Monday, July 29, 2019

Black July Srilanka


#BlackJuly Srilanka 
The Black July pogroms are often retold as occurring in Colombo alone. In our remembrance, it is important to acknowledge the various other areas across the island where Tamils were affected by this horrible, genocidal violence. 

The exact number of dead and displaced, homes and businesses destroyed as well as all the names and villages of towns affected, remain unknown. While this list is not exhaustive, we must acknowledge and remember the victims of the pogroms everywhere.

Image may contain: text

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் #YoungTurks - #இளந்துருக்கியர்கள்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் *#YoungTurks - #இளந்துருக்கியர்கள்*
-------------------------
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அவர்கள் 1962 ல் ராஜ்ய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோஷலிசத்தில் கொள்கையில் தீவிரமாக செயல் பட்டவர்.. ஆச்சார்யா நரேந்திர தேவ் அவர்களின் தலைமையை ஏற்று பிரஜா சோஷலிஸ்ட் கட்சி (PSP)யில் இணைந்து பணியாற்றினார். அசோக் மேத்தா போன்ற சோஷலிஸ்டுகளோடு சேர்ந்து பின்னாளில் காங்கிரஸில் இணைந்தார். அந்த காலக்கட்டத்தில் சோஷலிஸ்டுகள் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டனர். ஆச்சார்யா நரேந்திர தேவ் மற்றும் ராம் மனோகர் லோகியா ஆகியோர் இருவேறு துருவங்களாக செயல்பட்ட காலங்களில் சந்திரசேகர் அவர்கள் ஆச்சார்யா நரேந்திர தேவ் பக்கம் செயல்பட்டார். ராம் மனோகர் லோகியாவிற்கும் சந்திரசேகருக்கும் இடையே மிகப்பெரிய வார்த்தைப் போர் அவ்வப்போது நடக்கும்.

அப்போது ஆச்சார்யா, கிருபளானி, மசானி போன்றோரோடு சந்திரசேகர், பிலு மோடி ஆகியோர் கடுமையாக நேரு காலத்தில் காங்கிரசின் மீது விமர்சனத்தை வைத்தனர்.
காங்கிரசில் இந்திராகாந்தியிடம் வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு போன்றவற்றில் இந்திராகாந்திக்கு ஆதரவாக செயல்பட்டவர் சந்திரசேகர். தனது ஆரம்பக்கட்டத்தில் பிரதமர் பண்டித நேருவிடமே இது குறித்து நேரடியாக வலியுறுத்தியவர்.
பின்னர் சந்திரசேகரே இந்திரா அறிவித்த அவசர நிலை அறிவித்தபோது கடுமையாக அதை எதிர்த்தார். பின் ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டார்.
தனது மனதில்பட்டதை நேரடியாக நேருக்கு நேராக பேசுபவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். டெல்லியில் சவுத் அவென்யூ லேன் வீட்டில் பல முறை பழ.நெடுமாறனோடு சந்தித்ததுண்டு. தனது கூற்றுக்கு தகுந்த ஆதாரங்களுடன் அழுத்தந்திருத்தமாக கூறுவார். அவர் பிரதமராக இருந்தபோது அவர் மீது இரண்டு விமர்சனங்கள் வைக்கப்பட்டது உண்டு. ஒன்று அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவின் பயன்படுத்தி otherwise என்ற வார்த்தையை பயன்படுத்தி அன்றைய திமுக ஆட்சியினை கலைத்தார். அதே போல இருப்பு தங்கத்தை வெளிநாட்டில் அடகு வைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வர இவரது ஆட்சிக் காலத்தில்தான் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அவர்கள் எப்போதும் வறுமையை அகற்றுதல், விவசாயிகள் நலன்கள், கிராம முன்னேற்றம், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற வலுவான ஆதரவு குரல்களை முன்னெடுத்தார்கள். எனது நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் இளம் துருக்கியர்களில் மோகன் தாரியா மட்டும் தான் உயிரோடு இருப்பதாக எண்ணுகிறேன்.
நாடாளுமன்றத்தில் பூபேஷ் குப்தா கம்யூனிஸ்ட் தலைவர் அவருடைய இளம் வயதில் சீனப் போர் குறித்து தவிடுபொடியாக்கிய சங்கதிகளும் இந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1960 முதல் 1995 வரை நடந்த அரசியியல் பிரச்சனைகளை தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். சமகால அரசியல் வரலாற்றை பற்றியும் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
சந்திரசேகர், மோகன் தாரியா, கிருஷ்ணகாந்த், ஐ.கே.குஜ்ரால், டி.பி.தார், ஓம் மேத்தா, மோகன் குமாரமங்கலம், அம்ரித் நக்தா, நந்தினி சபாபதி, சந்திரஜித் யாதவ், ரகுநாத ரெட்டி, கே.டி.மாளவியா, கே.ஆர்.கணேஷ் போன்ற முன்னாள் பிரஜா சோசலிஷ உறுப்பினர்கள் மற்றும், கம்யூனிச உறுப்பினர்கள் போன்றோர் காங்கிரசில் இணைந்தனர். இவர்கள் அப்போது இளந் துருக்கியர்கள் (Young Turks) என்று அழைக்கப்பட்டனர். Ginger group எனவும் கூப்பிட்டனர்.
இவர்களின் போர் குணம் காங்கிரசின் மூத்த முன்னோடிகளான நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல், அதுல்லியா கோஷ், காமராஜர் போன்றோர்களை பதட்டமடைய செய்தது.
இவர் மொரார்ஜி தேசாயின் காங்கிரஸ் அரசின் நிதிநிலை அறிக்கையை
கடுமையாக சாடினார். பெங்களூர் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரஸ் இரண்டாக பிரிவானது. இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ராஜநாராயணனை கடுமையாக சந்திரசேகரை விமர்சித்தார்.

