நான் பதிப்பித்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைச் சொல்லும் "பாஞ்சாலங்குறிச்சியின் வீரசரிதம்" நூல் அறிமுக விழா நேற்று (30-06-2019 / ஞாயிற்றுக் கிழமை) இரவு நாமக்கல்,லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைக் களம் விழாவை சிறப்பாக நடத்தியது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர். கே.பி.இராமலிங்கம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன், விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் திரு.கொ. நாகரஜன், திரு. புலிகேசி. ரா. பிரணவகுமார், சென்னை மண்டலம், விடுதலைக்களம், கோவையை சேர்ந்த தொழிலதிபர், திரு. C.J.ராஜ்குமார், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் திரு. வே. வேங்கட்ட விஜயன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர், திரு. உ. தனியரசு, திரு. பி. ஏ. சித்திக், வழக்கறிஞர். பழனிசாமி, திரு. எம்.பி. சதாசிவம், வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ, திரு. மு. பழனிசாமி, திருமதி. தனமணி வெங்கடபதி, திரு. பி. முத்துமணி, சின்னபெத்தம்பட்டி சி. பாலு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுக்கு நாகராஜன் தலைமை தாங்கினார். முழுமையான விழா நிகழ்வுகளையும், பேச்சுகளையும் பின்னர் பதிவு செய்கிறேன்.
No comments:
Post a Comment