Monday, October 12, 2026

Oct 30, 2025 #MyAlmamater #MadrasLawcollege 1970s #MadrasCharterHighCourt #MadrasHighCourtCharter

 #MyAlmamater #MadrasLawcollege 1970s

#MadrasCharterHighCourt #MadrasHighCourtCharter ———————————————— பாரிமுனையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் அருகில் 1891 இல் சட்டக்கல்லூரி தொடங்க பட்டது . அங்கு தான் தொடர்ந்து 125 ஆண்டுகள் சட்டக் கல்லூரி இயங்கி வந்தது. நாங்கள் அங்கு எங்கள பட்ட படிப்புக்கு பின சட்டம் படித்தது உண்டு. நான் கெல்லீஸ் சட்டக்கல்லூரி விடுதியில் தங்க விருப்பமில்லமால். Madras University Club (MUC- எம்யூசி)என்ற மற்றொரு சட்டகல்லூரி விடுதியில் தங்கினேன். நல்லசூழல், சுவையான உணவு எனபதை பலரும் பாராட்டுவர். தற்போது இந்த விடுதி மூடப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டது . கவிஞர் கண்ணதாசன், சின்ன அண்ணாமலை, நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கிரா, மத்திய முன்னாள் அமைச்சர்கள் கே. பி. உண்ணிகிருஷ்ணன், ராம் விலாஸ பஸ்வான் ( பின்1990 இல் மத்திய அமைச்சர்கள்) தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் பி.ஜி. கருத்திருமன், நெடுமாறன்,விவசாய சங்க தலைவர் சி. நாராயணசாமி நாயுடு. கம்யூனிஸ்ட் தலைவர் சோ .அழகர்சாமி உடன் ஆர்.நல்லகண்ணு ( அப்போது 1970 களில் இவர் நெல்லை மாவட்டத்தில் சிபிஐ செயலாளர் என நினைவு) என பல ஆளுமைகள் வந்து சென்ற எனது விடுதி அறை . Madras Law College is the former name for Dr. Ambedkar Government Law College, a law school in Chennai, India, established in 1891. The historic building that once housed the college is now part of the Madras High Court and has been renovated for use as additional court halls பிற்காலத்தில் அம்பேத்கார் சட்டக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது .பிளஸ் டூ முடித்துவிட்டு அங்கு வந்து சட்டம் பயின்றவர்களும் உண்டு. இப்போது அந்த கல்லூரி மூடப்பட்டு கிரிமினல் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டு விட்டதாகச் செய்தி வந்துள்ளது. ஏற்கனவே கல்லூரி வகுப்புகளாக இருந்த இந்தச் சட்டக் கல்லூரியில் நீதிபதிகளின் விசாரணை கூடம் அல்லது அவர்கள் தங்கும் அறைகள் எப்படி இருக்கும்என்றும் அத்தகைய வகுப்பறைகளில் அமர்ந்து எவ்வாறு நீதிபதிகள் நீதி பரிபாலனம் செய்வார்கள் என்பதும் புரியவில்லை. இந்த மாற்றம் குறித்து வழக்கறிஞர்களுடன் கூடக்கலந்து ஆலோசிக்காமல் திடீரென ஆணை பிறப்பித்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதற்கிடையில் சென்னை நகர் ரயில்வே பணிகளுக்காக