சோசலிஸ்ட்டாக இருந்து காங்கிரசாராக மாறி பின்னர் இந்திராவை எதிர்த்து, பின் ஜனதா கட்சி தலைவர் ஆனதெல்லாம் அரசியல் பரிணாம சூழலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதியாகும். கட்சிகளும், இயக்கங்களும் இருக்கலாம். அரசியலில் கட்சி மாறினார்கள் என்று நினைக்கிறோம். என்ன காரணம் என்பதை அறிந்து ஒருவர் மீது விமர்சனம் வைப்பது நல்லது. நல்ல திட்டங்களுக்கும், சுயமரியாதைக்கு பங்கம் வரும் போதும் மனசாட்சியோடு எடுக்கின்ற முடிவுகளை யாரும் குற்றம் சொல்ல முடியாது.
At the AICC session, som young radicals in the Congress formed a group that was nicknamed 'Ginger Group'. It provided substantial support to Indira Gandhi against the Old Guards in the party. The group consisted of several Congress members from diverse political gbackgrounds such as ex-PSP members like Chandra Shekhar, Mohan Dharia, Krishna Kant, conventional Congress members like I.K.Gujral, D.P.Dhar, Om Mehta, etc., and card-holding Communists or fellow travellers like Mohan Kumaramangalam, Amirit Nahta, Nadini Sathpathy, Chandrajit Yadav, K.Y. Ranghunatha Reddy, K.D.Malviya and K.R.Ganesh. It is significant tath nearly all these members were associated with the Congress Forum for Socialist Action (CFSA). It was Chandra Shekhar and his ex-PSP associates who managed to revive the Ginger Group from being a non-controversial debating society into a robust and confrontial group that came to be popularity know as the 'Young Turks'.
Young Turks
The phrase 'Young Turks' originated from a set of politicians in Turkey in the pre-World War I phase who fought for a more liberal approach within the Ottoman framework. The name was given to a section of Congressmen who had no formal group of their own, though they had a common approach to important political, economic and social issues. 'Young Turks' did not refer to any specific group, but the term was often used for those who were considered youn and enthusiastic socialists working ardently for the implementation of the radical programme of the party and for sharpening its ideological foundations.
#இளந்துருக்கியர்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-07-2019

