Saturday, July 20, 2019

தனிமாவட்டங்கள் கோரிக்கை

தனிமாவட்டங்கள் கோரிக்கை
————————————
#தென்காசிதனிமாவட்டமாக பிரிந்ததை குறித்து என் பதிவுகளுக்குப்பின் தமிழகத்திலிருந்து பல நண்பர்கள் தொடர்பு கொண்டார்கள். 
ஏன் #மயிலாடுதுறை தனி மாவட்டமாக ஆக்கப்படவில்லை என்று அந்த வட்டார நண்பர்கள் வருத்தப்பட்டார்கள். #பொள்ளாச்சி தனி மாவட்டமாக வேண்டுமென்று சிலர் வலியுறுத்துகின்றனர். 
#கும்பகோணம் தனி மாவட்டமாக வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. 
#முசிறி #திருப்பத்தூர்(வட ஆற்காடு) ஏன் தனி மாவட்டமாக அறிவிக்க கூடாது என.......

எங்கள் வட்டாரத்தை சேர்ந்த சிலர் திருவேங்கடம் பகுதியை கோவில்பட்டியுடன் இணைத்து கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆகிய வட்டாரங்களை உள் அடக்கி தனி மாவட்டமாக அமைய வேண்டுமென்று சிலர் கூறினார். இதுவரை,தென்காசி, செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு மொத்தத்தில் 35 மாவட்டங்களாக தமிழகத்தில் உள்ளது.
துவக்கத்திலிருந்து பிரிக்கப்படாத ஒரே மாவட்டமாக இன்று வரை இருப்பது கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே. நாடு விடுதலைக்குப்பின் தமிழகத்தில் முதன்முதலாக பிரிந்த மாவட்டம் சேலத்திலிருந்து தருமபுரி, பின்னர் புதுக்கோட்டை, ஈரோடு என பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இன்னும் சில நண்பர்கள் ஏன் தமிழகத்தை இரண்டாக பிரித்து மதுரையை தலைமையிடமாக கொண்டு தென் தமிழகம் அமைந்தால் என்ன என்று தங்களின் கருத்தையும் வெளிப்படுத்தினர்.
தற்போது பிரிக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள் கூட சரியாக பிரிக்கப்படவில்லை என்றும் பலருக்கு குறைகள் உண்டு. இதற்கு காலமும், அரசியல் சூழ்நிலையும் தான் பதில் சொல்ல வேண்டும். வேறென்ன சொல்ல?
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-07-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...