ஆறுமொழிகள் அறிந்த #ஜானகிஎம்ஜிஆர்
———————————————
திரு.குமார் ராஜேந்திரன் வழக்கறிஞர். ஆறு முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வில் இருக்கிறார் தற்போதும். எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளான திருமதி.லதா அவர்களின் மகன். அந்த விதத்தில் எம்.ஜி.ஆரின் பேரன்.
ஜானகி அம்மாளின் அன்புக்குப் பாத்தியமான குமார் ராஜேந்திரன் அவரைப்போற்றும் விதத்தில் ஜானகியின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் 240 பக்கங்கள் அடங்கிய "ஜானகி எம்.ஜி.ஆர்"என்கிற நூலைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு முன் முதல் பெண் முதல்வராக வி.என்.ஜானகி இருந்திருக்கிறார் என்கிற தகவல் இன்றைய தலைமுறைக்குத் தெரியுமா?
ஆறுமொழிகள் அறிந்த ஜானகி அம்மா.
தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம்,இந்தி, மலையாளம்,தெலுங்கு,கன்னடம் என சொல்லாம். விடுதலை புலி இயக்க தலைவர் பிரபாகரன் உடன் எம்.ஜி.ஆரை சந்திக்க இராமாபுரம் வீட்டிற்கு சந்திக்க சென்ற போது அறிமுகம். ஜானகி அம்மா ஆட்சி கலைத்த அன்று சட்ட மன்றத்தில் பெரும் ரகளை; அன்று பேரவை தலைவர் பி.எச். பாண்டியனுடன் சந்தித்து பேசியதுண்டு.
இப்படிப் பல செய்திகள்,பல அரிய புகைப்படங்கள் உள்ள அந்த நூலில் உள்ள முக்கியமான அம்சம் அதிகாரத்திற்கு நெருக்கத்தில் இருந்தும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் இயங்கிய அவருடைய எளிமை தான்.
இந்த நூல் பிரதியை எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் என்னிடம் வழங்கினார் நூலாசிரியரான குமார் ராஜேந்திரன்.அருகில் நண்பரும்,பத்திரிகையாளருமான மணா. பல்வேறு தளங்களைத் தொட்டுச் சென்ற பேச்சும்,அந்தத் தருணமும் மனதுக்கு நிறைவளித்தன.
No comments:
Post a Comment