#தில்லானமோகனம்பாள் #நாகேஷ்
பாத்திரம் போல......
———————————————-
Fake people have an image to maintain
Real people just don’t care....
எதனையும் மிகை விளம்பலாக, உயர்வு நவிற்சியாகப் பேசுகின்ற கூட்டமொன்று எல்லாத் துறையிலும் பரவியிருக்கிறது. எருமை சாணமிட்டால்கூட “ப்பா... என்னமா எருமை சாணியிட்டது தெரியுமா... நான் இப்படிப் பார்த்ததேயில்லை... நீங்களும் பார்த்திருக்க மாட்டீங்க...ச்சே... செம...”என்றுதான் அக்கூட்டம் கூறும். அவர்கள் உங்களை எப்போதுமே பார்வையாளர் மட்டத்தில் வைத்துப் பேசுபவர்கள். ஒருபோதும் உங்களிடம் தோன்றும் உண்மைக் கருத்தினைச் செவிமடுக்கவே மாட்டார்கள். “எருமை சாணமிடுவதைக்கூட நாம் கவனிக்காமல் இருந்துவிட்டோமே...” என்று நம்முடைய தாழ்வு மனப்பான்மையை ஊதிப்பெருக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். அவர்கள் இருக்கும் திசைப்பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.
எப்படியும் வாழலாம்.....
கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுறையும் ஒருவனை நாடாள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.
No comments:
Post a Comment