Thursday, July 14, 2016

அரசியல்

வீதியில இறங்கி போராடுறவன் ஒரு சில பேராவது இருப்பதால மட்டும் தான் நம்மில் பல பேர் வீட்டுக்குள்ள இருந்து நிம்மதியா சாப்பிட முடியுது
"நாம உழைச்சாத்தான் நமக்குச் சோறு "
"நமக்கு ஏம்ப்பா அரசியல் , போராட்டமெல்லாம் ?"
இது வெகுளித்தனமான பேச்சா ....
உழைச்சா சோறு உண்டுன்னு உனக்கு உத்திரவாத படுத்தினது எது ?
உழைச்சா கூலி கொடுக்கனும்னு நிர்ணயம் பன்னினது எது ?
நீ செய்யிற வேலைக்கு கட்டாயமா இவ்வளவு ஊதியம் வாங்கணும்னு உனக்கு சொல்லி கொடுத்தது யாரு ?
மூனு வேள கஞ்சிக்கு மட்டும் இருபத்தினாலு மணி நேரமும் வேலை பாத்த அடிமை சமூகம் தான இது
இத மாத்தினது அரசியல் இல்லையா ? அந்த அரசியல தீர்மாணிக்கிறது போராட்டம் இல்லையா ?
"பெட்ரோல் விலைய திடீர்னு நூறு ரூபாய்க்கு ஏத்தாம , ஏன் எண்பது பைசா , ஒரு ரூபாய்னு ஏத்தனும் அரசு ? " இதுல அரசியல் இல்லையா ? நாம சாப்பிடுற அரிசியில இருந்து செத்தா போடுற கோடி துண்டு வரைக்கும் விலைய நிர்ணயிக்கிறது அரசியல் தான்
அரசியலை ஒதுக்கி வச்சிட்டு இங்க எதுவுமே கிடையாது. எல்லாமே அரசியல் தான்
''அரசியலில் நீங்கள் தலையிடாவிட்டால் 
அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும்.''தன்னுடைய சுயத்தையும் இழந்து இந்த சமூகத்திற்காக வீதியில் இறங்கி போராடுபவனை பாராட்டாவிட்டாலும் தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள் !
உலகை இயங்குவது இரண்டு... ஒன்று அறிவியல்... மற்றொன்று அரசியல்...
ஆளுமை இல்லாத தமிழக தலைவர்கள் ......
விழிப்புணர்வு இல்லாத தமிழக மக்கள் ......
தமிழர் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசு...
நாம் என்ன செய்யப்போகிறோம் ?....

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்