிகளுக்காக ரூபாய். 500 கோடி ஒதுக்கியுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த நீர்நிலைகள் உரிய முறையில் குடிமராமத்து செய்யப்படுமா என்பது தான் நமது கேள்வியே. மண் அள்ளிப் போடும் இந்த வேளையில் அரசு பணத்தை அரசு ஒதுக்கிய பணிகளுக்கு செய்யாமல் அந்த பணத்தை இடைத்தரகர்கள் கொண்டு செல்லக் கூடாது. தமிழகத்தில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடக்கும் என்று கூறினாலும், நீர்நிலைகள் பாதுகாப்பு பணிகள் சீராக நடந்திடவும் கண்காணிப்பும் தேவை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழ 60,000 நீர்நிலைகள் இருந்தன. அது தற்போது பாதி எண்ணிக்கையில் தான் ஏரிகளும், குளங்களும், நீர்நிலைகளும் இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்றன. தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆயக்காட்டு மற்றும் குடிமராமத்து பணிகளை முறையாக செய்யவும் எனது பொது நல வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீர்நிலைகளை அழித்தோம், மரங்களை அழித்தோம், காடுகளை அழித்தோம். அதன் விளைவுகள் தான் இன்றைய குடிநீர் தட்டுப்பாடு. உலகில் 122 நாடுகளின் தரவரிசையில் தண்ணீர் பற்றாக்குறை, நல்ல தண்ணீர் கிடைக்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் கடைசியாக 120வது இடத்தில் இருப்பது ஒரு வேதனையான விடயமாகும். இப்படி தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று ஐ.நா. மட்டுமல்ல, முன்னால் இயங்கிய திட்டக்குழுவும், தற்போதைய நிடி ஆயோக் எச்சரிக்கை விடுத்ததெல்லாம் நாம் புறந்தள்ளினோம்.
நிலத்தடி நீரை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை. நிலத்தடி நீரானது மேல்மட்ட நிலத்தடி நீர், உட்புற நிலத்தடி நீர் என்று இரு வகையுண்டு. இது குறித்தெல்லாம் வெள்ளந்தி விவசாயிகள் அறிவார்கள். ஆனால் வெற்றுச் சவடால் பேசுபவர்கள் இது குறித்தெல்லாம் அறிய முற்பட மாட்டார்கள். இது தான் பொதுவாழ்வு. உலகளவில் சோமாலியாவும், மெக்சிகோவும் தான் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்தது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் தண்ணீர் பஞ்சத்தில் மிகுதியாக பாதிக்கப்பட்டது. இந்தளவில் இந்தியாவில் பெங்களூரு, சீனாவின் பீஜிங், இந்தோனேசியாவின் ஜகார்த்தா, எகிப்தின் கெய்ரோ, மாஸ்கோ, இஸ்தான்புல், மெக்சிகோ, லண்டன், டோக்கியோ, மியாமி போன்ற நகரங்களும் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. நம்மிடம் முறையான தண்ணீர் விநியோக கொள்கையும், செயல்பாடுகளும் ஆய்வு செய்து இன்றைய தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப முறைப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவப் பேராசான் குறளின் வழியாக நடந்து நீரை பாதுகாப்போம். எதிர்காலத்தின் தேவையை ஒழுங்குபடுத்துவோம் என்ற வைராக்கியம் இல்லையென்றால் மானுடம் எதிர்காலத்தில் தழைக்காது என்பதை இந்த அகிலம் உணர வேண்டும்.

-செய்தித்தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com


#கொடுமணல்அகழ்வாராய்ச்சி




Image may contain: 2 people, people smiling, people standing, cloud, sky, outdoor and nature

