"இளமையும் நில்லா;
யாக்கையும் நில்லா;
வளவிய வான்பெரும்,
செல்வமும் நில்லா;
புத்தேள் உலகம்,
புதல்வரும் தாரார்;
மிக்க அறமே,
விழுத்துணை ஆவது!"
- தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை( சிறைசெய் காதை)
இன்றைய இளமையும் அதனைக் கொண்ட இந்த உடம்பும் நிலையானவை அல்ல; நாம் கொண்டுள்ள செல்வமும் நிலையானது அல்ல; நமது பிள்ளைகள் செய்யும் நன்மை தீமைகள் நமது சொர்க்க-நரகத்தை தீர்மானிக்காது. வாழும்போது நாம் புரியும் அறமே என்றும் நிலைத்தது, என்றும் துணையாக இருக்கும்... எனவே அறத்துடன் வாழ்வோம்!
10-7-2019.
No comments:
Post a Comment