இந்த சட்டக் கல்லூரி அருகே வேலைகள் நடந்து வந்தன. அந்த வகையில் சட்டக் கல்லூரி 15 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றப்பட்டுவிட்டது. இதில் ஒரு விஷயம் என்னவெனில் எப்பொழுதுமே அதன் கோபுர உச்சிகளில் செடிகள் அரச ஆல மரங்களின் விதைகள் முளைத்துக் கொண்டிருக்கும். அதையெல்லாம் காலாகாலத்தில் அகற்றும்படி நான் சட்டக் கல்லூரி முதல்வரிடம் பலமுறை சொல்லியும் கூட ஏதும் நடக்கவில்லை. இப்போது அந்த செடிகளை எல்லாம் வெட்டி நல்ல முறையில் பராமரிப்பார்கள் போலிருக்கிறது. இந்த சட்டக் கல்லூரிக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நாங்களெல்லாம் அரசியல் எதிர்பார்ப்புகள் ஆதாயங்கள் ஏதும் இன்றி அந்தக் காலங்களில் 1970களில் இந்த கல்லூரியில் அரசியல் களத்தில் இயங்கினோம். இன்று அது கிரிமினல் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளது புதிதாக திறக்கப்பட்ட உயர்நீதிமன்றங்கள் குற்றவியல் வழக்குகளை மட்டும் தனியாக விசாரிக்கும் என்று உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கிற இந்த சூழ்நிலையில் குறிப்பாக குற்ற வழக்குகளில் ஆஜராக கூடிய வழக்கறிஞர்கள் பிரதான நீதிமன்ற கட்டடத்தில் இருந்து புதிதாக திறக்கப்பட்டிருக்கிற பழைய சட்டக் கல்லூரி கட்டிடங்களுக்கு சென்று வருவதற்கு சிரமம் எடுக்கும், காலமும் எடுக்கும் என்பதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இரண்டு நீதிமன்ற கட்டிடங்களுக்கு சென்று வருவதற்கு போகி அல்லது மின்சார வாகனங்களை பயன்படுத்தி மூத்த வழக்கறிஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண் வழக்கறிஞர்களுடைய சிரமத்தை போக்க வேண்டும் வேறு விடையம். நீதிபதிகள் அறைகள் வசதியாக அமைந்துள்ளதா என்று தெரியவில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் என்பது 1862 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி விக்டோரியா மகாராணியின் கீழ், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆவணம் ஆகும். இந்த சாசனம், பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த உச்ச நீதிமன்றங்கள் மற்றும் சதர் திவானி அதாலத் ஆகியவற்றை இணைத்து சென்னை உயர் நீதிமன்றத்தை நிறுவியது. பிரிட்டிஷ் அரச சாசனம். நீதி, சமத்துவம் மற்றும் நல்ல மனசாட்சியுடன் வழக்குகளைத் தீர்ப்பது என்ற நோக்கத்தில் அமைக்கபட்டது . இது பிரசிடென்சி நகரங்களில் இயங்கிய முந்தைய உச்ச நீதிமன்றங்களை சதர் அதாலத்களுடன் இணைத்து, பம்பாய் (மும்பை), கல்கத்தா (கொல்கத்தா) மற்றும் மெட்ராஸ் (சென்னை) ஆகிய மூன்று ஜனாதிபதி நகரங்களில் உயர் நீதிமன்றங்களை நிறுவியது. இந்தச் சட்டம் விக்டோரியா மகாராணிக்கு ஐக்கிய..1/2

