————————————————
Experience is the teacher of all things. Caesar's wife must be above suspicion. Veni, vidi, vici. (I came, I saw, I conquered.) It is easier to find men who will volunteer to die, than to find those who are willing to endure pain with patience. No one is so brave that he is not disturbed by something unexpected.
If you must break the law, do it to seize power: in all other cases observe it.
Men willingly believe what they wish.
What we wish, we readily believe, and what we ourselves think, we imagine others think also.
As a rule, men worry more about what they can't see than about what they can.
Men in general are quick to believe that which they wish to be true.
கி.மு. 75-ம் வருடம். சட்ட திட்டங்களில் நிபுணத்துவம்பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இளைஞரான ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில்இருந்த அனைவரும் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபர்களை விடுதைலை செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும்தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடேன ஸீஸர்கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக் காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரணையாடு. அதைக் கேட்டு கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள். உங்கள் அனைவரையும் கழுத்தைஅறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள்.
சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயே உயர்வாகப் பேசி கொள்கிறாய்!அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘*நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள்*. அரச நீதிநூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கடைப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர். பின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும்,வீரம் மிக்க ஆட்கைளத் திரட்டிக்கொண்டு போய் கடற்கொள்ளையர் களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள் அத்தனை பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார்.
இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன் இப்படிச் சுய தம்பட்டம் அடிக்கிறர்கள்?’’ எனப் பிறர் கேட்டபோது, ‘‘*உன் தகுதியை நீயே உரக்கச் சொல்.பிறருக்காகக் காத்திருக்காதே*!’’ என கூறினார். இத்தனைக்கும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை ஜூலியஸ் சீஸர். ரோம் நகர அதிகாரத்தில் இருந்த மரியஸ், சஸரின் உறவினர். எனவே , சஸரால் மிக எளிதாக படைத் தலைவராகி, போர்களில் பங்கேற்று வெற்றிகள் குவிக்க முடிந்தது. மரியஸுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த ‘சுல்லா’வின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டு, செனட் சபையில் முக்கிய இடம் பிடித்தார் சீசர். மிகப்பெரும் செலவில் பிரமாண்டமான ஸ்டேடியம் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி, மக்களிடம் பெரும் புகழ் பெற்றார்.
கி.மு.58-ல் ஐரோப்பிய கண்டங்களில் உள்ளபல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இடம்பெயர்ந்து, ‘கவுல்’ நோக்கி வருகிறார்கள் என்றதும், அவர்களால் ரோம் நகருக்கு ஆபத்து வருமெனப் படையுடன் கிளம்பினார் சீஸர். சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த ‘கவுல்’ போராட்டத்தில், சுமார் இருபது லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்தப் போர், சீஸருக்கு செனட் சபையிலும், மக்கள் மனதிலும் நிரந்தர இடத்தையும், பெரும் வீரன் என்கிற புகைழயும் பெற்றுத்தந்தது. ரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கினார் ஜூலியஸ் சீஸர். ரோமன் காலண்டர் மாற்றியைமக்கப்பட்டது.
நகெரங்கும் சீசரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது. தன் புகழ்இந்த பூமி உள்ளவைர நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்தார் சீஸர்.அவரை இனியும் விட்டுவைத்தால், ரோம் சீரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரே கொல்லத் துணிந்தார்கள். எல்லோரும் அவைரக் கத்தியால் குத்த, மகன் போல்தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் ஓடினார் சீசர். அவனும் கத்தியெடுத்துக் குத்திய நிலையில், ‘‘*யூ டூ புரூட்டஸ்*’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார். ஜூலியஸ் சீசர் விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும், அவைரப் புகழின் உச்சியில் ஏற்றிவைத்தது, ‘*உன் தகுதியைநீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே*!’ என்கிற அவரது மந்திரச் சொல்தான்.
No comments:
Post a Comment