#பழிவாங்கலாமா? மாணவ மாணவியர் விருப்ப பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
————————————————-
விருப்ப பாடப்பிரிவு வழங்காமல் கட்டாயப்படுத்தி கம்ப்யூட்டர் பிரிவு வழங்கியதால் படிக்க முடியாமல்ஆடு மேய்க்கும் தொழிலுக்கும், விவசாய வேலைக்கும், கடை வேலைக்கு பொட்டலம் மடிக்கவும் மாணவ மாணவியர் சென்று விட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பூதலாபுரம் கிராமத்தில் கடந்த 2010 முதல் அரசு மேல்நிலை இயங்கி வருகிறது பிளஸ் 1ல் மேத்ஸ், கம்ப்யூட்டர், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இப்பள்ளியில் 10 ம்வகுப்பு கடந்தாண்டு படித்த அமிர்தகணேசன், வீரபிரபாகரன்,வைஷ்ணவி, பானுமதி, அரவிந்த், இரகுபதி. உத்திரகுமார், வீரலட்சுமி, வினோதினி,ராஜலட்சுமி ஆகிய மாணவ மாணவியரில்10ம் வகுப்பு இறுதி தேர்வில்300 மதிப்பெண்ணுக்கு குறைவாக 5 பேரும், 300 மதிப்பெண்னுக்கு கூடுதலாக சிலரும் உள்ளனர் . விருப்ப பாடமாக வரலாறு பாடப்பிரிவு தருமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டனர்.தலைமை ஆசிரியரோ மேற்கண்டவர்களுக்கு கம்ப்யூட்டர் பாடப்பிரிவை ஒதுக்கீடு செய்து விட்டார். ஏற்கனவே பாடப்பிரிவுகள் கடினமாக இருந்ததால் அதிக மதிப்பெண் இவர்களால் பெற முடியவில்லை. இந்நிலையில் கடினமான கம்ப்யூட்டர் பாடப்பிரிவை கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்வது ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சியில் மட்டுமல்ல எதிர்காலத்தில் வாழ்க்கை பாதிக்கும். இதே பள்ளியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் அயல் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் பிரிவு ஒதுக்கீடு செய்யாமல், அவர்கள் கேட்ட வரலாறு பாடப்பிரிவை மறுப்பேதும் தெரிவிக்காமல் ஒதுக்கீடு செய்துள்ளனர் இப்பள்ளியில் படித்து பிளஸ் 1ல் கேட்ட பாடப்பிரிவை தராததால் விக்னேஸ் குமாரலிங்கபுரம் என்ற மாணவன் தான் கேட்ட வரலாறு பாடப்பிரிவு தராததால்பள்ளிப் படிப்பை விட்டு விட்டு படிக்க முடியாமல் கடைக்கு வேலைக்கு சென்று விட்டான். தவிர இன்றும் 4 மாணவ மாணவியர் கம்ப்யூட்டர் பாடம் படிக்க முடியாமல்பள்ளிக்கு வரவில்லை.இப்பிஞ்சுகள் விளாத்திகுளம் வந்து சென்றால் சென்னைக்கு வந்து சென்றது போல் கருதுவார்கள்.அவர்களை பழிவாங்கலாமா? இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சிலர் படிக்க முடியாமல் திசைமாறிச் செல்லும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாணவ மாணவியர் நலன்கருதி விருப்ப பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்து எதிர் கால இளைய தலைமுறையினரை காப்பாற்ற மாவட்ட ஆட்சித் தலைவர், முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
Muscat Ssavraja
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-07-2019
No comments:
Post a Comment