Tuesday, July 9, 2019

#கிராமியமானநகரம். #திருவனந்தபுரம்

#கிராமியமானநகரம்#திருவனந்தபுரம் தமிழ் படைப்பாளிகள் நீல. பத்மநாபன், மாதவன் தங்களடைய கதைகளில் திருவனந்தபுரம் தரவுகளை கொண்டே எழுதவார்கள். குறிப்பாக வணிகமயமான சாலைத் தெரு, கிழக்கு வாயில், பேருந்து நிலையம், பத்மநாபசாமி கோவில் சன்னதி தெரு, தெப்பக்குளம் போன்ற இடங்களைக் குறித்து அவர்களின் கதைகள் அதிகமாக வரும். திருவனந்தபுரம் சென்றால் இந்த இடங்களை பார்ப்பதுண்டு. அமைதியான பகுதியாக இருந்தது ஆனால் இப்பொழுது போக்குவரத்து நெரிசல் சத்தமாகயுள்ளது. கிராமியமான நகரம்.
Image may contain: sky, cloud, house, tree, outdoor and nature
பல ஆண்டுகளுக்கு முன்னால் பத்மநாபசாமி சன்னதி தெருவில் உள்ள தெப்பக்குளத்தினை சுற்றி பூச்செடிகள் பச்சைப் பசேலென பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக அதை காணவில்லை. அந்த தெப்பக்குளமும் வற்றியிருந்தது. நேற்று சென்றிருந்த போது மீண்டும் பச்சைப் பசேலென அந்த செடிகளை பார்க்க ரம்மியமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க்கையில் நான் விரும்பும் இடங்கள் குமரி முனை, நெல்லை மாவட்டம் பாபநாசம் - முண்டன்துறை மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் , திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் தெரு, மணப்பாடு கடற்கரை, வயநாடு,மைசூர் நகரம், ஹம்பி,கங்கை பாயும் வாரனாசி காட்கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், நாளந்தா பல்கலைக்கழகம், புத்தகயா, டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஸ்ரீநகர் டால் லேக், ஜெய்ப்பூர் நகரம், தார் பாலைவனம், மேற்கு வங்க தாகூரின் சாந்தி நிகேதன், வடகிழக்கு மாநிலத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதிதீரம். இவையெல்லாம் மனதிற்கு ஆறுதலளிக்கும் இடங்களாகும். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த இடங்களை எட்டிப் பார்த்து வந்துவிடுவது வாடிக்கை.
Image may contain: sky and outdoor
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-07-2019.
Image may contain: outdoor

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...