இன்று திண்டுக்கல்லிலிருந்து வழக்கறிஞர் கேசவன் அவர்கள் #பனை ஓலை பெட்டியில் கட்டியனுப்பிய சிறுமலை வாழைப்பழம் கிடைத்தது. பிளாஸ்டிக் பை இல்லாத இப்படியான பனைஓலையில் பழங்கள் அனுப்பப்பட்டதை பார்க்க முடிந்தது. திண்டுக்கலில் மட்டும்தான் இப்பொழுது நான் அறிந்த வரை இது போன்ற பனை ஓலைப் பெட்டிகள் வழக்கத்தில் உள்ளது. வாழை மரச் சருகுகளை கொண்டு மலை வாழைப் பழங்களை சுற்றி பக்குவமாக வைத்து அந்த பழங்கள் அழுகிவிடாமல் அந்த ஓலைப் பெட்டியில் நேர்த்தியாக கட்டித் தருவார்கள். லண்டனிலிருந்து வரும் வெள்ளைக்காரர் நனபர் திரு பின்னி இந்த ஓலை பெட்டிகளை கண்டு வியப்படைந்து வாங்கிச் செல்வதுண்டு. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் நாம் கவரப்பட்டுவிட்டோம். 1960களில் கோவில்பட்டி, கீழீஈரால் ,கழுகுமலை, சங்கரன்கோயில், திருவேங்கடம், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம்,அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்பட்டி மிட்டால் இனிப்பு மற்றும் சேவு,வருவல், ஒம்ப் பொடி பல கார வகைகளை இது போன்ற ஓலைப் பெட்டியிலோ அல்லது கூம்பு வடிவிலான செய்தித்தாளில் சன்னமான சணல் கொண்டு கட்டி தருவார்கள். ஓலைப்பெட்டியில் கட்டிக் கொடுப்பதை பிற்காலத்தில் பிளாஸ்டிக் பைகள் ஆக்கிரமித்தன. தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ஓலைப் பெட்டிகள் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.
#பனைஓலைபெட்டியில்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
28-07-2019
No comments:
Post a Comment