Image may contain: 1 person, text

கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர். - " ஸ்ரீ வில்லிபுத்தூர் "

கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர். - " ஸ்ரீ வில்லிபுத்தூர் " 
-------------------------------------

தந்தையும், மகளுமாக இரண்டு ஆழ்வார்கள் பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதை நாச்சியார் தான் தொடுத்து அணிந்து சூடிப்பார்த்த பூமாலையை அரங்கணுக்கு கொடுத்து அனுப்பி கொண்டிருந்ததன் நினைவாக, இன்றும் தினந்தோறும் முதல் நாள் இரவு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மலர்மாலையை பெருமாளுக்கு மறுநாள் முதல் மாலையாக அணிவித்து சேவிப்பது இறை வழக்கம் இன்றளவும் நடக்கின்றது. இது ஒரு புறம் இருந்தாலும் இதில் உள்ள பக்திச் சுவையாக பாடிய பாசுரங்கள் அற்புதமான தமிழ். இந்த தமிழை வணங்கலாம், ரசிக்கலாம், கொண்டாடலாம்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர்.
Image may contain: outdoor
இது ஆடி மாதம்.திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது நம்பிக்கை .
ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும், அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு, ஆண்டாளே வாழ்ந்து காட்டியுள்ளாள். —
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 
உயரரங்கற்கே கன்னி யுகந்தளித்தாள் வாழியே

இப்படி கோதைநாச்சியார் ஆண்டாளை நினைத்து பாடுவார்கள்.
வேடிக்கையாக 143 என்றால் ஆங்கிலத்தில் காதலுக்கு சொல்வார்கள் .
Image may contain: sky and outdoor
இறைவனிடத்தில் காதல் கொண்டு 143 பாடல்களை எழுதி இருக்கிறாள் சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்.
இதில் உள்ள ஆண்டாளின் தமிழையும், இலக்கிய ரசத்தையும் நாம் போற்ற வேண்டும். 
உலகின் முதல் இசை தமிழோசையும் அதன் பண்களும் வைணவ பாசுரங்கள் மூலமாகவும் கேட்கலாம். நாலாயிர திவ்ய பிரபந்தம் மக்களுக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும், இனிமையையும் தரும் என்பார்கள். இதில் பிரபந்தம் என்பது இந்த பாடல்களின் தொகுப்பாகும். இதை திராவிட வேதம் என்றும் வைணவத்தின் மூல இலக்கியம் என்றும் சொல்வதுண்டு.

என்றைக்கும் கன்னித்தமிழ் ஓசையாகவும், செந்தமிழ் பிரவாளமாகவும், பள்ளிகொண்ட அரங்கனையும், திருவேங்கடத்தானையும், பெருமாளையும், அவனுடைய பல்வேறு பெயர்களில் பாடிடும் பாடல் தொகுப்பு தான் இந்த நாலாயிர திவ்ய பிரபந்தம். இது இசைத்தமிழ், அரையர் சேவை, நாடகத் தமிழிலும், நடைமுறைப்படுத்துகின்ற பக்தி இலக்கியம் ஆகும்.
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுக்குள் 
வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் 
என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார்.

பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.
நான்கு ஆயிரத் தொகுப்புகளில் 
முதல் ஆயிரம் பலர் பாடிய இசைத்மிழ்ப் பாக்களின் தொகுப்பாகும்.

இரண்டாவது ஆயிரம் திருமங்கையாழ்வார் பாடிய இசைப்பாத் தொகுப்பாகும்.
மூன்றாவது ஆயிரம் பலர் பாடிய இயல்பாத் தொகுப்பாகும்.

நான்காவது ஆயிரம் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி என்கிற இசைப் பாத்தொகுப்பாக அமைந்துள.
நான்கு ஆயிரங்களில் மூன்று ஆயிரங்கள் இசைப் பாக்களாகவும் ஒர் ஆயிரம் மட்டும் இயல்பாத்தொகுப்பாகவும் அமைந்துள.
இவை இசைத்தமிழுக்கு முன்னுரிமை தந்து தொகுக்கப் பெற்றுள என்பதனை உணர்த்துகின்றன.
பண், இராகம், தாளம், ஒத்துப் பெயர்களோடு இப்பாசுரத் தொகுதிகள் பதிப்பிக்கப் பெற்று வந்துள.

