#
......
......
————————————————-
வசந்தமாளிகை திரைப்படம் கல்லூரியில் படித்த காலத்தில் திருநெல்வேலியில் பார்த்து ரசித்தது. #வாணிஸ்ரீகொண்டை என்று அந்தக் காலத்தில் பிரபலமான அவரின் முடி அலங்கார ஸ்டைல்.இது பலரை ரொம்பவே ஈர்த்தது. வாணிஸ்ரீ கொண்டை, புடவைக்கட்டு, அவரின் முகபாவனைகள்,வசன உச்சரிப்பு,நடை மற்றும் நடிப்பு என எல்லாமே தனித்துவமுக இருந்தன.....
வசந்த மாளிகையின் மயக்கமென்ன பாடலின் ஒவ்வொரு காட்சியிலும் வாணிஸ்ரீயின் கொண்டையும் அவரின் புடவை மடிப்புகளும் காட்சிக்கு இன்னும் அழகூட்டுவதைப் பார்க்கலாம். சிவாஜியுடன் கழுத்து பகுதியில் சாய்ந்த அனைக்கும் காட்சி அழகானது.
அதேபோல் சிவாஜியுடன் கோபமாகப் பேசிவிட்டு, விறுவிறுவென நடந்து போகும்போது, வாணிஸ்ரீயின் நடிப்பு அருமை.
இந்தப் படத்தில் அவரின் புடவை ஸ்டைல் எப்படியிருக்கும் கொண்டை அலங்காரம் எப்படியிருக்கும் என்பதற்காகவே, அவரின் படங்கள் ரிலீசானதும் பெண்கள் கூட்டத்தை ஈர்த்தது.பிறகு படம் பார்த்த பெண்கள், அந்தக் கூந்தல் அலங்காரத்தை தாங்களும் செய்து கொள்ள முயற்சி மேற்கொள்வார்கள்.இது ப்ளாஷ்பேக்.....
#ksrpost
21-7-2019.
No comments:
Post a Comment