Wednesday, July 3, 2019

#கொடுமணல்அகழ்வாராய்ச்சி




Image may contain: 2 people, people smiling, people standing, cloud, sky, outdoor and nature

——————————————-

நேற்று (1-7-2019) நாமக்கல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரோடு வழியாக கோவை சென்றபோது சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல் அகழ்வாராய்ச்சி செய்த பகுதிகளை காண நண்பர் சென்னிமலை சேகர், தம்பி கோபால் அழைத்துச் சென்றனர். விரிந்த பெரும்பரப்பில் இரண்டு, மூன்று மணி நேரம் அப்பகுதியில் இருந்து அந்த அகழ்வாராய்ச்சி களத்தில் இருந்து அறியும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இவ்வட்டாரத்தில் அரச்சலூரில் இசை சார்ந்த பல அகழ்வாராய்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவனந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருட்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பை தந்தது. இன்னும் பல தரவுகள் தோண்டி எடுத்தால் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது கொடுமணல் கிராமம். கொடுமணல் பகுதி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகத்திற்கு வெளிவரவில்லை.
இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது. தொல்லியல் ஆய்வு அதிகாரிகளின் குழுவின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் கொடுமணல் கிராமத்தில் முகாம் அமைத்துள்ளனர். மேலும் கொடுமணலில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யவுள்ள பகுதியில் 30 தொழிலாளர்கள் மூலம் தோண்டும் பணியை தொடங்கி இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியில் மண் தோண்டும் பணி தற்போது நடந்து வருகிறது.
Image may contain: 1 person, standing, outdoor and natureஇந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபைக் காப்போம் என்ற முக்கிய இரண்டு பணிகளை இந்திய தொல்லியல் ஆய்வகம் செய்து வருகிறது. அதன்படி கொடுமணல் பகுதியில் முகாமிட்டு ஆய்வு தொடங்கி இருக்கிறார்கள். வருகிற ஏப்ரல் மாதம் வரை இங்கு பணிகள் நடைபெறும் கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினரின் ஆய்வு தொடங்கியிருப்பது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின் போது கல்லறைகள், சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
இங்கு முதல் ஆய்வினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985 ஆம் ஆண்டு நடத்தியது. பின்னர் 1986, 1989,1990ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தியது. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்களில் தோண்டப்பட்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அகழாய்வு நடந்தது.
அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு கருதப்படுகிறது. காரணம் ஒரே பகுதியில் 15 அகழிகள் தோன்டுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இது இந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. காரணம் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளும் வெவ்வேறு விதமாக உள்ளன.
இறுதியாக புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சி நடத்தியது. இந்த ஆராய்ச்சியில் மாணவர்கள் அப்போது கொடுமணல் பகுதிக்கு சென்று வந்த காலங்களில் மழை பெய்தபிறகு மழையினால் மறுநாள் நீரோடைகள் ஓடிய வழியில் கற்கால முத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது தவிர ஆய்வுகளின் போது கிடைத்த பொருட்கள் கிமு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்தது.
இரும்பு பொருட்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டு மணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றை கொண்டு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் ஆதிச்சநல்லுர், கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம்,கொடுமணல் போன்ற தொன்மைமிக்க பல இடங்களில் வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மூலமாகவே பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே அரசும் இதில் கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடங்களில் முறைப்படி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
"A curious coincidence is that a pristine #Roman coin from the reign of Julius #Caesar (mid-1st century BCE) was once dug up in #Tiruppur, and it has further been concluded that two millennia ago, the village of #Kodumanal, 20 km downriver, was a prominent exporter of cotton which clothed Rome, maybe even supplying the fabric for those togas they wore when they partied. This area was numero uno already then."
#கொடுமணல்அகழ்வாராய்ச்சி
#Kodumanal

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-07-2019.
Image may contain: one or more people and shoesImage may contain: outdoor and nature
Image may contain: cloud, sky, outdoor and nature
Image may contain: sky, outdoor and nature
Image may contain: plant, outdoor and natureImage may contain: 2 people, people standing and outdoorNo photo description available.
Image may contain: food
No photo description available.
No photo description available.
No photo description available.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...