Thursday, July 11, 2019

#வைகோவிற்கு எதிராக மனு கொடுக்கும் அளவிற்கு இந்த நபருக்கு என்ன தகுதிகள் இருக்கிறது??



#வைகோவிற்கு எதிராக மனு கொடுக்கும் அளவிற்கு இந்த நபருக்கு என்ன தகுதிகள் இருக்கிறது??
————————————————-
*#தகுதியேதடை*’ என்று நான் அடிக்கடி சொல்வது கேட்டு பலர் முகம் சுளிப்பார்கள். அது எனக்கும் தெரியும். எந்தவொரு அரசியல் களப்பணியும் இல்லாமல், பொது வாழ்வில் நீண்டகால அனுபவமும் இல்லாமல் அரசியலில் சேர்ந்த உடன் மந்திரி,எம்.பி, எம்.எல்.ஏ, ஆனோம் என்பது தான் இன்றைய யதார்த்தமாக நிலையாக உள்ளது. அரசியல்கட்சிகளும்குறிப்பிட்டவர்களை தான் வளர்த்தெடுக்கின்றன.

என்ன செய்ய?
நீண்டகாலபணி.தியாகம்,உழைப்பு,
தகுதி, திறமையின் மூலம் இயக்கத்திற்கு பலம் சேர்க்க வேண்டியதில்லை என்ற நிலை. இப்படியான சந்தை அரசியலில் வந்துவிட்டதால் தான் வைகோ மாநிலங்களவையில் பதவியேற்க கூடாதென்று தைரியமாக கடிதம் கொடுக்கிறார் ஒரு நபர். 
மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியும் அதை ஏற்றுக் கொண்டு இந்திய தேர்தல் ஆணையமும் இதைகுறித்து எந்த சர்ச்சையும் எழுப்பாத நேரத்தில் தமிழக உரிமைகளுக்காக போராடும் வைகோவிற்கு எதிராக பிழைகளோடு மனு கொடுக்கும் அளவிற்கு இந்த நபருக்கு என்ன தகுதிகள் இருக்கிறது என்று தெரியவில்லை. சட்டங்கள் இருக்கலாம். சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும். வைகோவின் மனுவை ஏற்றுக் கொண்டபின் ஊடக வெளிச்சத்திற்காக ஏதோ தான்தோன்றித்தனமாக செய்து கொண்டு அரசியல் அங்கீகாரம் பெறுவதெல்லாம் வெட்கப்பட வேண்டிய விடயம்.

அவருக்கென்ன தகுதி, நீண்டகால உழைப்பு என்ன இருக்கிறது.எனது அரசியல்கால வயது கூட இல்லாத நபரெல்லாம் வைகோவிற்கு எதிராக வெங்கய்ய நாயுடுவிடம் கடிதம் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
என்ன செய்ய?
இதற்கு யார் காரணம். இப்படியே வாழட்டும் தமிழகம். என்னுடைய பதிவால் யாருக்காவது வருத்தம் ஏற்பட்டால் அதை பற்றி எனக்கு அக்கறை இல்லை. யாரையும் தாக்கி தனிப்பட்ட வகையில் புண்படுத்தும் அளவிற்கு எனக்கு எவ்வித வன்மையும் இல்லை. என்னுடைய
நீண்டகால அரசியல் பணிகளின் அனுபவத்தின்படி சொல் வேண்டியது எனது கடமை.
அப்படி நான் சொல்லவில்லை என்றால் அதுவரலாற்று பிழையாகிவிடும்.
விதியே, விதியே தமிழ் சாதியே.......

#தகுதியேதடை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-07-2019
Image may contain: text

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...