பொய்கையார், 
பூதத்தார், 
பேயாழ்வார் 
என்னும் முதல் ஆழ்வார்கள் 
பாடிய திருவந்தாதிகள் இயற்பாக்களாக உள்ளன.
இவை மூன்றாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள.
திருமழிசையாழ்வார், 
திருப்பாணாழ்வார், 
தொண்டரடிப் பொடியாழ்வார், 
குலசேகராழ்வார், 
பெரியாழ்வார், 
ஆண்டாள், 
திருமங்கையாழ்வார், 
நம்மாழ்வார், 
மதுரகவியாழ்வார் 
பாடிய பாசுரங்கள் இசைப் பாக்களாக உள.
இவற்றைப் பண்களோடு சேவித்த மரபு மாறி ஓதும் மரபில் இன்று வழக்கில் உள.
இவை பண்ணோடு பாடப்பட்டமையை அகச் சான்றுகள் வழி அறியமுடிகின்றன.
திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல் தொகுப்பினையும் குறிக்கும்.

இந்த நூல் 
ஆன்ற தமிழ் மறை, 
ஐந்தாவது வேதம், 
திராவிட வேதம், 
திராவிட பிரபந்தம் 
என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு.
முதலாயிரம் - 947 பாடல்கள்
பெரிய திருமொழி - 1134 பாடல்கள்
திருவாய்மொழி - 1102 பாடல்கள்
இயற்பா - 817 பாடல்கள்
என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்
********************************************************
1. திருப்பல்லாண்டு
2. பெரியாழ்வார் திருமொழி
3. திருப்பாவை
4. நாச்சியார் திருமொழி
5. பெருமாள் திருமொழி
6. திருச்சந்தவிருத்தம்
7. திருமாலை
8. திருப்பள்ளி எழுச்சி
9. அமலனாதிபிரான்
10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
11. பெரிய திருமொழி
12. திருக்குறுந்தாண்டகம்
13. திருநெடுந்தாண்டகம்
14. முதல் திருவந்தாதி
15. இரண்டாம் திருவந்தாதி
16. மூன்றாம் திருவந்தாதி
17. நான்முகன் திருவந்தாதி
18. திருவிருத்தம்
19. திருவாசிரியம்
20. பெரிய திருவந்தாதி
21. திருஎழுகூற்றிருக்கை
22. சிறிய திருமடல்
23. பெரிய திருமடல்
24. இராமானுச நூற்றந்தாதி

பன்னிரு ஆழ்வார்கள்
****************************
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவியாழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள்
10. தொண்டரடிப்பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன.
பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் 
பாடப்பட்டுள்ளன.

இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் 
இயற்றப்பட்டதாகும்.

இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும்.
இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர்.

இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.
முதலாயிரம்
*********************
ஆழ்வார் பெயர் : பெரியாழ்வார்
தலம் : திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
நூலின் பெயர் : 
திருப்பல்லாண்டு. 1 – 12, 
திருமொழி 13 – 473
ஆழ்வார் பெயர் : ஆண்டாள்
தலம் : திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
நூலின் பெயர் : 
திருப்பாவை 474-503
நாச்சியார் திருமொழி 504-646
ஆழ்வார் பெயர் : குலசேகர ஆழ்வார்
நூலின் பெயர் : பெருமாள் திருமொழி 647 - 751
ஆழ்வார் பெயர் : திருமழிசையாழ்வார்
தலம் : திருமழிசை
நூலின் பெயர் : திருச்சந்தவிருத்தம் 752 - 871
ஆழ்வார் பெயர் : தொண்டரடிப்பொடியாழ்வார்
நூலின் பெயர் : 
திருமாலை 872 – 916
திருப்பள்ளி எழுச்சி 917 – 926
ஆழ்வார் பெயர் : திருப்பாணாழ்வார்
தலம் : உறையூர்
நூலின் பெயர் : அமலனாதிபிரான் 927 - 936
ஆழ்வார் பெயர் : மதுரகவியாழ்வார்
நூலின் பெயர் : கண்ணிநுண்சிறுத்தாம்பு 937 - 947

