*இனிமேல் நீதிபதிகளை ‘சார்’ என்றே அழைக்கலாம்*
---------------------------------
நீதிமன்றங்களில் நீதிபதிகளை வழக்காடும்போது ‘மை லார்ட்’ என இனி அழைக்க வேண்டாம். நீதிபதிகளை ‘சார்’ என்றே அழைக்கலாம் என்று வழக்கறிஞர்களுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 1982, 83 காலகட்டம் என்று நினைக்கிறேன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளை ‘சார்’ என தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவராக இருந்த பி.எச். பாண்டியன் அழைத்து இவரது வழக்குகளில் வாதாடியுள்ளார். உயர்நீதிமன்ற வழக்கறிஞராக நீதிபதி கோகுலகிருஷ்ணன் அவர்களின் இரண்டாவது அமர்வில் விசாரணையின் போது நீதிபதியை ‘சார்’ என்று அழைத்ததுண்டு என நினைவு .
அதேபோல, உயர் நீதிமன்றத்தில் சாமிக்கண்ணு என்றொரு நீதிபதி இருந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘மைலார்ட்’ என்று சொல்வதற்கு பதிலாக ‘சார்’ என்றே அழைக்கலாம் என்று கூறினார். அதே போல, ஒரு வழக்கில்(Crl.Rc)(19thCourt 1983)நானும் வரை அவரை சார் அவ்வாறு பயன்படுத்தி வாதாடியுள்ளேன்.
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின் இந்த நடைமுறையை கைவிடும்படி நாட்டின் உயர்நீதிமன்றம் ஒன்று கூறுவது இதுவே முதல்முறையாகும். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் அமர்வு நீதிபதிகளின் கூட்டம் புதிய தலைமை நீதிபதி எஸ்.இரவீந்திரன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நீதிபதிகளை ‘மை லார்ட்’ என்று அழைக்கும் நடைமுறையை கைவிட தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக இராஜஸ்தான் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையை போற்றும் வகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒன்றுகூடி ஏகமனதாக ஒரு முடிவு எடுத்துள்ளனர். இதன்படி நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இனி நீதிபதிகளை ‘மை லார்ட்’ அல்லது ‘லார்ட்ஷிப்’ என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும். வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் இனி ‘சார்’ அல்லது ‘ஸ்ரீமான்ஜி’ என்று அழைத்தால் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகளை வழக்காடுபவர்கள் இவ்வாறு அழைப்பதை கைவிடவேண்டுமென்று கடந்த 2006 ஏப்ரலில் இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை ‘யுவர் ஆனர்’, ‘ஆனரபிள் கோர்ட்’அல்லது ‘சார்’ என வழக்கறிஞர்கள் அழைக்கலாம் என்ற புதிய விதியை பார் கவுன்சில் வகுத்தது.
இருந்தாலும் இது தொடர்பாக எந்த ஒரு உயர் நீதிமன்றமும் தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரஞ்சித் ஜோஷி பாராட்டு தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் அங்கி (gown) விசயத்திலும்
மாற்றம் வர வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-07-2019
No comments:
Post a Comment