இனஅழிப்பு (Genocide)
சென்னை பல்கலைக்கழக ஆய்வு மாணவி சில தரவுகளைக் கேட்டு என்னை சந்திக்க வந்திருந்தார். சார், இன அழிப்பு (Genocide) என்பது பற்றி சுருக்கமாக சொல்லமுடியுமா என்றார்.
நான் அவரிடம், “கடந்த 1948ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கூடிய ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்பு குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை 1951ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த தீர்மானத்தின்படி இனஅழிப்பு என்பது ஒரு கொடுங்குற்றமாகவும் தண்டனைக்குரியதாகவும் அறிவிக்கும் சட்டங்களை இயற்றுமாறு உலக நாடுகளைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் நடத்திய உலக மாநாட்டில் கேட்டுக்கொண்டது. இந்த மாநாட்டில் இனஅழிப்பு (Genocide) என்பதற்குரிய வரையறை வகுக்கப்பட்டது."
‘இன அழிப்பு’ என்பது ஒரு இனத்தைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் பார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களுக்காக கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது ஆகும்.
1. ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்வது
2. உடல் ரீதியாக அவர்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது அல்லது உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது
3. ஒரு தேசிய இன மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது, திட்டமிட்டு முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ இனஅழிப்பை செய்வது
4. ஒரு தேசிய இனத்தின் பிறப்புகளை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, கட்டாயக் கருக்கலைப்பு செய்வது
5. ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த குழந்தைகளைப் பிரித்து மற்றொரு தேசிய இனத்தில் கொண்டு போய் சேர்ப்பது.
சர்வதேச சட்டத்திற்கிணங்க இனஅழிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுவரை உலகளவில் நடைபெற்ற சில இனஅழிப்புகள்.
- ஆர்மேனியன் இனப்படுகொலை
- கிரேக்க இனப்படுகொலை
- கம்போடியா இனப்படுகொலை
- ருவாண்டா இனப்படுகொலை
- போசுனியன் இனப்படுகொலை
- குர்துமக்கள் இனப்படுகொலை
- தார்ஃபூர் போர்
- இலங்கைத் தமிழர் இனப்படுகொலை
இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தை பிரிட்டன் அரசு 1948ஆம் ஆண்டு சிங்களர் கைகளில் ஒப்படைத்துவிட்டு வெளியேறிய நாள்முதல் தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பை சிங்கள அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பெரும் பொறுப்பும், நீங்காத கடமையும் ஐ.நா. மன்றத்திற்கு உள்ளது. அழிவின் விழிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
ஈழத்தில் நடந்த இனஅழிப்புக்கு பன்னாட்டு விசாரணை மட்டுமே தீர்வாக அமையும். லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லரின் இன அழிப்பு குற்றங்கள் வெளிநாட்டில் நடத்தப்பட்டுத்தான் அவர் தண்டிக்கப்பட்டார். ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். இதன் போது சில மாதக் காலப் பகுதியில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். இதேபோல, காங்கோவிலும் இன அழிப்பு நடந்தது.” என்ற பல செய்திகளை கூறினேன்.
#இனஅழிப்பு
#Genocide
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-07-2019
No comments:
Post a Comment