Oct 30, 2025 அதெற்கெல்லாம் எந்தநன்றியும் காட்டாத சுயநலக்கூட்டம்தானே நீங்கள்!

 அதெற்கெல்லாம் எந்தநன்றியும் காட்டாத சுயநலக்கூட்டம்தானே நீங்கள்! 

அன்றைக்கு வாஜ்பாய் மாலை 5 மணி வரை அந்த இடுகாட்டில் இருந்து விட்டு தான் திரும்பினார் அதற்கு மறுநாள் காலையில் நீங்கள் பாஜக உதறி விட்டு நாடாளுமன்றத்தில் தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவு தெரிவித்தீர்கள்.உங்களுக்கு இப்படியான சந்தரப்ப வாதங்கள் தவிர தத்துவமோ ஞானமோ என்ன இருக்கிறது. போர்பஸ் ஊழல் வழக்கில் குற்றவாளியாக நிருபணமான ராஜீவ் காந்திக்கு எதிராக தமிழ்நாட்டில் கொள்ளை அடிக்க ராஜீவ் காந்தி வருகிறார் என்றெல்லாம் எச்சரிக்கைப் பிரச்சாரம்செய்தீர்கள்!ஈழத் தமிழருக்கு ஆதரவாக நான் டெசோ மாநாடுகள் ஏற்பாடு செய்யும்பொழுது அதில் கலந்துகொண்டு தமிழர்களைக் கொன்றவர் ராஜீவ் காந்தி என்றெல்லாம் பேசிவிட்டு மீண்டும் காங்கிரசருக்கு ஆதரவளித்தீர்கள். இதெல்லாம் என்ன நியாயம் என்று உங்கள் மனசாட்சிக்குத் தெரிந்தால் சரி.! இது அரசியலில் ஒரு பண்பட்ட நிலை! ஆனால் எந்த ஒரு கொள்கை நிலைப்பாடும் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஓட்டு போட மறுத்து விட்டு இன்று அவரை சந்தித்து பேசினேன் என்பதை எதில் சேர்ப்பது. பிறகு இதே முதல்வர் ஸ்டாலின் நேற்று தென்காசியில் பேசும் போது பாஜகஎவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியில் திமுகவை ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்கிறார். பாஜக தான் என்கிற மாதிரி ஒரு கற்பனையான மாயையைக் கட்டுகிறார். எதிர்ப்பு வேண்டும் தான்! அதற்காக உண்மைக்குப் புறம்பாக எதையாவது பேசிக்கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ளும் இந்த இரட்டை நிலை அதாவது ஒரு பக்கம் சார்பு ஒரு பக்கம் எதிர்ப்பு போன்ற அரசியல் தந்திரங்கள் முதல்வருக்கு வேண்டுமானால் வழக்கமாக இருக்கலாம்! அறத்தையும் நீதியையும் பேசுகிற அரசியல்வாதிகளுக்கு இது அழகல்ல! ஒரு காலத்தில் ‘இந்திராவே இந்தியா இந்தியாவே இந்திரா ‘என்று இருந்தது போல "தமிழ்நாடே திமுக.திமுக தான் தமிழ்நாடு" என்கிற மாதிரி ஆட்சி அதிகாரத்தின் பாசிசப் போக்கில் தமிழ்நாடு இன்று சிக்கி இருக்கிறது. 2/2 facebook.com/share/p/1Eg2PZ

Oct 30, 2025 இந்தியாவின் துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழக வருகையின் போது தான் அவரை மதுரையில் சந்தித்ததாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளார்

 இந்தியாவின் துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழக வருகையின் போது தான் அவரை மதுரையில் சந்தித்ததாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளார். ண்மையில் சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் எனக்கு 40 வருடங்களாக தெரிந்தவர். சமகால அரசியலில் இருவரும் ஈடுபட்ட காலத்திலிருந்து நாங்கள் அறிமுகமானவர்கள். அவர் தூத்துக்குடி 