——————————————-

நேற்று (1-7-2019) நாமக்கல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரோடு வழியாக கோவை சென்றபோது சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல் அகழ்வாராய்ச்சி செய்த பகுதிகளை காண நண்பர் சென்னிமலை சேகர், தம்பி கோபால் அழைத்துச் சென்றனர். விரிந்த பெரும்பரப்பில் இரண்டு, மூன்று மணி நேரம் அப்பகுதியில் இருந்து அந்த அகழ்வாராய்ச்சி களத்தில் இருந்து அறியும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இவ்வட்டாரத்தில் அரச்சலூரில் இசை சார்ந்த பல அகழ்வாராய்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவனந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருட்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பை தந்தது. இன்னும் பல தரவுகள் தோண்டி எடுத்தால் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது கொடுமணல் கிராமம். கொடுமணல் பகுதி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகத்திற்கு வெளிவரவில்லை.
இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது. தொல்லியல் ஆய்வு அதிகாரிகளின் குழுவின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் கொடுமணல் கிராமத்தில் முகாம் அமைத்துள்ளனர். மேலும் கொடுமணலில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யவுள்ள பகுதியில் 30 தொழிலாளர்கள் மூலம் தோண்டும் பணியை தொடங்கி இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியில் மண் தோண்டும் பணி தற்போது நடந்து வருகிறது.
Image may contain: 1 person, standing, outdoor and natureஇந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபைக் காப்போம் என்ற முக்கிய இரண்டு பணிகளை இந்திய தொல்லியல் ஆய்வகம் செய்து வருகிறது. அதன்படி கொடுமணல் பகுதியில் முகாமிட்டு ஆய்வு தொடங்கி இருக்கிறார்கள். வருகிற ஏப்ரல் மாதம் வரை இங்கு பணிகள் நடைபெறும் கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினரின் ஆய்வு தொடங்கியிருப்பது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின் போது கல்லறைகள், சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
இங்கு முதல் ஆய்வினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985 ஆம் ஆண்டு நடத்தியது. பின்னர் 1986, 1989,1990ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தியது. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்களில் தோண்டப்பட்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அகழாய்வு நடந்தது.
அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு கருதப்படுகிறது. காரணம் ஒரே பகுதியில் 15 அகழிகள் தோன்டுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இது இந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. காரணம் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளும் வெவ்வேறு விதமாக உள்ளன.
இறுதியாக புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சி நடத்தியது. இந்த ஆராய்ச்சியில் மாணவர்கள் அப்போது கொடுமணல் பகுதிக்கு சென்று வந்த காலங்களில் மழை பெய்தபிறகு மழையினால் மறுநாள் நீரோடைகள் ஓடிய வழியில் கற்கால முத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது தவிர ஆய்வுகளின் போது கிடைத்த பொருட்கள் கிமு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்தது.
இரும்பு பொருட்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டு மணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றை கொண்டு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் ஆதிச்சநல்லுர், கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம்,கொடுமணல் போன்ற தொன்மைமிக்க பல இடங்களில் வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மூலமாகவே பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே அரசும் இதில் கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடங்களில் முறைப்படி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
"A curious coincidence is that a pristine #Roman coin from the reign of Julius #Caesar (mid-1st century BCE) was once dug up in #Tiruppur, and it has further been concluded that two millennia ago, the village of #Kodumanal, 20 km downriver, was a prominent exporter of cotton which clothed Rome, maybe even supplying the fabric for those togas they wore when they partied. This area was numero uno already then."
#கொடுமணல்அகழ்வாராய்ச்சி
#Kodumanal

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-07-2019.
Image may contain: one or more people and shoesImage may contain: outdoor and nature
Image may contain: cloud, sky, outdoor and nature
Image may contain: sky, outdoor and nature
Image may contain: plant, outdoor and natureImage may contain: 2 people, people standing and outdoorNo photo description available.
Image may contain: food
No photo description available.
No photo description available.
No photo description available.

Monday, July 1, 2019

"பாஞ்சாலங்குறிச்சியின் வீரசரிதம்" நூல் அறிமுகவிழா

நான் பதிப்பித்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைச் சொல்லும் "பாஞ்சாலங்குறிச்சியின் வீரசரிதம்" நூல் அறிமுக விழா நேற்று (30-06-2019 / ஞாயிற்றுக் கிழமை) இரவு நாமக்கல்,லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைக் களம் விழாவை சிறப்பாக நடத்தியது.
Image may contain: 5 people, people smiling, people standing and indoorஇந்த நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர். கே.பி.இராமலிங்கம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன், விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் திரு.கொ. நாகரஜன், திரு. புலிகேசி. ரா. பிரணவகுமார், சென்னை மண்டலம், விடுதலைக்களம், கோவையை சேர்ந்த தொழிலதிபர், திரு. C.J.ராஜ்குமார், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் திரு. வே. வேங்கட்ட விஜயன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர், திரு. உ. தனியரசு, திரு. பி. ஏ. சித்திக், வழக்கறிஞர். பழனிசாமி, திரு. எம்.பி. சதாசிவம், வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ, திரு. மு. பழனிசாமி, திருமதி. தனமணி வெங்கடபதி, திரு. பி. முத்துமணி, சின்னபெத்தம்பட்டி சி. பாலு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுக்கு நாகராஜன் தலைமை தாங்கினார். முழுமையான விழா நிகழ்வுகளையும், பேச்சுகளையும் பின்னர் பதிவு செய்கிறேன்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-07-2019.
Image may contain: 1 person, smiling

Image may contain: 2 people, people standing
Image may contain: 6 people, people smiling, people standing and wedding
Image may contain: 9 people, people smiling, people standing
Image may contain: 3 people, people smiling, people standing
Image may contain: 10 people, people smiling, people standing and wedding
Image may contain: 4 people, people sitting and text
Image may contain: 4 people, people standing and text
Image may contain: 2 people, people smiling, text
Image may contain: 8 people, people smiling, people sitting
Image may contain: 10 people, people smiling
Image may contain: 13 people, people smiling, people sitting and crowd


Image may contain: 5 people, people standing and indoor
Image may contain: 5 people, people on stage and people standingImage may contain: 3 people, people standing and indoor
Image may contain: 7 people, people smiling, people on stage, people standing, beard and indoor
Image may contain: 3 people, people on stage and people standing
Image may contain: 3 people
Image may contain: 7 people, people standing and indoor
Image may contain: 1 person, standing and beard
Image may contain: 4 people, people standing and indoor
Image may contain: 1 person, on stage, wedding and indoor
Image may contain: one or more people and indoor
Image may contain: 1 person, indoor

விவசாயிகள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது?

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-07-2019

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...