கலாம் நினைவுகள்......
——————————————-
இன்று அப்துல் கலாம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினம்.
இவரது *இந்தியா 2020* என்ற நூல் மிகவும் பிரபலமானது. 2001ஆம் ஆண்டில் கலாம் அவர்கள் என்னிடம் இந்த நூலுக்கு அணிந்துரை கேட்டேன் என்று தலைவர் கலைஞரிடம் சொல்லுங்கள் என்றார். அந்த புத்தகத்தின் நகலையும, அவரின் கடித்தையும் என் மூலம் மாலை பொழுது கொடுத்து அனுப்பினார்
கலைஞரிடம் அறிவாலயம் வந்த போது அன்றே மாலையே நான் கொடுத்தேன். அடுத்த நாள் காலையிலேயே அணிந்துரை வழங்கினார் தலைவர் கலைஞர். அந்த அணிந்துரையை எடுத்துக் கொண்டு நானும், பத்திரிக்கையாளர் மை.பா.நாராயணனும் கிண்டி அண்ணா பல்கலைக்கழத்தில் இருந்த கலாமிடம் சென்று கொடுத்த போது, நேற்று மாலை தான் கேட்டேன். இன்றைக்கு காலையில் கைக்கு வந்துவிட்டதே. கலைஞர் தேனீ அல்ல. இவர் தான் இராணித் தேனீ என்று கலைஞரை பாராட்டி சிலாகித்தார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-07-2019.
No comments:
Post a Comment