வ உ சி கல்லூரியில் படித்த காலத்திலிருந்து அவரை நன்கு அறிவேன். இப்போது கோவை திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சிபி ராதாகிருஷ்ணன் வருகையின் போது அவரைச் சந்திக்க நான் ஏன் போகவில்லை என்றால் எனக்கு இந்தக் கூட்ட நெரிசலில் அங்கு நிலவும் அரசாங்க புரோட்டாக்காலின் படி காவல்துறையினுடைய கண்காணிப்பின் கீழ் அந்த நெருக்கடியில் சென்று அவரை சந்திப்பது என் மனதிற்கு உகந்ததாக இல்லை. அவர் தனிப்பட்ட நண்பர் என்கிற முறையில் அவரை எப்போதும் சந்திக்க உரிமை உள்ளவன் என்ற முறையில் இந்தக் கூட்டங்களில் சென்று சிக்கி தவிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கருதுகிறேன். அவர் துணை ஜனாதியாக வெற்றி பெற்ற போது தனிப்பட்ட முறையில் எனது டில்லி சென்று வாழ்த்துக்களைச் சொன்னேன் அவரது பதவி ஏற்பின் போதும் கூட நான் டெல்லியில் இருந்தேன். அப்படியான ஒரு நண்பராக அவருடன் பழகி இருப்பதால் இந்தக் கூட்ட நெரிசலில் வரிசையில் நின்று சந்திப்பது பொருத்தமாக இருக்காது என்கிற முறையில் நான் செல்லவில்லை. அது வேறு விஷயம்! முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நாகரிகமாக சரிதான். சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தால் இந்துத்துவா தமிழகத்திற்குள் வந்து விடும் என்று நீங்களும் உங்கள் தங்கைக் கனிமொழியும் அவர் ஒரு தமிழர் என்று கூடப் பாராமல் அவருக்கு தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தீர்களே!. இப்போது போய் எதற்கு அவரிடம் பேசுகிறீர்கள்? அதில் பெருமையாக சி பி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்திய துணை ஜனாதிபதியாக வந்திருக்கிறார் என்று வேறு அசடு வழிகிறீர்கள். ஒரு காலத்தில் என்டி ராமராவ் காங்கிரசுக்கு முற்றிலும் எதிராக இருந்தபோதிலும் கூட அவர் ஆந்திரா மண்ணைச் சார்ந்த நரசிம்மராவ் பிரதமராக வந்த போது அவரை ஆதரித்தாரே! அந்த நாகரிகம் கூட உங்களுக்கு நமது மண்ணின் மைந்தரான சி பி ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுக்கும் போது அந்தத் தமிழ் மண் பாசம் வரவில்லையே! உங்களுக்கு அதிகாரப் பாசம் தவிர வேறு எந்த பாசமும் கிடையாது என்று நன்றாக தெரியும். தமிழகத்தின் மைந்தன அப்துல் காலாமை திமுக இரண்டாம் முறையாக குடியரசு தலைவராக வர திமுக சம்மதிக்க வில்லை . இப்போது சிபி ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு பயணமாக விஜயம் செய்துள்ளார். உங்களின் வாதங்களின் படி அவர் ஏதாவது இந்துத்துவக் கருத்துரைகளைப் பரப்புவதற்காக இங்கு வந்திருக்கிறாரா?அது சம்பந்தமாக ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறாரா? உங்களது தத்துவமும் கொள்கைகளும் இப்படித்தான் யாரையும் மதிக்காத பித்தேறிய வறட்டு வாதங்களால் நிரம்பிக் கிடக்கிறது. இந்துத்துவா ஒற்றை தன்மை என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதை விட லஞ்ச லாவண்யம் ஊழலற்ற ஆட்சியை நிர்வாகத்தை திறமையாக நடத்த தெரியாத நீங்கள் உங்கள் குடும்ப நலச் சொத்துக்களையும் உங்களது விசுவாசிகளை மட்டுமே காப்பாற்றிக் கொளவதற்கு ஆட்சி அதிகாரத்திற்கு வரும் நீங்கள் இந்துத்துவா இந்துத்துவம் என்று அதை எதிர்ப்பதாகக்கூறிக் கொண்டே உங்களது தவறுகள் மோசடிகள் ஏமாற்றுகள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மக்களின் முன்பு மூடி மறைக்கிறீர்கள். நேற்றுக் கூட உள்ளாட்சித் துறைகள் முழுக்க ஊழல் மலிந்து விட்டது என்று ஊடக அரசியல் சமூக நல ஆய்வுகள் கூறும் போது அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து எங்கள் தமிழ் மண்ணைச் சேர்ந்தவர் என்று பீற்றிக் கொள்கிறீர்கள். அவருக்கு ஓட்டு போடுகிற போது ஓராயிரம் மறுப்புக்கருத்துக்களைச் சொல்லி ஓட்டு போடாமல் இருந்துவிட்டு இப்போது போய் அவரைச் சந்திப்பதாக சொல்லி எங்கள் தமிழ் மண்ணைச் சேர்ந்தவர் என்று புளங்காகிதம் அடைகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் ஆட்சியில் பங்கேற்றீர்கள். அப்போது எல்லாம் உங்களுக்கு இந்துத்துவா தெரியவில்லையா? கலைஞர் கைதின் போது எந்தப் பிணைப்பெட்டிஷனும் போடாமல் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆணையிட்ட வாஜ்பாயும் அத்வானியும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அதேபோல் உடல்நிலை சரியில்லாத போதிலும் முரசொலி மாறன் அவர்களை இலக்கா இல்லாத மத்திய மந்திரியாக தங்கள் ஆட்சியில் நியமித்தார்களே அதுவும் மறந்து விட்டதா? அவரை வாஜ்பாய் அமெரிக்க சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அவர் இறந்த போது வாஜ்பாய் அவர்கள் அவரது அடக்கத்திற்காக பென்ட் நகர் இடுகாடு வரை மாலை நேரத்தில் வந்திருந்து மரியாதை செலுத்தினார்.1/2
Quote
M.K.Stalin
@mkstalin
நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு. @CPR_VP அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! Met our Hon’ble Vice-President, Thiru @CPR_VP,