இரண்டாவதாயிரம்
**********************************
ஆழ்வார் பெயர் : திருமங்கையாழ்வார்
நூலின் பெயர் : 
பெரிய திருமொழி 948 - 2031
திருக்குறுந்தாண்டகம் 2032 - 2051 
திருநெடுந்தாண்டகம் 2052 - 2081

மூன்றாவதாயிரம்
**********************************
ஆழ்வார் பெயர் : பொய்கையாழ்வார்
தலம் : காஞ்சிபுரம்
நூலின் பெயர் : முதல் திருவந்தாதி 2082 -2181
ஆழ்வார் பெயர் : பூதத்தாழ்வார்
தலம் : மாமல்லபுரம்
நூலின் பெயர் : இரண்டாம் திருவந்தாதி 2182 - 2281
ஆழ்வார் பெயர் : பேயாழ்வார்
தலம் : மயிலாப்பூர்
நூலின் பெயர் : மூன்றாம் திருவந்தாதி 2282 - 2381
ஆழ்வார் பெயர் : திருமழிசை ஆழ்வார்
நூலின் பெயர் : நான்முகன் திருவந்தாதி 2382 - 2477
ஆழ்வார் பெயர் : நம்மாழ்வார்
தலம் : ஆழ்வார்திருநகரி
நூலின் பெயர் : 
திருவிருத்தம் 2478 - 2577
திருவாசிரியம் 2578 - 2584
பெரிய திருவந்தாதி 2585 - 2671 
ஆழ்வார் பெயர் : திருமங்கை ஆழ்வார்
தலம் : ஆழ்வார்திருநகரி
திருஎழுகூற்றிருக்கை 2672
சிறிய திருமடல் 2673 – 2712
பெரிய திருமடல் 2713 - 2790
ஆழ்வார் பெயர் : திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி 2791 - 2898

நான்காவதாயிரம்
**********************************
ஆழ்வார் பெயர் : நம்மாழ்வார்
திருவாய்மொழி 2899 – 4000

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-07-2019

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் - கோமதி அம்பாள் திருக்கோவில் சன்னதி கடைகள்.

#சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்பாள் திருக்கோவில் சன்னதி கடைகள். சிறு வயதில் பொருட்களை வாங்கி கொடுக்க சொல்லி அடம் பிடித்த இடம். 
மறக்க முடியுமா...? 
இது அன்றைய எங்களின் மால்....
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-07-2019.

Image may contain: பவள சங்கரி, indoor

இதுதான் மதநல்லிணக்கம்.....


இதுதான் #மதநல்லிணக்கம்.......  Shantha Dutt பதிவின் மூலம்.

#ஹைதராபாத் உட்பட மாநிலம் முழுவதும் இன்று தெலங்கானாவின் பாரம்பரிய..கிராம தேவதைப் பண்டிகையான " போனாலு " அரசுத் திருவிழவாய் அதி விமரிசையாய் கொணாடப்பட்டு வருகிறது...இத் திருவிழா தொடர்பாய் இங்கு நான் இப் படம் பதிவு செய்திருப்பதன் அதி முக்கியக் காரணம்....

படத்திலுள்ள சார்மினார் இஸ்லாமியச் சின்னம்.! சுற்றியுள்ள அத்தனை பகுதிகளும் அம் மக்கள் வாழுமிடம்.! இவ்வாறான ஒரு பின் புலத்திலும் "போனாலு " ஊர்வலங்கள் எவ்விதப் பிரச்னையுமின்றி ..அம் மக்கள் ஒத்துழைப்புடன்....அமைதியாகக் கடக்கின்றனவெனில் அதன் அடிப்படையான இரு பிரிவினரிடையான பரஸ்பரச் சினேகமும் சகிப்புத்தனமையும் குவித்த கரங்களுடன் போற்ற வேண்டிய உன்னதமல்லவா !! 

