Tuesday, July 26, 2016

சேது கால்வாய், பனாமா கால்வாய்

பனாமா கால்வாய் பழுதுபார்த்து, சீர்திருத்தி திரும்பவும் பயன்பாட்டுக்காக கடந்த 26.6.2016 அன்று திறந்துவிடப்பட்டுள்ளது.  பனாமா கால்வாயும், சூயஸ் கால்வாயும் பல போராட்டங்களுக்கு இடையில் தோண்டப்பட்டது.  இன்றைக்கு உலகத்தில் ஒற்றுமையின் சின்னமாக பனாமா திகழ்கின்றது என்று பனாமா அதிபர் வார்லா தெரிவித்துள்ளார்.  அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் இணைப்பது மட்டுமல்லாமல், உலக சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது. 1914ல், அமெரிக்கா பொறியாளர்களால் வெட்டப்பட்டது. இந்த கால்வாயை அமெரிக்கா, சீனா தன்னுடைய வணிகப் பயன்பாடுகளுக்காக அடிக்கடி பயன்படுத்துகின்றன. 2006ல் துவக்கப்பட்ட பழுதுபார்க்கும் பணிகள், 5.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சீர்திருத்தப்பட்டது.  ஆனால் 160 ஆண்டுகள் நிலுவையில் உள்ள சேது கால்வாய்த் திட்டத்திற்கு வாய்ப்பே இல்லாமல் புறக்கணிக்கப்படுவதில் என்ன நியாயம் உள்ளது.

http://www.thehindu.com/todays-paper/tp-national/expanded-panama-canal-is-now-open/article8776880.ece

 

 

No comments:

Post a Comment