Oct 30, 2025 நாளை, 31-10-2025 தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் குடந்தை,

 நாளை, 31-10-2025 தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் குடந்தை, காந்தி பூங்கா அருகே நமது தலைவர் திரு.

அவர்களின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நாளை நடைபெறுகிறது. உடன் வருகிறேன். நண்பர்களே சந்திப்போம். #தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்

Uploading: 102013 of 102013 bytes uploaded.


Oct 30, 2025 காமராஜரின் உற்ற நண்பர்

 காமராஜரின் உற்ற நண்பர்

அரசியல் களத்தில் பல பதவிகளை கொண்டவர். நேர்மையாக, எளிமையாக வாழ்ந்தவர் ராகி. #ராகிருஷ்ணசாமிநாயுடு After 50 years, the #RK name remains undiminished.



Oct 31, 2025 போராடிக் கிடைக்கக் கூடிய தோல்வி கூட கொண்டாடப்படக் கூடிய வெற்றிதான் என்னை பொறுத்தவரை….

 போராடிக் கிடைக்கக் கூடிய தோல்வி கூட கொண்டாடப்படக் கூடிய

வெற்றிதான் என்னை பொறுத்தவரை…. எவ்வளவு ரணங்கள் இருந்தாலும் எவ்வளவு மன அழுத்தங்கள் இருந்தாலும் மூச்சு முட்ற அளவு கஷ்டங்கள் இருந்தாலும் லட்சிய பாதையில் தொடர்ந்து பயணப்படவே பிடிக்கிறது..... பயணங்கள் ஒருவித கஷ்டங்களை தந்தாலும் வந்த பாதை இல்லை என்றால் மாற்று பாதையில் பயணித்து லட்சிய கொள்கையை ரசிப்பதால் பயணங்களையும் ரசிக்கிறோம்.. பயணங்கள் மட்டுமல்ல ரணங்களையும் மன அழுத்தங்களையும் கஷ்டங்களையும் ரசித்து கொண்டே செல்கிறோம் அதனால்தான் என்னவோ சோர்வென்பதே நமக்கில்லை... "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



Oct 31, 2025 Sardar Patel’s vision and the meaning of national unity today ….

 Sardar Patel’s vision and the meaning of national unity today ….

Of the many tributes to #SardarPatel on his 150th birth anniversary , these lines by Gopalkrishna Gandhi resonated particularly: “if the Republic of India has a spine in its life, it comes from Ambedkar’s resolve. If it has a glow in its life, it comes from Nehru’s light. But if it has an inner monitor, it comes from the veracity of Patel’s noble soul”. india was blessed to have such a trio at the helm during those turbulent years. Respect to the Iron Man of India



Oct 30, 2025 அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!

  அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!