இதுதான் மதநல்லிணக்கம்.....
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-07-2019.

Image may contain: 6 people, people smiling, outdoor

மீண்டுவரும் பனை ஓலை பெட்டி

No photo description available.இன்று திண்டுக்கல்லிலிருந்து வழக்கறிஞர் கேசவன் அவர்கள் #பனை ஓலை பெட்டியில் கட்டியனுப்பிய சிறுமலை வாழைப்பழம் கிடைத்தது. பிளாஸ்டிக் பை இல்லாத இப்படியான பனைஓலையில் பழங்கள் அனுப்பப்பட்டதை பார்க்க முடிந்தது. திண்டுக்கலில் மட்டும்தான் இப்பொழுது நான் அறிந்த வரை இது போன்ற பனை ஓலைப் பெட்டிகள் வழக்கத்தில் உள்ளது. வாழை மரச் சருகுகளை கொண்டு மலை வாழைப் பழங்களை சுற்றி பக்குவமாக வைத்து அந்த பழங்கள் அழுகிவிடாமல் அந்த ஓலைப் பெட்டியில் நேர்த்தியாக கட்டித் தருவார்கள். லண்டனிலிருந்து வரும் வெள்ளைக்காரர் நனபர் திரு பின்னி இந்த ஓலை பெட்டிகளை கண்டு வியப்படைந்து வாங்கிச் செல்வதுண்டு. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் நாம் கவரப்பட்டுவிட்டோம். 1960களில் கோவில்பட்டி, கீழீஈரால் ,கழுகுமலை, சங்கரன்கோயில், திருவேங்கடம், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம்,அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்பட்டி மிட்டால் இனிப்பு மற்றும் சேவு,வருவல், ஒம்ப் பொடி பல கார வகைகளை இது போன்ற ஓலைப் பெட்டியிலோ அல்லது கூம்பு வடிவிலான செய்தித்தாளில் சன்னமான சணல் கொண்டு கட்டி தருவார்கள். ஓலைப்பெட்டியில் கட்டிக் கொடுப்பதை பிற்காலத்தில் பிளாஸ்டிக் பைகள் ஆக்கிரமித்தன. தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ஓலைப் பெட்டிகள் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.



#பனைஓலைபெட்டியில்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
28-07-2019
No photo description available.

#சென்னை நகரைத்#தமிழகத்திற்குரிய தலைநகரமாக்க, (1956) சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடிய காட்சி.


#சென்னை நகரைத்#தமிழகத்திற்குரிய தலைநகரமாக்க, (1956) சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடிய காட்சி.
இதில் அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி,நாவலர், இரா.நெடுஞ்செழியன், சி.பா.ஆதித்தனர், ப.ஜீவானந்தம், என்.வி.நடராசன் ,அவ்வை சண்முகம், எச்.டி.ராஜா, பாவேந்தர் பாரதிதாசன், எல்லைப் போராட்ட வீரர் கே.விநாயகம், பிரபல எழுத்தாளர் நாரண். துரைக்கண்ணன், பொதட்டூர்ப்பேட்டை ஈ.எஸ்.தியாகராஜன், தமிழ்வேள் பி.டி.ராஜன் ஆகியொரும் திரு.ஜி.உமாபதியும் உள்ளனர்.

Discussion held in Ji.Umbathy's house under the leadership of Ma.Po.Si regarding movement to retain #chennai in TamilNadu and make it the state capital. 

In The Pic: Arignar Anna, Silambu selvar Ma.Po.Sivagnanam, Navalar Nedunchezhian, Si.Pa.Aathithanaar, Pa.Jeevanantham, N.V.Natarajan, Ovvai Shanmugan, H.D.Raja, Paventhar Bharathidasan, K.Vinayagam, Writer Naran, Thuraikannan, E.S.Thiagarajan, P.T.Rajan.

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-07-2019.

Image may contain: 6 people, including Venkatesh Krishnaswamy

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...